இலங்கையிலுள்ள மனித உரிமைச் செயற்பாடுகளை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். அங்கு தற்போதும் ஆபத்துக்கள் உள்ளன. அங்கு மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகின்றது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறைக்கு சுட்டிக் காட்டியுள்ளது. அவுஸ்திரேலிய அரசு கடந்த 8ஆம் திகதி மேற்கொண்ட அகதிகள் தொடர்பான சட்ட விதிகளின் மாற்றம் எமக்கு ஆழ்ந்த கவலை தோற்றுவித்துள்ளது.
இது 1967 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகதிகளின் உரிமைகளை மதிக்கும் விதிகளை முற்றாக மீறியுள்ளது என வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அவுஸ் திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் இவானுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு,
அவுஸ்திரேலிய அரசு கடந்த 8ஆம் திகதி மேற்கொண்ட அகதிகள் தொடர்பான சட்ட விதிகளின் மாற்றம் எமக்கு ஆழ்ந்த கவலை தோற்றுவித்துள்ளது. 1951 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அவுஸ்திரேலியாவின் சட்டவிதிகளையும் 1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகதிகளின் உரிமைகளை மதிக்கும் விதிக ளையும் அவுஸ்திரேலிய அரசின் தற்போதைய நடவடிக்கை முற்றாகவே மீறியுள்ளது.
இலங்கையிலும் ஆப்கானிஸ்தானிலும் நிலைமைகள் சீராகி வருவதால் அங்கிருந்து வரும் அகதி தஞ்சம் கோரும் மக்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதில்லை என்ற சட்டங்களை உடனடியாக நடை முறைக்குக் கொண்டு வருவதாக உங்களின் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் இரு நாடுகளினதும் மனித உரிமை செயற்பாடுகளை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அங்கு தற்போதும் ஆபத்துக்கள் உள்ளன. அங்கு மக்களுக்கு பாதுகாப்புகள் அற்ற நிலையே காணப்படுகின்றது.ஆனால் அவுஸ்திரேலிய அரசின் அறிவித்தலை நோக்கும் போது எதிர்காலத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மக்களின் அகதி களிற்கான விண்ணப்பங்களை நிராகரிக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.
சில விடயங்களில் (மீள்குடியேற்றம்) முன்னேற்றமான நிலைமை ஏற்பட்டுள்ள போதும் அங்கு மக்களுக்கு முழுமையான பாதுகாப்புகள் அற்ற நிலையே காணப்படு கின்றது. அங்கு வாழும் சில இன மக்கள் அகதி தஞ்சம் கோருவதற்கு தகுதியானவர்கள். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எதிர் கட்சி ஆதரவாளர்கள், உறுப்பினர்கள், ஊடக வியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஆகியோர் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றது. அவர்கள் கைது செய்யப்படுகின்ற னர். துன்புறுத்தப்படுகின்றனர்.
அரசை விமர்சிக்கும் ஊடக வியலாளர் கள் மீது தாக்குதல்களும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் அரசை விமர்சித்த ஊடக வியலாளர் காணாமலும் போயுள்ளார்.போர் நிறைவு பெற்று ஒரு வருடம் அண் மித்த நிலையிலும் அரசு அவசரகாலச் சட் டத்தை நீக்கவில்லை. அவசரகாலச் சட்டம் பாதுகாப்பு படையினருக்கு அதிக அதிகாரங் களை வழங்கி வருகின்றது.
விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்ப டும் 9 ஆயிரம் பேரை அரசு தடுத்துவைத் துள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை அரசு மோசமாக நடத்துவதையும் அவர்கள் துன்புறுத்தப்படுவதையும் நாம் எமது ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளோம். அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளில் சிறுவர்களையும் குழந்தைகளையும் தடுத்து வைப்பதும் 2005 ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்ட இடம்பெயரும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தை மீறிய செயலாகும். ஆசிய-பசுபிக் பிராந்திய நாடுகளில் பல நாடுகள் அகதிகளுக்கான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்லை.
எனவே அனைத்துலக சட்டங்களை மதிப்பதன் மூலம் அவுஸ்திரேலிய முன் உதாரணமாக விளங்க வேண்டும். இது தொடர்பில் நாம் உங்களுடன் மேல திக விவாதங்களை மேற்கொள்ள ஆவலாக உள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக