யாழ் பல்ககைலக்கழக முகாமைத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் பா.கருணாநிதி இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். வன்னியில் பூநகரியைச் சேர்ந்த இவர் விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பிலும் பாதிக்கப்பட்டவர்.
யுத்தம் காரணமாக தனது கல்வியை தொடர முடியாமல் தடைப்பட்ட இவர் பின்னர் நீண்ட காலம் வவுனியா தடுப்பு முகாமிலும் இருந்தவர்.
இவைகளால் மனநிலை பாதிக்கப்பட்ட இவரை அடையளம் கண்டு தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மீண்டும் கல்வியைத் தொடர பல்கலைக்கழக்கத்திற்கு வந்த கருணாநிதி தான் சுகம் அடைந்திருப்பதாக கூறியுள்ளார்.
தனக்கு குறித்த மனநிலை பாதிப்பு இருப்பதை அறிந்து கொண்ட அவர் கடந்த 4 மாதங்களாக கல்வியை கற்று வந்தார். அவரது மனநிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையிலிருப்பது தெரிந்துள்ளது. இன்று காலை நாச்சிமார் கோயிலடியில் உள்ள தன் அறையில் வைத்து கருணாநிதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக