வியாழன், 27 மே, 2010

காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் மெளனம் காப்பது ஏன்?

யுத்தம் முடிபடைந்து விட்டதாக அரசாங் கம் அறிவித்து ஒரு வருடமாகிவிட்ட நிலையி லும் காணாமல் போனோர் மற்றும் கடத்தப் பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட் டியுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் காணாமல் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர் கள் கலந்து கொண்டதுடன் காணாமல் போனோரின் புகைப்படங்களையும் தாங்கியிருந்தனர். இதன்போது உறவினர்கள் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட தமது உறவுகளை விடுவிக்கக் கோரி கண்ணீர் மல்கக் கத றியழுததுடன் அவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறும் ஜனாதிபதியை மன்றாடி வேண்டிக் கொண்டனர்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துக் கூறிய ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேம ரத்ன, தங்களுக்கு இவ்வாறான விடயங்க ளை வெளிக்கொணர்வதில் அச்சமில்லை எனவும் அச்சப்படுமளவுக்குத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் குறிப்பிட்டார்.

தாம் காணாமல் போனோரைக் கண்டு பிடிப்பதில் தொடர்ந்து இவ்வாறான முயற்சி களை மேற்கொள்வோம் எனவும் எக்காரணம் கொண்டும் இதிலிருந்து பின்வாங்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டார். இலங்கையில் வெடித்துள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமலும் தமிழ் மக்களுக்குச் சமவுரிமையைப் பெற்றுக் கொடுக்காமலும் அரசு செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள முன் னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக் கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனாலும் அங்கு சிரட்டைகளில் மோதிரம் செய்வதற்கே பழக்கப்படுகின்றனர். இதுவா புனர்வாழ்வு? எனவும் உதுல் பிரேமரத்ன கேள்வி எழுப்பினார்.

மனித உரிமை விடயங்களில் அளவுக்கு அதிகம் தலையீடாதீர் அமெரிக்காவுக்கு பீரிஸ் ஆலோசனை கூறுகிறார்

இலங்கையில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்துத் தேவையின்றிக் கவனம் செலுத்துவதை விடுத்து, இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான வர்த்தக  மற்றும் ஏனைய வாய்ப்பு களில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண் டும் என இலங்கை வெளி விவ கார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆலோசனை  வழங்கும் பாணியில் தெரிவித் துள்ளார். வாஷிங்ரனில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கற்கைநெறிகளுக்கான நிலையத் தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்று கையிலேயே அவர் இதனைத் தெரிவித் தார்.
ஜி.எல்.பீரிஸ் அங்கு மேலும் தெரிவித் தவை வருமாறு:
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒருவருட காலத்துக்குப் பின்னர், அமெ ரிக்க  இலங்கை உறவுகளை வலுப்படுத் துவதற்கான  விடயங்களில், அமெரிக்கா அக்கறை காட்டுவதை நாங்கள் எந்த வகை யிலும் எதிர்க்க வில்லை. இதனை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இது குறித்து நாங் கள் முறையிடவில்லை.  ஆனால் மனித உரிமை விடயங்களில் அளவுக்கு அதிக மாக அக்கறை காட்டுவதை இயன்றளவு குறைத்துக்கொள்ளுங்கள்.
இதேவேளை, அமெரிக்காவுடனான எமது  உறவு ஒரு பரிமாணத்தை மாத்திரம் கொண்டதாக அமையக்கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செய்யக்கூடிய வேறு பல விடயங்கள் உள் ளன.
 யுத்தத்தை வெல்வது போன்று சமாதானத்தை வெல்வதும் மிகக்  கடினமான விடயம்.
அதேவேளை, யுத்தகால அவசரகாலச் சட்டத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு                வந்தமை, அதிகளவு சுதந்திரத்தை வழங்கி யுள்ளமை, தேசிய நல்லிணக்க ஆணைக் குழுவை அமைத்துள்ளமை போன்ற இலங்கை அரசின் நடவடிக்கைகளை அங் கீகரித்துப் பாராட்டவேண்டும்.
மிகக் குறுகிய காலத்துக்குள் இலங்கை யில் நிகழ்ந்துள்ள மாற்றங்களின் அளவை அமெரிக்கா அங்கீகரிக்கவேண்டும்.
இலங்கையில் புதிய நம்பிக்கையு ணர்வு காணப்படுகின்றது. முழு நாடும் புத்துயிர் பெறுகின்றது. பெருமளவில் உல் லாசப் பயணிகள் வரத் தொடங்கியுள் ளனர்.  என அவர் குறிப்பிட்டுள் ளார்.

மனித உரிமை விடயங்களில் அளவுக்கு அதிகம் தலையீடாதீர் அமெரிக்காவுக்கு பீரிஸ் ஆலோசனை கூறுகிறார்

இலங்கையில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்துத் தேவையின்றிக் கவனம் செலுத்துவதை விடுத்து, இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான வர்த்தக  மற்றும் ஏனைய வாய்ப்பு களில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண் டும் என இலங்கை வெளி விவ கார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆலோசனை  வழங்கும் பாணியில் தெரிவித் துள்ளார். வாஷிங்ரனில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கற்கைநெறிகளுக்கான நிலையத் தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்று கையிலேயே அவர் இதனைத் தெரிவித் தார்.
ஜி.எல்.பீரிஸ் அங்கு மேலும் தெரிவித் தவை வருமாறு:
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒருவருட காலத்துக்குப் பின்னர், அமெ ரிக்க  இலங்கை உறவுகளை வலுப்படுத் துவதற்கான  விடயங்களில், அமெரிக்கா அக்கறை காட்டுவதை நாங்கள் எந்த வகை யிலும் எதிர்க்க வில்லை. இதனை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இது குறித்து நாங் கள் முறையிடவில்லை.  ஆனால் மனித உரிமை விடயங்களில் அளவுக்கு அதிக மாக அக்கறை காட்டுவதை இயன்றளவு குறைத்துக்கொள்ளுங்கள்.
இதேவேளை, அமெரிக்காவுடனான எமது  உறவு ஒரு பரிமாணத்தை மாத்திரம் கொண்டதாக அமையக்கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செய்யக்கூடிய வேறு பல விடயங்கள் உள் ளன.
 யுத்தத்தை வெல்வது போன்று சமாதானத்தை வெல்வதும் மிகக்  கடினமான விடயம்.
அதேவேளை, யுத்தகால அவசரகாலச் சட்டத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு                வந்தமை, அதிகளவு சுதந்திரத்தை வழங்கி யுள்ளமை, தேசிய நல்லிணக்க ஆணைக் குழுவை அமைத்துள்ளமை போன்ற இலங்கை அரசின் நடவடிக்கைகளை அங் கீகரித்துப் பாராட்டவேண்டும்.
மிகக் குறுகிய காலத்துக்குள் இலங்கை யில் நிகழ்ந்துள்ள மாற்றங்களின் அளவை அமெரிக்கா அங்கீகரிக்கவேண்டும்.
இலங்கையில் புதிய நம்பிக்கையு ணர்வு காணப்படுகின்றது. முழு நாடும் புத்துயிர் பெறுகின்றது. பெருமளவில் உல் லாசப் பயணிகள் வரத் தொடங்கியுள் ளனர்.  என அவர் குறிப்பிட்டுள் ளார்.

திங்கள், 24 மே, 2010

ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இலங்கை விவகாரம் ஆராயப்படும் - அரசு, புலிகள் மீது குற்றச்சாட்டு

ஜூன் மாத நடுப்பகுதியில் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து பகிரங்க விவாதம் நடத்தப்படவுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இடம்பெறவுள்ள இலங்கை விவகாரம் குறித்த விவாதத்திற்கு முன்னோடியாக ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் பாதுகாப்பு பேரவையிடம் அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார்.

இந்த அறிக்கையில் வன்னி யுத்தத்தின்போது இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் இழைத்த போர்க்குற்றங்கள் பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளன.இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதேவேளை யுத்தத்தின் கொடூரத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்ற இளம் பெண்களின் தலைமுடிகளை விடுதலைப்புலிகள் வெட்டி விட்டதாகவும், இவ்வாறு தலை முடிவெட்டப் பட்ட நிலையில் இடம் பெயர் முகாம்களில் தஞ்சமடைந்த பெண்களை படையினர் வித்தியாசமான முறையில் நடத்தியதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேநேரம் போரில் இளைஞர் யுவதிகளை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கொள் வதற்காக,மிக இளவயதுத் திருமணங்களை பெற்றோர் நடத்திவைக்கும் துரதிர்ஷ் டத்துக்கு ஆளாகியதாகவும் அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு வர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம் தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளது. இதேவேளை சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டவர்களின் பட்டியலில் இருந்து பிள்ளை யான் மற்றும் கருணா தரப்பினரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.எனினும் கருணாவின் ஆதர வாளரான இனியபாரதியின் பெயர் சிறுவர் போராளிகளை இணைத் துக்கொண்டவர்களின் பட்டியலில் தொடர்ந்தும் இடம் பெற்றுள்ளது.

இவற்றின் மத்தியில் அடுத்த மாத நடுப்பகுதியில் ஐ.நா.பாதுகாப்பு பேரவை கூடும்போது இலங்கை விவகாரம் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வியாழன், 20 மே, 2010

போர்க் குற்றங்கள்: புதிய வீடியோ மீண்டும் லண்டன் சனல்-4இல்ஆதாரங்கள் உண்டு என்கிறது தொலைக்காட்சி


இலங்கையில், இராணுவத்தினரிடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் என்று கருதக்கூடிய தமிழ் இளைஞர்கள் பலர் ஆடைகள் களையப்பட்ட நிலையில், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, பதுங்குகுழி ஒன் றுக்குள் அமர்ந்திருப்பதையும் இராணுவத்தினர் அவர்களைச் சூழ்ந்த
இலங்கையில், இராணுவத்தினரிடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள்  என்று கருதக்கூடிய தமிழ் இளைஞர்கள் பலர்
ஆடைகள் களையப்பட்ட நிலையில், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, பதுங்குகுழி ஒன் றுக்குள் அமர்ந்திருப்பதையும்
இராணுவத்தினர் அவர்களைச் சூழ்ந்து ஆயுதங்களுடன் நிற்பதையும்  காட்டும் வீடியோக் காட்சி ஒன்றைப் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி காண்பித்துள்ளது.
இதே தொலைக்காட்சி, கடந்த வருடத்தில் தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில், இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படும் வீடியோக்காட்சியை வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ புகைப்படக் காட்சிகள் உண்மையானவை என்பதை ஆதாரபூர்வ மாக, விஞ்ஞான ரீதியாக, நிரூபிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் "சனல்  4' அறி வித்திருக்கின்றது.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இர கசிய விசாரணைகளின்போது இந்த ஆதா ரங்கள் கிடைத்துள்ளன. இராணுவத்தினர் அளித்த வாக்குமூலங்கள் யுத்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பனவாக அமைந்துள்ளன என்றும் "சனல்  4' தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சனல்4  இந்த வீடியோக் காட்சிகளை விசேட ஒளிபரப்பாக வெளியிட்டது.
சனல் 4 தொலைக்காட்சி நிகழ்சியில், மேற்கோள் காட்டப்பட்ட இந்த இராணுவ அதிகாரியின் உண்மையான குரல் ஒலி பரப்பப்படவில்லை. அவரது உருவம் தெளி வாகக் காட்டப்படவில்லை.
இந்த நிகழ்ச்சியில் அவரது குரலுக்குப் பதிலாக வேறொரு குரல் ஒலிக்கவைக் கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரனின் இளையமகனான 13 வயது டைய பாலச்சந்திரன் அவரது மெய்க்காப் பாளர்களுடன் இலங்கைப் படைகளிடம் சரணடைந்தபோது,அவரது தந்தை எங்கே என்று விசாரிக்கப்பட்ட பின்னர், சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும்  இந்த இராணுவ அதிகாரி கூறினார். 
இந்த விடயத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபையினதும், செயலாளர் நாயகத்தினதும் செயற்பாடுகள் நம்பிக்கையளிக்கக் கூடிய வையாக அமையவில்லை என்று சாடி யுள்ள "சனல்  4'  இதுபற்றி மேலும் தெரி வித்துள்ளவை வருமாறு:
2009 ஓகஸ்டில் சீருடை அணிந்த இலங்கை இராணுவத்தினரால் தமிழர்கள் நெற்றிப் பொட்டில் சுட்டுக்கொல்லப்படு வதைக் காண்பிக்கும் வீடியோ ஆதாரங் கள் கிடைத்தன.
ஐக்கிய நாடுகள் சபை  இது உண்மை யானது என உறுதி செய்தது.
அனைவரையும் கொலை செய்ய உத்தரவு!
மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தர வின் பேரிலேயே இவ்வாறான கொலை கள் இடம்பெற்றன என இலங்கை இராணு வத்தின் மூத்த தளபதியொருவரும்,  இராணு வச் சிப்பாயும் அப்போது எமக்குத் தெரி வித்தனர்.
""எமது தளபதி அனைவரையும் கொலை செய்யுமாறு உத்தரவிட்டார். நாங்கள் அனைவரையும் கொன்றோம்'' என முன் னரங்குகளில் பணிபுரியும் சிப்பாய் ஒருவர் தெரிவித்தார்.
""நிச்சயமாக அனைவரையும் தீர்த்துக் கட்டிவிடுமாறே உத்தரவு பிறப்பிக்கப்பட் டிருக்கும்'' என இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரியொருவரும் தெரிவித்தார்.
தீவிரபோக்குடையோர்
சுட்டுக்கொல்லப்பட்டனர்
""தீவிர போக்குடைய எவரையும் உயி ருடன் வைத்திருக்க விரும்பினோம் என நான் கருதவில்லை. இதன் காரணமாக அவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறான உத்தரவுகள் மேலிடத்திலிருந்தே வந்தன என்பது தெளிவான விடயம்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றன எனக் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும், இலங்கை அரசு இதுவரை சுயாதீன விசாரணையைத் தவிர்த்து வந்துள்ளது.
எனினும்,  யுத்தக்குற்றங்கள் இடம் பெற்றமைக்கான தடயங்கள் தொடர்ந்தும் கிடைக்கின்றன.
இலங்கை அரசு விடுதலைப் புலி களுக்கு எதிராகப் பெற்ற வெற்றியின் முக்கியத்துவம் காரணமாக, கிளர்ச்சிகளை எதிர்கொள்ளும் ஏனைய நாடுகளும் இலங்கை அரசின் முன்மாதிரியைப் பின் பற்ற முயல்கின்றன. சர்வதேச சட்டத்தை இலங்கை அரசு மீறியது என சர்வதேச வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர் வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
இலங்கை அரசு மோதலில் ஈடுபட்ட வர்களையும், ஈடுபடாதவர்களையும் பிரித் துப் பார்க்கத் தவறியதன் மூலமும், பொது மக்களைக் கொலைசெய்தது மற்றும் அவர் களுக்குத் துயரங்களை ஏற்படுத்தியதன் காரணமாகவும் சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்குப் பெரும் பங்கத்தை ஏற் படுத்தியது என ஐக்கிய நாடுகளின் முன் னாள் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் லண்டனில் இடம்பெற்ற நிகழ்வில் குறிப்பிட்டார் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.            

எதிர்பார்க்க எதுவும் இருக்குமா...?
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வுகாணுமாறு, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் நேரடியாக வற்புறுத்தப்பட்டுள்ளதாகத் தக வல் வெளியாகி உள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ் ரானில் நடைபெற்ற ஜி  15 நாடுகளின் உச்சி மாநாட் டின்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா, அமைச்சர் பீரிஸிடம் இது விடய மாகப் பேசினார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
சகல சமூகத்தினரும் சம பங்களிப்புச் செய்யக் கூடிய அரசியல் தீர்வு ஒன்று தேவை என்பது குறித்தே இந்திய அமைச்சர் பிரஸ்தாபித்ததாகவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
இலங்கையின் சிறுபான்மை இனத்தவரான தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு அவசரமாகத் தீர்வு காணவேண்டும் என்ற எமது விருப்பத்தை இலங்கை யிடம் வற்புறுத்தியுள்ளோம் என்று அமைச்சர் கிருஷ் ணாவே தெரிவித்திருக்கிறார்.
மேற்கண்ட தகவல்களில் இரண்டு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவையாகக் கருதக் கூடியவை. இனப்பிரச்சினைக்கு அவசரமாகத் தீர்வு காணப்படவேண்டும் என்று இந்தியா வலியு றுத்தி இருப்பது ஒன்று. சகல சமூகத்தினரும் சமமா கப் பங்களிப்புச் செய்யக்கூடிய அரசியல் தீர்வு குறித்து இந்தியா ஆராய்ந்துள்ளதான தகவல் இரண்டாவது.
இவற்றின் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் இந்தியாவுக்குச் செல்வார் என்ற செய்தியும் கிடைத்திருக்கிறது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண் டும் என்பதில் இந்தியா காட்டும் கரிசனை வரவேற் கத்தக்கது. ஆனால் இலங்கை விரைவான தீர்வு ஒன் றைக் கொண்டு வருவதில் ஆர்வம் கொண்டுள்ளது என்பதற்கான சமிக்ஞை எதுவும் இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் குழுக்களை நியமித்து அவற்றில் காலத்தை இழுத்தடித்து இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சர்வதேச சமூகம் மற்றும் அரசாங்கங்களின் எதிர்பார்ப்பின் வேகத்தைத் தணித்து விடுவதும்
அதன் பின்னர், தனக்குச் சாதகமான நிலையை உருவாக்குவதற்கு வழமை போன்று பல ""கயிறு திரிப்புகளை'' அவிழ்த்து விடுவதும்
வேகம் தணிந்த பின்னர் வெறும் பெயருக்குத் தான் நினைத்த உப்புச் சப்பற்ற தீர்வு ஒன்றை நாடா ளுமன்றத்தில் சமர்ப்பித்து தனக்குள்ள ""அசுர'' வாக் குப் பலத்தைப் பயன்படுத்தி அதனை நிறைவேற்றி விட்டு
எமது நாட்டு மக்களின்  அவர்களின் பிரதிநிதி களின்  பெருவிருப்பத்துடன் இனப் பிரச்சினைக்கு "இந்தத் தீர்வு' சட்டமாக்கப்பட்டுள்ளது. இதுவே நாட் டுக்கு உகந்தது என்று கூறி தமிழர்களுக்குச் சம அந் தஸ்தோ, சுயாட்சி அதிகாரமோ இல்லாத வெறும் அர சியல் சக்கை ஒன்றை இலங்கை அரசு ஒப்புக்குக் காட்டிக் கொள்ளும்.
இந்தியாவைத் திருப்திப்படுத்தும் பொருட்டு அங்கு நடைமுறையில் உள்ள ஆகக் குறைந்த அரசியல் அதிகாரம் கொண்ட அமைப்புக்குப் புதிய பெயர் சூட்டி முலாம் பூசிக்காட்டவே இலங்கை அரசு முயலுமென நிறையவே எதிர்பார்க்கலாம்.
இதனைவிட வேறு எந்த விதத்திலும் தமிழ் மக் களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் விதத்தில் அவர்களும் இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்று என்பதனை ஏற்றுக் கொண்டு திருப்தி தரக்கூடிய போக்கு எதுவும் மஹிந்த அரசிடம் இருந்து தென்படவில்லை.
இத்தகையதொரு பின்னணியில் இந்தியா விரும் பும் சிறிதளவு நியாயமுள்ள தீர்வைத்தானும் இலங்கை உருவாக்குமா என்பது  தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் சந்தேகமாகவே உள்ளது.
இந்தியா தானும்  தனது நாட்டில் உள்ளது போன்று அரைச் சமஷ்டி அரசியல் முறைமையையே ஆகக் கூடியதாக வலியுறுத்தும் என எதிர்பார்க்கலாம். அதற்கு மேல் அரை சென்ரி மீற்றர் கூட அதிகமாகச் சிபார்சு செய்யும் என்று  எதிர்பார்க்க முடியாது.
இலங்கையில் பூரண சமஷ்டி அமைப்பு ஒன்றை, உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கு மாறு இலங்கையை வலியுறுத்துமானால் ஏற்கனவே அங்குள்ள மாநிலங்கள் ""தொந்தரவு கொடுக்கும்'' என்ற அச்சம் இந்திய மத்திய அரசிடம் உண்டு.
ஆகவே இலங்கைத் தமிழ் மக்களின் உரிமை களை வழங்குவது குறித்த இலங்கை  இந்தியப் பேச்சுக்கள் தமிழர்களின் உண்மையான, முழுமை யான அரசியல் உரிமைகளை வழங்க வகை செய்யும் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறுவதற்குரிய சாதக மான ஏதுக்கள் 

புதன், 19 மே, 2010

றோவின் பிரதான அலுவலகம் கொழும்பில் இயங்கி வருகிறது! - புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பு

இந்திய மத்திய அரசாங்கத்தின் உளவுத் துறையான றோ அமைப்பின் இலங்கைக் கான பிரதான அலுவலகம் கொழும்புக் கோட்டைக்கு அருகில் உள்ள மிக முக்கிய அரச நிறுவனத்தின் கட்டடத்திலேயே இயங்கி வருவதாக அரச புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் இந் தக் கட்டடத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதுடன் இதன்போது றோ அமைப்பின் அலுவலகத்தில் இருந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட நபரின் சடலம் சம்பவ தினத் திற்கு அடுத்த தினம் விசேட விமான மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இலங்கையின் பாது காப்பு விவகாரம் தொடர்பான ஆய்வாளர் ஒருவர், வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவு ஒன் றின் அலுவலகம் இலங்கையில் உள் நாட்டு விவகாரங்களில் முன்னெடுக்கப்படும் கட்ட டம் ஒன்றில் இயங்கி வருவது இலங்கையில் மாத்திரமே எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது இலங்கையின் இறையாண் மைக்குப் பாரிய பாதிப்பு எனக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையின் அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பைப் பெறு வது தொடர்பாகவும் அவர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

திங்கள், 17 மே, 2010

வித்தியசமன நவ(அ)நாகரிகம்

  STYLE லு ன்ன STYLE தான் நான் கம்பி குத்தின Style லு தான்....................


 
.எப்படி எல்லம் யோசிக்கிறாங்கப்ப............
                        STYLE லு ன்ன STYLE தான் நான் கம்பி குத்தின Style லு  தான்நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வின் நேரடி ஒளிபரப்பு!


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வு, இன்று மே மாதம் 17 திகதி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகிறது
இவ் ஆரம்ப நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை எமது இணையத்தளமாகிய www.govtamileelam.org  ஊடாக ஒளிபரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறோம்.
இவ் ஒளிபரப்பு பிலடெல்பியா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பிப்பதால் ரொறன்ரோ நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், பிரித்தானியா நேரப்படி மாலை 6 மணிக்கும், ஐரோப்பிய நேரப்படி மாலை 7 மணிக்கும் ஒளிபரப்பு ஆரம்பமாகும்.  
வெளியீடு: அனைத்துலகச் செயலகம்
தொடர்புகளுக்கு: info@govtamileelam.org

ஆசிய மனித உரிமைக் குழு மீது இலங்கை அரசு கடும் சீற்றம்

ஆசிய மனித உரிமை ஆணைக் குழுவின் விமர்சனங் களுக்கு அடி பணிய வேண்டிய அவசியம் கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு தொடர்பில் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள கருத்துக் கள் தொடர்பில் குழப்பமடைய வேண்டிய அவசியம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறி யதாவது,

மக்கள் விருப்பங்களுக்கு முக்கி யத்துவம் அளிக்கப்படுமே தவிர பக்க சார்பான சர்வதேச அமைப் புக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது.தனிப்பட்ட நோக்கங்களை அடிப் படையாகக்கொண்டு சில வெளி நாட்டுச் சக்திகள் விமர்சனங்களை வெளியிட்டுவருகின்றன.

இவ்வாறான விமர்சனங்களு க்கு மத்தியிலே யுத்தம் முன்னெடுக் கப்பட்டு வெற்றி கொள்ளப்பட்டது இலங்கை ஓர் இறைமை உடைய நாடு என்பதனை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். நல்லநோக்கங்களுக்காகவே இந்த ஆணைக்குழு நிறுவப்பட் டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களை வெளியிடக் கூடிய சுதந்திரம் ஆசிய மனித உரி மைகள் ஆணைக் குழுவிற்கு காணப் படுவதாக அவர் தெரிவித்துள் ளார்.சர்வதேச அழுத்தங்களை திசை திருப்பும் நோக்கல் உண்மையை கண்டறியும் ஆணைக் குழு நிறுவப் பட்டதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந் தமை குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 16 மே, 2010

மஹிந்த அரசின் புதிய அறிவிப்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகம்! காலத்தை இழுத்தடிக்கும் பம்மாத்து என அரியநேத்திரன் காட்டம்


இனப்பிரச்சினைக்கான அடிப்படைகளை ஆராய்ந்து தேசிய நல்லிணக்கம் காண்பதற்காக அரசு நியமிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நல்லி ணக்க ஆணைக் குழு, தமிழ்மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் நாடகத் தின் ஓர் அங்கம். அது ஒரு பம்மாத்து ஏற்பாடு. காலத்தை இழுத்தடிக்க

யாழ்ப்பாணம்,may 16
இனப்பிரச்சினைக்கான அடிப்படைகளை ஆராய்ந்து தேசிய நல்லிணக்கம் காண்பதற்காக அரசு நியமிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நல்லி ணக்க ஆணைக் குழு, தமிழ்மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் நாடகத் தின் ஓர் அங்கம். அது ஒரு  பம்மாத்து ஏற்பாடு. காலத்தை இழுத்தடிக்க எடுத்துள்ள நடவடிக்கையாகவே இந்தக் குழுவை நோக்கவேண்டியுள்ளது.
 இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சாடுகின்றார்.
பிரச்சினைகளின் அடிப்படைகளை ஆராய்ந்து தேசிய நல்லிணக்கம் காண 7பேர் கொண்ட ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கவுள்ளார் என்று அமைச் சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துத் தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு நேற்று உதயனுக்குத் தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் தெரி வித்தவை வருமாறு: இலங்கை சுதந்திரம் அடைந்தாகாக கூறப்படும் 1948முதல் கடந்த 61வருடகாலமாகபல்வேறு ஒப் பந்தங்களை தமிழ்மக்களுடன் செய்து கொண்ட தெற்குத் தலைமைகள், இப் போது தமிழர் பிரச்சினை குறித்து ஆராய ஆணைக்குழு நியமிக்க முன்வருவது வேடிக்கையான விடயமாகும்.
தந்தை செல்வா  பண்டா ஒப்பந்தம், தந்தை செல்வா  டல்லி ஒப்பந்தம் என இரு ஒப்பந்தங்கள் பிரதான இரு கட்சி களுடன் செய்யப்பட்டன. அதன் பின்னர் திம்புப் பேச்சுவார்த்தை, இலங்கை  இந் திய ஒப்பந்தம், விடுதலைப் புலிகளுக் கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், தன்னாட்சி அதி காரசபை, சுனாமி மீள் கட்டமைப்பு உடன் பாடு, அனைத்துக்கட்சி தெரிவுக்குழு, நிபுணர்குழு என காலத்துக்குக் காலம் தமி ழர் பிரச்சினைகள் தொடர்பான எத்த னையோ உடன்பாடுகள் வந்து போயின.
கடந்த 61வருடகாலத்தில் வந்துபோன அந்த உடன்பாடுகளின் மூலம் தமிழர் பிரச்சினைக்குரிய மூல காரணத்தை கண் டறிய முடியாத அரசு, இப்போது புதிதாக              தமிழர் பிரச்சினையை ஆராய்வதற்கென நல்லிணக்க ஆணைக்குழு நியமிப்பது என்பதும் பம்மாத்து.
காலத்தை இழுத்தடிக்கவும் இந்தியா வையும் சர்வதேசத்தையும் ஏமாற்றவும் தமிழர்களை ஏமாற்றவும்தான் நல்லிணக்க ஆணைக்குழுவை அரசு நியமிக்கின்றது. இந்த ஆணைக்குழுவை நியமித்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு கிடைக்கும் என்பது கேள்விக்குரிய, நகைப்புக்குரிய விடயமே.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் அரங்கேற்றப்படும் நாடகம்தான் இந்த ஆணைக்குழு என்று உறுதியாகக் கூறலாம்.
இந்த ஏமாற்றுச் சதியில் தமிழ்மக்களை வீழ்த்த முடியாது என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும். இத்தகைய ஏமாற்றுத் திட்டங்களை நிறுத்தி மிகவும் பிரச் சினைக்கு விரைந்து தீர்வு ஒன்றை முன் வைக்க அரசு முன்வரவேண்டும்என்றார் அவர்.

மே 17 கோரக்காட்சிகள்

முள்ளிவாய்க்கலில் எமது உறவுகள் சிங்கள பேரினவாதத்தல் கோரமாக கொல்லப்பட்ட 1ம் ஆண்டு நினைவலைகள்


எப்பதீரும் எமது சுதந்திர தாகம்?????????????????????

வன்னி இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதப்பாவனை!

வன்னிப் போரின் இறுதி நாள்களில் படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருந்த காரணத்தினாலேயே லங்கா ஈ நியூசின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட படைத்துறையின் புலானாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்த றுவான் சேனதீர வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக லங்கா ஈ நியூஸ் நிறு வனத்தின் ஆசிரியர் சந்த றுவான் சேனா தீர வெளிநாடு ஒன்றில் தஞ்சம் கோரியிருந்தார்.தனது சக ஊடகவியலாளர் கடத்தப்பட்டது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வன்னிப் போரின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து செய்திகளை பெற்றுக் கொள்வதற்காக அப்பொழுது வவுனியாவில் கடமையிலிருந்த படைத்தரப்பின் மேஜர் ஒரு வரை நான் பிரகீத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். அந்த மேஜரின் ஊடாக வன்னிப் போர் குறித்த பல தகவல்களை பெற்று பிரகீத் தமது ஊடகத்துக்கு செய்திகளை வழங்கி வந்தார்.

இவ்வாறு பணிபுரிந்து கொண்டிருந்த பிரகீத் ஒரு நாள் இனந்தெரியாதோரால் திடீரென கடத்திச்செல்லப்பட்டார். இச் சம்பவத்தின் பின்னணி குறித்து ஆராய்ந்த போது பிரகீத்துக்கு நான் அறிமுகப்படுத்திய வவுனியாவில் கடமையில் ஈடுபட்டிருந்த மேஜர் தொடர்பாக படைத் தரப்பினர் திடீர் விசாரணை ஒன்றை மேற்கொண்ட போது அவரின் கைத் தொலைபேசியில் பிரகீத்தின் தொலை பேசி இலக்கம் இருக்கக் காணப்பட்டு அதன் அடிப் படையில் பிரகீத் கடத்தப்பட்டமை தெரியவந்தது.

படைத்தரப்பும் தமிழீழ விடுதலைப்புலிகளும் போர் முனையில் பயன்படுத்தும் ஆயுதங்கள் என்ற தலைப்பில் பிரகீத் கடத்தப்பட்டதற்கு முன்னர் ஒரு கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இதன் காரணமாக படைத் தரப்பினர்களால் இவர் முதல் முறை கடத்தப்பட்டார். இவ்வாறு கடத்தப்பட்ட பிரகீத் குறிப்பிட்ட படைத்தரப்பு மேஜர் வழங்கிய தகவல்கள் எதையும் வெளியிடக் கூடாது என எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இக் கடத்தல் சம்பவம் குறித்து நான் பிரகீத்திடம் கேட்டபோது படையினர் போரின் போது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.

அத்துடன் ஆயுத களஞ்சியத்துக்கு அடிக்கடி வரும் சிலர் இரசாயன பொருட்களை குண்டுகளினுள் பொருத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக வவுனியா ஆயுதக் களஞ்சியம் ஒன்றுக்கு பொறுப்பாக இருந்த மேற் குறிப்பிட்ட மேஜர் தன்னிடம் கூறியதாக வும் பிரகீத் தெரிவித்தார். இவ்வாறு ஆயுதங்களில் இரசாயனப் பொருள் கள் சேர்க்கப்படுவது களமுனையில் நிற்கும் படையின ருக்குத் தெரியாதென்றும் பிரகீத் என்னிடம் கூறியிருந்தார்.

மேற்குறிப்பிட்ட மேஜரிற்கு ஊடாக இத் தகவல்கள் வெளியே கசிந்துவிட்டதை தெரிந்து கொண்ட படையினர் தன்னைக் கடத்திச் மிரட்டியதாகவும் பிரகீத் என்னிடம் குறிப்பிட்டிருந்தார் என லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்

சனி, 15 மே, 2010

எந்நாளும் நினைத்து நினைத்து அழுது துடிக்கிறோம் அந்த முள்ளிவாய்க்கால் சோகந்தன்னை - ஓராண்டு நினைவாக


ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம் எங்கள் சொந்தங்கள் அழிந்தது பெருந்துயரம் அந்த முள்ளிவாய்க்கால் சோகந்தன்னை நினைத்து அழுகின்றோம்

வியாழன், 13 மே, 2010

வித்தியாசமான தலைகவசங்கள்

விபத்துக்களை தடுக்க இப்படியும் தலைக்கவசம் அணியலாம்..............lol
 
                             helmet 01
 
                               helmet 02
                                helmet03
                         helmet04
                        helmet 05
                         helmet 06
                         helmet 07
                            helmet 08
 
                           helmet 09
                                helmet 10
,

புலிகளின் மற்றொரு வடிவமே நோர்வேயில் இயங்கும் ஜீ.ரீ.எப். - சிங்கப்பூர் விரிவுரையாளர் எச்சரிக்கை

நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் மாற்று வடிவமேயாகும் எனச் சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழக சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத, விரிவுரையாளர் றொகான் குணரட்ண எச்சரிக்கை விடுத்துள் ளார். நெடியவன் தலைமையில் இயங்கி வரும் க்ளோபல் தமிழ் போரம் என்ற அமைப்பு மிகவும் ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ ராஜ்ஜியத்தை உரு வாக்க முனைப்புக் காட்டி வரும் உருத்திர குமாரனை விடவும் நெடியவன் ஆபத்தானவர் என அவர் கூறியுள்ளார். உருத்திரகுமாரன் இலங்கை அரசாங்கத் துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள் ளக் கூடிய அரசியல் சாணக்கியத்தைக் கொண்டவர்.எனவே நெடியவனின் ஜீ.ரீ.எப். அமைப்பின் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ ராஜ்ஜிய உருவாக்கத் திற்கு ஆதரவாக வாக்களித்த 90 வீதமான வர்கள் இலங்கைப் பிரஜைகள் அல்ல எனவும் அவர்கள் ஒருபோதும் இலங்கைக்குத் திரும்ப மாட் டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஜீ.ரீ.எப். அமைப்புப் போன்றே பி.ரீ.எப். அமைப்பும் மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்களை வழங்க வேண்டும் என்பது குறித்துப் பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்­வுக்குத் தெளிவான விளக்கம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக எந்த நேரத்தில் ஆயுதப் போ ராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எந்த நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்பது குறித்துக் கோத்தபாய விளக்கத்துடன் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவை ஏற்பட்டால் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கோத்தபாய தயங்க மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் மேற்குலக நாடுகள் கவனிக்கத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்ற சுயாதீன விசாரணைக்குப் பிரசாரம் முன்னாள் ஐ.நா. மனித உரிமை அதிகாரி

இலங்கையில் கடந்த வருட மோதல்களின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற தாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசாரம் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர


இலங்கையில் கடந்த வருட மோதல்களின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற தாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசாரம் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் தீர்மானித்திருக்கின்றார்.

இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் திங் கட்கிழமை லண்டனில் "இலங்கையில் யுத்தக் குற்றங்கள்" என்ற மாநாட்டை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
தற்போது "சர்வதேச நெருக்கடிக்குழு" என்ற பிரபல சர்வதேச அரச சார்பற்ற அமைப்பின் தலைவராகவுள்ள லூயிஸ் ஆர்பர் அம்மையார் லண்டனின் பிரபல ஆய்வு நிறுவனமான சத்தாம் ஹவுஸுடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார்.
குறிப்பிட்ட மாநாட்டில் இலங்கையில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஆராயப்               படும் எனத் தெரிவித்துள்ள லூயிஸ் ஆர்பர் அம்மையார், சர்வதேச சுயாதீன விசார ணைகள் இடம்பெற வேண்டுமென வலி யுறுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சுயா தீன சர்வதேச விசாரணைகள் இடம்பெறு வது இலங்கையில் சமாதானம் நீடித்து நிலைப்பதற்கு அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புப் படையின ரும் விடுதலைப் புலிகளும் மோதலின் இறுதி ஐந்து, ஆறு மாதங்களில் தொடர்ச்சி யாக சர்வதேச மனிதாபிமானச் சட்டங் களை மீறினர் என்று தெரிவித்துள்ள ஆர் பர், ஜனவரி 2009ஆம் ஆண்டு முதல் அரசு வெற்றியை அறிவிக்கும் நாள் வரையில் உரிமை மீறல்கள் மிக மோசமானவையா கவும், அதிகளவில் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள் ளன எனத் தெரிவித்துள்ளார்.

புதன், 12 மே, 2010

குடாநாட்டுக் குழப்பத்திற்குள் நடந்தேறும் குடும்பச் சண்டைகள்

கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வல்லுறவு என்ற பட்டோலை யாழ்.குடாநாட்டில் சோழர்காலத்துக் கல்வெட்டுப்போல பொறிக்கப் பட வேண்டிய விடயமாகிவிட்டன. அந்ததளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. மலையக மக்கள் இரத்தம் உறுஞ்சும் அட்டை க்கு பழக்கப்பட்டுப் போனதுபோல, யாழ்ப்பாண மக்கள் கடத்தல், களவு என்ற கொடூரத்திற்கு பழக்கப்பட வேண்டிய துர்ப்பாக்கியம்.

நிலைமை இந்தளவு தூரம் முனைப்பு பெறுவதற்கு குடாநாட்டின் குழப்ப நிலையே காரண மெனலாம். அதாவது வன்னியில் யுத்தம் நடந்து கொண் டிருந்த காலம் தொட்டு இன்று வரை நீடித்து வரும் தொலைபேசி மிரட்டல்கள், எச்சரிக்கை கள் குடாநாட்டை குழப்பிவிட்டன. சாதாரணமாக இரண்டு இளைஞர்கள் சேர்ந்து விட்டால், தாம் நினைத்த எவருக்கும் கையடக்கத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடமுடியும் என்ற நிலைமை முற்றிவிட்டது.

தொலைபேசி மிரட்டல் குறித்து பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மிரண்டு போய் உள்ளவர்களை மிரட்டும் பணியை விசாரணை என்ற பெயரில் செய்தமையால், முறைப்பாட்டில் நம்பிக்கை இழக்க வேண்டிய தாயிற்று. இத்தகைய பொதுவான களநிலைமை தனிப்பட்ட கோபதாபங்களை நிறைவேற்றுவதற்கு பேருதவியாகியுள்ளது. குடாநாட்டில் நடந்த கடத்தல் சம்பவங்களை ஆராயும் போது அவற்றில் பெரும்பகுதி நண்பர் களால், குடும்ப உறுப்பினர்களால், தனிப்பட்ட பகையாளர்களால் செய்யப்பட்டதை அறியமுடி கின்றது.

தனிப்பட்ட பகைமையில் நடக்கின்ற கடத்தல் சம்பவங்கள் பொதுமைப்படுத்தப்பட்டு குடா நாட்டு மக்கள் பயப்பீதியில் உறைந்து போவ தற்கும், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருக்கின்ற தமிழ் உறவுகள் யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கும் தடை செய்கின்றன. குடாநாட்டில் இருக்கக் கூடிய பாதுகாப்பற்ற நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் தனிப்பட்ட பகையாளர்கள் தொடர்பில் பொலிஸார் அசமந்தம் காட்டுவார்களாயின் எதிர்கால நிலை மையும் வேதனைக்குரியதாகவே இருக்கும்.

ஞாயிறு, 9 மே, 2010

நிலைமைகளை ஆராய்வதற்காக நாணய நிதியக் குழு இலங்கை விஜயம்

இலங்கையின் தற்போதைய சூழ்நிலைகளை அவதானிக்கும் முகமாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். எதிர்வரும் 12 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னைய நாள்களில் அவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் மூன்றாம் தவணைக் கடன் கொடுப்பனவு தொடர்பாக ஆராயும் பொருட்டே இக் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அத்துடன் இலங்கையில் வரவு-செலவுத் திட்டம் தொடர்பிலும் இக் குழு ஆராயவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங் கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்படவிருந்தது.

இக் கொடுப்பனவில் முதலாம் கட்டக் கொடுப்பனவாக 312 மில்லியன் டொலர்க ளும் இரண்டாம் கட்டக் கொடுப்பனவாக 323 மில்லியன் டொலர்களும் வழங்கப்பட்டன. மூன்றாம் கட்டக் கொடுப்பனவு குறித்து தேர்தலின் பின்னர் வழங்குவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பிலும் தற்போது இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தைளை நடத்தவுள்ளதா கவும் தெரிவிக்கப்படுகின்றது.

சனி, 8 மே, 2010

இப்படியும் களவு நடக்குது யாழ்ப்பணத்தில்..............

பேருந்து நண்பனை வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்தபோது அவன் வீட்டில் இருந்தவர்களை மயங்கச் செய்து அங்கிருந்த நகை மற்றும் பணத்தை அபகரித்துச் சென்றுள்ளான்.இச் சம்பவம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், 2 ஆம் குறுக்குத் தெருவில் இடம்பெற் றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியாவிலுள்ள கால்நடை வைத்திய நிலையம் ஒன்றுக்குச் சென்று திரும்பிய பிரஸ்தாப நபருடன் யாழ்.நோக்கி வந்த பஸ் ஸில் பயணித்த இளைஞன் ஒருவன் நட்பை ஏற்படுத்தி அவருடன் சுவாரஸ்யமாகப் பேசியுள்ளான்.இதனையடுத்து பிரஸ்தாப நபரிடம் தனக்கு யாழ்ப்பாணம் தெரியாது என்றும் அதனைப் பார்ப்ப தற்குத்தான் வருவதாகவும் கூறியுள்ளார்.

இளைஞனின் வஞ்சகமில்லாத பேச்சு வார்த்தை யினால் கவர்ந்த அவர், யாழ்ப்பாணத்தில் உள்ள எனது வீட்டில் தங்கலாம் என கூறியுள்ளார். இதில் ஆனந்தம் அடைந்த அவ் இளைஞன் அப்பிள், ஒரேஞ் பழங்களை அவர் வீட்டுக்கு வாங்கிக்கொடுத்துள்ளார். அத்துடன் இரவு நேரச் சாப்பாட்டினை மேசையின் மேல் வைத்து விட்டு வீட்டுக்காரர்கள் வெளியே சென்ற வேளை அதில் மயக்க மருந்தினைத் தெளித்துள்ளார்.

அதனை உண்ட வீட்டில் உள்ளவர்கள் மயக்க முறவே வீட்டில் இருந்த கையடக்கத் தொலைபேசி, ஒரு தொகைப் பணம், பவுண் என்பவற்றை அபகரித் துத்தப்பிச் சென்றுள்ளான்.

அவ் உணவை உண்ட இருவர் நேற்று மதியம் வரை மயக்கம் தெளியாததனை யடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் 2 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஏ.சிந்துஜன் (வயது-14), திருமதி என்.சிவானந்தன் (வயது- 35) என்பவர்களே மயக்க மடைந்தவர்கள் ஆவர்

வெள்ளி, 7 மே, 2010

மானிப்பாயில் மாணவி ஒருவரைக் காணவில்லை படையினர் இரவிரவாக தேடுதல் நடத்தினர்


மானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள விவேகா னந்தா வித்தியாசாலை மாணவியான பதி னொரு வயதுச் சிறுமியை நேற்று நண் பகலுக்குப் பின்னர் காணவில்லை என்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள விவேகா னந்தா வித்தியாசாலை மாணவியான பதி னொரு வயதுச் சிறுமியை நேற்று நண் பகலுக்குப் பின்னர் காணவில்லை என்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய், சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த நகுலேஸ்வரம் ரேணுகா (வயது 11) என்ற மாணவியையே காணவில்லை.
இதுபற்றி கூறப்படுவதாவது:
நேற்றுக்காலை பாடசாலைக்குச் சென்ற
பிரஸ்தாப மாணவி, பாடசாலை நேரம் முடிந்தும் வீடு திரும்பாதததை அடுத்து தாயார் தேடிச் சென்றதாகவும் அவ ரைக் காணததையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யததாகவும் தெரிவிக் கப்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து பெரும் எண் ணிக்கையான படையினர் மானிப்பாய் பகுதியில் குவிக்கப்பட்டு நேற்றிரவு வரை தேடுதல் இடம்பெற்றது.
சிறுமியின் தந்தை வழக்கு ஒன்றில் சம் பந்தப்பட்டுச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் குடும்பம் வசதிகள் குறைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

» வெள்ளைக்கொடியுடன் வந்த புலிகள் சுட்டுக்கொல்லப்படவில்லை யுத்தக் குற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட்டால் உண்மைகளைச் சொல்வேன் என்கிறார் பொன்சேகா


"யுத்தக் குற் றங் கள் இடம்பெற்றன என்று ஏதேனும் தரப் புக்கு முறைப்பாடு கள் ஏதும் செய்யப் பட்டால், அந்த முறைப் பாட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் யுத்தக் குற்றம் தொடர்பில் எனக்கு ஏதேனும் உண்மை தெரிந்திருந்தால் அது தொடர் பில் விசாரணை செய்யும் தரப்புக்கு நான்"யுத்தக் குற் றங் கள் இடம்பெற்றன என்று ஏதேனும் தரப் புக்கு முறைப்பாடு கள் ஏதும் செய்யப் பட்டால், அந்த முறைப் பாட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் யுத்தக் குற்றம் தொடர்பில் எனக்கு ஏதேனும் உண்மை தெரிந்திருந்தால் அது தொடர் பில் விசாரணை செய்யும் தரப்புக்கு நான் மறைக்காமல் அந்த உண்மைகளைத் தெரிவிப்பேன்.''
இவ்வாறு ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந் திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகை யில் கூறினார்.
"இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடி ஏந்தி படையினரிடம் சரணடைய வந்த புலித்தலைவர்கள் சுட் டுக்கொல்லப்பட்டனர் என்று கூறப்படுவ தில் உண்மையில்லை. அப்படியானதொரு சம்பவம் இடம்பெறவில்லை'' என் றும் பொன்சேகா கூறினார்.
      அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
எந்தத் தடை வந்தாலும் எமது கட்சியின் கொள்கையைப் பாதுகாக்க மிகவும் தைரியத்துடன் பாடுபடுவோம். எந்த மிரட்டல்களுக்கும் நாம் அஞ்சமாட்டோம்.
எமது கட்சி குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள போதிலும் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியைவிடவும் அதிக பொறுப்புகளை நாம் நிறைவேற்றுகின்றோம்.
புதன்கிழமை    நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவிடாமல் என்னைத் தடுத்தமையானது ஒரு சட்டவிரோத செயற்பாடாகும். அன்றைய தினம் கூட்டப்பட்ட இராணுவ நீதிமன்றில் ஆஜராக நான் மறுத்து உண்ணாவிரதம் இருந்தேன். இறுதியில் எனது சட்டத்தரணிகளின் ஆலோசனைப்படி  மாலையில் நீதிமன்றில் ஆஜரானேன்.
எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது
நாடாளுமன்றம் கூடும் நாள்களில் இராணுவ நீதிமன்றத்தைக் கூட்டக்கூடாது என்ற @ண்டுகோளை நான் அங்கு முன்வைத்தேன். அவ்வாறு கூட்டுவதில்லை என்று எனக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்துக்கு வரும்போதும், அங்கிருந்து போகும்போதும் அவரைக் கைது செய்ய முடியாது. அவ்வாறு செய்வது சிறப்புரிமை மீறலாகும். என்னை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள விடாமல் தடுத்தமை மூலம் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை  நான் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை முன்வைப்பேன்  என்றார்.

வியாழன், 6 மே, 2010

கைகளுக்குள் சிக்கிக்கொண்ட சுடாத சூரியன்

   
பந்தாக மாற்றுவோம்.....


  விடுவேமா?        
(Aaaaa...............)
(Sun in Hand)
           நாங்களும் தாங்குவோமல்ல................


தீப்பெட்டி தேவையில்ல எமக்கு......
                                வாய்க்குள் சிக்கிக்கொண்ட சூரியன்


கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!

உலக நாடுகளின் நேரங்கள்.....