இந்திய மத்திய அரசாங்கத்தின் உளவுத் துறையான றோ அமைப்பின் இலங்கைக் கான பிரதான அலுவலகம் கொழும்புக் கோட்டைக்கு அருகில் உள்ள மிக முக்கிய அரச நிறுவனத்தின் கட்டடத்திலேயே இயங்கி வருவதாக அரச புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் இந் தக் கட்டடத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதுடன் இதன்போது றோ அமைப்பின் அலுவலகத்தில் இருந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட நபரின் சடலம் சம்பவ தினத் திற்கு அடுத்த தினம் விசேட விமான மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இலங்கையின் பாது காப்பு விவகாரம் தொடர்பான ஆய்வாளர் ஒருவர், வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவு ஒன் றின் அலுவலகம் இலங்கையில் உள் நாட்டு விவகாரங்களில் முன்னெடுக்கப்படும் கட்ட டம் ஒன்றில் இயங்கி வருவது இலங்கையில் மாத்திரமே எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கையின் இறையாண் மைக்குப் பாரிய பாதிப்பு எனக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையின் அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பைப் பெறு வது தொடர்பாகவும் அவர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக