ஆசிய மனித உரிமை ஆணைக் குழுவின் விமர்சனங் களுக்கு அடி பணிய வேண்டிய அவசியம் கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு தொடர்பில் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள கருத்துக் கள் தொடர்பில் குழப்பமடைய வேண்டிய அவசியம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறி யதாவது,
மக்கள் விருப்பங்களுக்கு முக்கி யத்துவம் அளிக்கப்படுமே தவிர பக்க சார்பான சர்வதேச அமைப் புக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது.தனிப்பட்ட நோக்கங்களை அடிப் படையாகக்கொண்டு சில வெளி நாட்டுச் சக்திகள் விமர்சனங்களை வெளியிட்டுவருகின்றன.
இவ்வாறான விமர்சனங்களு க்கு மத்தியிலே யுத்தம் முன்னெடுக் கப்பட்டு வெற்றி கொள்ளப்பட்டது இலங்கை ஓர் இறைமை உடைய நாடு என்பதனை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். நல்லநோக்கங்களுக்காகவே இந்த ஆணைக்குழு நிறுவப்பட் டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களை வெளியிடக் கூடிய சுதந்திரம் ஆசிய மனித உரி மைகள் ஆணைக் குழுவிற்கு காணப் படுவதாக அவர் தெரிவித்துள் ளார்.சர்வதேச அழுத்தங்களை திசை திருப்பும் நோக்கல் உண்மையை கண்டறியும் ஆணைக் குழு நிறுவப் பட்டதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந் தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக