வெள்ளி, 7 மே, 2010
» வெள்ளைக்கொடியுடன் வந்த புலிகள் சுட்டுக்கொல்லப்படவில்லை யுத்தக் குற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட்டால் உண்மைகளைச் சொல்வேன் என்கிறார் பொன்சேகா
"யுத்தக் குற் றங் கள் இடம்பெற்றன என்று ஏதேனும் தரப் புக்கு முறைப்பாடு கள் ஏதும் செய்யப் பட்டால், அந்த முறைப் பாட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் யுத்தக் குற்றம் தொடர்பில் எனக்கு ஏதேனும் உண்மை தெரிந்திருந்தால் அது தொடர் பில் விசாரணை செய்யும் தரப்புக்கு நான்
"யுத்தக் குற் றங் கள் இடம்பெற்றன என்று ஏதேனும் தரப் புக்கு முறைப்பாடு கள் ஏதும் செய்யப் பட்டால், அந்த முறைப் பாட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் யுத்தக் குற்றம் தொடர்பில் எனக்கு ஏதேனும் உண்மை தெரிந்திருந்தால் அது தொடர் பில் விசாரணை செய்யும் தரப்புக்கு நான் மறைக்காமல் அந்த உண்மைகளைத் தெரிவிப்பேன்.''
இவ்வாறு ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந் திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகை யில் கூறினார்.
"இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடி ஏந்தி படையினரிடம் சரணடைய வந்த புலித்தலைவர்கள் சுட் டுக்கொல்லப்பட்டனர் என்று கூறப்படுவ தில் உண்மையில்லை. அப்படியானதொரு சம்பவம் இடம்பெறவில்லை'' என் றும் பொன்சேகா கூறினார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
எந்தத் தடை வந்தாலும் எமது கட்சியின் கொள்கையைப் பாதுகாக்க மிகவும் தைரியத்துடன் பாடுபடுவோம். எந்த மிரட்டல்களுக்கும் நாம் அஞ்சமாட்டோம்.
எமது கட்சி குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள போதிலும் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியைவிடவும் அதிக பொறுப்புகளை நாம் நிறைவேற்றுகின்றோம்.
புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவிடாமல் என்னைத் தடுத்தமையானது ஒரு சட்டவிரோத செயற்பாடாகும். அன்றைய தினம் கூட்டப்பட்ட இராணுவ நீதிமன்றில் ஆஜராக நான் மறுத்து உண்ணாவிரதம் இருந்தேன். இறுதியில் எனது சட்டத்தரணிகளின் ஆலோசனைப்படி மாலையில் நீதிமன்றில் ஆஜரானேன்.
எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது
நாடாளுமன்றம் கூடும் நாள்களில் இராணுவ நீதிமன்றத்தைக் கூட்டக்கூடாது என்ற @ண்டுகோளை நான் அங்கு முன்வைத்தேன். அவ்வாறு கூட்டுவதில்லை என்று எனக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்துக்கு வரும்போதும், அங்கிருந்து போகும்போதும் அவரைக் கைது செய்ய முடியாது. அவ்வாறு செய்வது சிறப்புரிமை மீறலாகும். என்னை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள விடாமல் தடுத்தமை மூலம் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நான் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை முன்வைப்பேன் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக