இலங்கையில் கடந்த வருட மோதல்களின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற தாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசாரம் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர
இலங்கையில் கடந்த வருட மோதல்களின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற தாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசாரம் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் தீர்மானித்திருக்கின்றார்.
இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் திங் கட்கிழமை லண்டனில் "இலங்கையில் யுத்தக் குற்றங்கள்" என்ற மாநாட்டை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
தற்போது "சர்வதேச நெருக்கடிக்குழு" என்ற பிரபல சர்வதேச அரச சார்பற்ற அமைப்பின் தலைவராகவுள்ள லூயிஸ் ஆர்பர் அம்மையார் லண்டனின் பிரபல ஆய்வு நிறுவனமான சத்தாம் ஹவுஸுடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார்.
குறிப்பிட்ட மாநாட்டில் இலங்கையில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஆராயப் படும் எனத் தெரிவித்துள்ள லூயிஸ் ஆர்பர் அம்மையார், சர்வதேச சுயாதீன விசார ணைகள் இடம்பெற வேண்டுமென வலி யுறுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சுயா தீன சர்வதேச விசாரணைகள் இடம்பெறு வது இலங்கையில் சமாதானம் நீடித்து நிலைப்பதற்கு அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புப் படையின ரும் விடுதலைப் புலிகளும் மோதலின் இறுதி ஐந்து, ஆறு மாதங்களில் தொடர்ச்சி யாக சர்வதேச மனிதாபிமானச் சட்டங் களை மீறினர் என்று தெரிவித்துள்ள ஆர் பர், ஜனவரி 2009ஆம் ஆண்டு முதல் அரசு வெற்றியை அறிவிக்கும் நாள் வரையில் உரிமை மீறல்கள் மிக மோசமானவையா கவும், அதிகளவில் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள் ளன எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக