
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் மூன்றாம் தவணைக் கடன் கொடுப்பனவு தொடர்பாக ஆராயும் பொருட்டே இக் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அத்துடன் இலங்கையில் வரவு-செலவுத் திட்டம் தொடர்பிலும் இக் குழு ஆராயவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங் கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்படவிருந்தது.
இக் கொடுப்பனவில் முதலாம் கட்டக் கொடுப்பனவாக 312 மில்லியன் டொலர்க ளும் இரண்டாம் கட்டக் கொடுப்பனவாக 323 மில்லியன் டொலர்களும் வழங்கப்பட்டன. மூன்றாம் கட்டக் கொடுப்பனவு குறித்து தேர்தலின் பின்னர் வழங்குவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பிலும் தற்போது இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தைளை நடத்தவுள்ளதா கவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக