ஜூன் மாத நடுப்பகுதியில் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து பகிரங்க விவாதம் நடத்தப்படவுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இடம்பெறவுள்ள இலங்கை விவகாரம் குறித்த விவாதத்திற்கு முன்னோடியாக ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் பாதுகாப்பு பேரவையிடம் அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்த அறிக்கையில் வன்னி யுத்தத்தின்போது இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் இழைத்த போர்க்குற்றங்கள் பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளன.இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதேவேளை யுத்தத்தின் கொடூரத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்ற இளம் பெண்களின் தலைமுடிகளை விடுதலைப்புலிகள் வெட்டி விட்டதாகவும், இவ்வாறு தலை முடிவெட்டப் பட்ட நிலையில் இடம் பெயர் முகாம்களில் தஞ்சமடைந்த பெண்களை படையினர் வித்தியாசமான முறையில் நடத்தியதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேநேரம் போரில் இளைஞர் யுவதிகளை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கொள் வதற்காக,மிக இளவயதுத் திருமணங்களை பெற்றோர் நடத்திவைக்கும் துரதிர்ஷ் டத்துக்கு ஆளாகியதாகவும் அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு வர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம் தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளது. இதேவேளை சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டவர்களின் பட்டியலில் இருந்து பிள்ளை யான் மற்றும் கருணா தரப்பினரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.எனினும் கருணாவின் ஆதர வாளரான இனியபாரதியின் பெயர் சிறுவர் போராளிகளை இணைத் துக்கொண்டவர்களின் பட்டியலில் தொடர்ந்தும் இடம் பெற்றுள்ளது.
இவற்றின் மத்தியில் அடுத்த மாத நடுப்பகுதியில் ஐ.நா.பாதுகாப்பு பேரவை கூடும்போது இலங்கை விவகாரம் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக