புதன், 28 ஜூலை, 2010

யாழப்பாணத்தில் தமிழரை புது விதமாக ஏமாற்றும் சிங்கள பேர்வழிகள்

வெளிநாட்டுத் தூதரகங்களினால் மறுக்கப்பட்ட விசாக்கள் 2 வாரங்களில் மீளப் பெற்றுத் தரப்படும் என்று பொய் சொல்லி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி 5 லட்சம் வரை பணம் கறக்கும் கும்பலினால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
பணத்தை வாங்கிய பின்னர் கொழும்புக்கு வர சொல்லி வெளிநாட்டு தூதரகங்களில் தாம் பணம் கொடுத்து விட்டோம், நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு போனால் போதும் என்று சொல்லி முழுத் தொகை பணத்தையும் வாங்கி கொண்டு பாதிக்கப்பட்டவர்களுடன் எதுவித தொடர்புமில்லாமல் அவர்கள் மாறிவிடுகிறார்கள்.
தூதரகங்களினால் தற்போது சகல வகையான விசாக்களும் கூடுதலாக மறுக்கப்படுகின்றன, இது தெரியாமல் எம்மக்களும் அங்கு சென்று தமது கடவுச்சீட்டில் மறுபடியும் விசா மறுப்பு முத்திரை பெற்று வரவேண்டியேற்படுகின்றது.
இந்த ஏமாற்றுக் கும்பல் ஒன்று தற்போது திருநெல்வேலி பலாலி வீதியில், தபால்பெட்டி சந்தியில் வோயோகுஸ் லங்கா (voyogus lanka) எனும் பெயரில் இயங்குகிறது,
மக்களே! இந்த மாதிரி ஏமாற்று கும்பல்களிடம் விழிப்பாக இருங்கள்.
எம் முன்னேற்றத்தின் முட்டு கட்டைகள் இவர்கள் தான், நாம் இதுவரை இழந்தது போதும், உயிர் முதல் உடமை வரை சிங்களவன் எம்மிடம் புடுங்கியே பழகி விட்டான்.
தற்போது சிங்களவன் புது விதமாக தமிழ் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முனைகிறான், விழிப்போடு இருங்கள்.
பாதிக்கப்பட்ட நபர்.

வியாழன், 22 ஜூலை, 2010

தேங்காய்க்குள் ஆறு விரலுடன் கை உருவம்

தேங்காய்க்குள் ஆறு விரலுடன் கை உரு வம் ஒன்று இருந்த அதிசயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனைப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. கல்முனை பாலிகா வித்தியாலய வீதியில் உள்ள பி.எம்.எம்.நிஸாம் மெளலவி என்ப வருடைய காணியில் உள்ள தென்னை மரத்தில் இருந்து பறித்த தேங்காயை உடைத்த போது அதனுள் ஆறு விரலுடன் கை உருவம் இருந்துள்ளது. இதனை மக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்துச் செல் கின்றனர்.

புதன், 21 ஜூலை, 2010

500 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை எட்டும் பேஸ்புக்

பிரபல சமூகவலைப்பின்னல் தளமான பேஸ்புக் 500 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை அடையவுள்ளதாகவும் அவ்வறிவிப்பை பெரும்பாலும் இந்த வாரம் மேற்கொள்ளுமெனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத் தொகையானது உலக சனத்தொகையின் 8% வீதமாகும்.

இம் மைல்கல்லை கொண்டாடும் வகையில் " பேஸ்புக் கதைகள் " எனும் விசேட கதைத் தொகுப்பையும் அவ் வலையமைப்பு வெளியிடவுள்ளது. மேற்படி தொகுப்பானது பாவனையாளர்களின் வாழ்க்கையை பேஸ்புக் எவ்வாறு மாற்றியுள்ளது என்பது தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

அனைத்து பாவனையாளர்களும் தங்கள் கதைகளை சமர்ப்பிக்கமுடியும். பாவனையாளர்களால் விரும்பப்படும் அதிகமான கதைகள் இத்தொகுப்பினுள் உள்ளடக்கப்படும். பேஸ்புக் தனது வலையமைப்பினை 150 மில்லியன் பேர் கையடக்க தொலைபேசிகள் மூலம் உபயோகிப்பதாக சமீபத்தில்அறிவித்திருந்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பேஸ்புக் வலையமைப்பின் சந்தைப்படுதல் இயக்குனர், இது தாம் ஏற்கனவே எதிர்பார்த்தவொன்றெனவும் , இதை வேறு வேறுவிதமாக கொண்டாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பேஸ்புக் சமூகவலைப்பின்னல் தளமானது 2004ம் ஆண்டு மார்க் ஸுக்கர்பேர்க் என்பவரினால் அவரது சக மாணவர்களான எடுயுரடொ சவெரின் , டஷ்டின் மொஸ்கொவிட்ஷ் மற்றும் கிரிஷ் ஹக்ஷ் ஆகியோரின் உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும்.

எமனுக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒருவர் தற்கொலை!

எங்கும் புதுமை; எதிலும் புதுமை என்பதற்கொப்பவே உலக நடப்புகளும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அது போன்று தற்கொலையில் ஒரு புதுமை படைத்திருக்கின்றார் ஒருவர்.

எமதர்மராஜனுக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விசித்திர சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது.

கோவை கடலைக்கார சந்தை என்ற இடத்தைச் சேர்ந்த சேகர் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து புதுமை படைத்திருக்கின்றார். பெயிண்டரான இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சேகரிடம் இருந்து அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இதனால் கடந்த 6 மாத காலமாக தனிமையில் இருந்த சேகர் மன உளைச்சலால், பாதிக்கப்பட்டதாக அக்கம்பக்கத்துத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்று நள்ளிரவுக்கு மேல், கோவை நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த மரம் ஒன்றில் இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை நீதிமன்றத்துக்கு வந்த சிலர், இதை பார்த்து விட்டுக் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

கோவை ரேஸ் கோர்ஸ் பி4 காவல்நிலைய பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றிய பொலிசார் கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட சேகர் தனது சட்டைப் பையில் ஒரு கடிதம் வைத்திருந்தார்.

சேகர் எழுதியிருந்த கடிதத்தில்,

"அனுப்புனர், சேகர், த/பெ. ராமசாமி. பெறுனர், எமதர்மராஜா, த/பெ எமன் அப்பா, எமன் தருமன் வீதி, எமனின் செல்: 000321000, மேல் உலகம். சித்திரகுப்தன் செல் நம்பர்: 944561377.

என்னை பற்றிய மேலும் விபரங்கள் அறிய வேண்டும் என்றால் மேலே எழுதப்பட்டிருக்கும் செல் நம்பருடன் தொடர்பு கொள்ளவும்." என்று எழுதி வைத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துப் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலுலகத்துக்குக் கடிதம் எழுதிய சேகர், கூடவே தற்கொலைக்கான காரணத்தை கீழுலகத்துக்கும் அறிவித்திருந்தால், காவல்துறையினரின் அசௌகரியங்களைத் தவிர்த்திருக்கலாமே?

ஞாயிறு, 18 ஜூலை, 2010

நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்தில் இவ்வருடம் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய உற்வசம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து, யாழ்.மேயர் திருமதி யோ.பற்குணராசா தலைமையில் நேற்றுப் பிற்பகல் நடந்த கூட்டத்தில் இவ்வருடம் நடைபெறவுள்ள உற்சவம் தொடர்பாக பல முக்கிய புதிய நடைமுறைகள் குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


நிறைவேற்றப்பட்ட மற்றும் சில முக்கிய முடிவுகள் வருமாறு:
நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்துக்கு வரும் பெண்கள் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் சேலை, நீளப்பாவாடை, சட்டை, தாவணி போன்ற உடைகளை அணிந்து வந்தால் மட்டுமே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
* பஞ்சாபி போன்ற தமிழர் கலாசாரத்துக்கு ஒவ்வாத உடைகள் அணிந்து வருவோர் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* இதேபோன்று ஆண்கள் வேட்டி அணிந்து வரவேண்டும். நீளக்காற்சட்டை அணிந்து வருவது முற்றாகத் தடைசெய்யப்படும்.
* அங்கப்பிரதிஷ்டை செய்யும் அடியவர்களுக்கு எந்தவிதமான நோய்த்தாக்கமும் ஏற்படாத வகையில் கூடுதல் மணல் வீதிகளில் பரவப்படும். தினமும் மண் பரிசோதனை செய்யப்படும். பாதணிகளுடன் வீதியில் நடமாட எவரும் அனுமதிக்கப் படமாட்டார்கள்.
* தென்னிலங்கையில் இருந்து பெரும்பான்மை இன பக்தர்கள் இம்முறை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படும் உடை குறித்து தென்பகுதி பத்திரிகைகளில் மும்மொழிகளிலும் விளம்பரம் செய்யப்படும்.
*சுகாதாரம், குடிதண்ணீர் விநியோகம் ஆகியன உட்பட ஏனைய அடிப்படை வசதிகள் வழமைபோல் மேற்கொள்ள வேண்டும்.

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!
Get paid To Promote at any Location

உலக நாடுகளின் நேரங்கள்.....