வெளிநாட்டுத் தூதரகங்களினால் மறுக்கப்பட்ட விசாக்கள் 2 வாரங்களில் மீளப் பெற்றுத் தரப்படும் என்று பொய் சொல்லி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி 5 லட்சம் வரை பணம் கறக்கும் கும்பலினால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
பணத்தை வாங்கிய பின்னர் கொழும்புக்கு வர சொல்லி வெளிநாட்டு தூதரகங்களில் தாம் பணம் கொடுத்து விட்டோம், நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு போனால் போதும் என்று சொல்லி முழுத் தொகை பணத்தையும் வாங்கி கொண்டு பாதிக்கப்பட்டவர்களுடன் எதுவித தொடர்புமில்லாமல் அவர்கள் மாறிவிடுகிறார்கள்.
தூதரகங்களினால் தற்போது சகல வகையான விசாக்களும் கூடுதலாக மறுக்கப்படுகின்றன, இது தெரியாமல் எம்மக்களும் அங்கு சென்று தமது கடவுச்சீட்டில் மறுபடியும் விசா மறுப்பு முத்திரை பெற்று வரவேண்டியேற்படுகின்றது.
இந்த ஏமாற்றுக் கும்பல் ஒன்று தற்போது திருநெல்வேலி பலாலி வீதியில், தபால்பெட்டி சந்தியில் வோயோகுஸ் லங்கா (voyogus lanka) எனும் பெயரில் இயங்குகிறது,
மக்களே! இந்த மாதிரி ஏமாற்று கும்பல்களிடம் விழிப்பாக இருங்கள்.
எம் முன்னேற்றத்தின் முட்டு கட்டைகள் இவர்கள் தான், நாம் இதுவரை இழந்தது போதும், உயிர் முதல் உடமை வரை சிங்களவன் எம்மிடம் புடுங்கியே பழகி விட்டான்.
தற்போது சிங்களவன் புது விதமாக தமிழ் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முனைகிறான், விழிப்போடு இருங்கள்.
பாதிக்கப்பட்ட நபர்.
உங்களுக்கு அவ்வளவு அக்கறையென்றால், நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருக்கிறதென்றால் ஏன் பொலிஸில் முறையிடாமல், இங்கு வந்து பதிவு மட்டும் எழுதிகிறீர்கள்?
பதிலளிநீக்குதயவுசெய்து தக்க ஆதாரங்களுடன் போய் முதலில் பொலிஸில் முறையீடு செய்யுங்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவதொரு வகையில் உதவிசெய்யப்பாருங்கள்.
வணக்கம் நண்பரே
பதிலளிநீக்குபோலீஸ் சரியாக இயங்கினால் ஜனநாயக ஆட்சி நடந்தால் எப்படி நடக்குமா?
எமது பணி மக்களை விளிப்படிய செய்வது தான் நண்பரே...மக்கள் விழிப்பாக இருந்தால் எது எல்லாம் நடக்குமா?
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே?