யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய உற்வசம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து, யாழ்.மேயர் திருமதி யோ.பற்குணராசா தலைமையில் நேற்றுப் பிற்பகல் நடந்த கூட்டத்தில் இவ்வருடம் நடைபெறவுள்ள உற்சவம் தொடர்பாக பல முக்கிய புதிய நடைமுறைகள் குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்பட்ட மற்றும் சில முக்கிய முடிவுகள் வருமாறு:
நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்துக்கு வரும் பெண்கள் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் சேலை, நீளப்பாவாடை, சட்டை, தாவணி போன்ற உடைகளை அணிந்து வந்தால் மட்டுமே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
* பஞ்சாபி போன்ற தமிழர் கலாசாரத்துக்கு ஒவ்வாத உடைகள் அணிந்து வருவோர் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* இதேபோன்று ஆண்கள் வேட்டி அணிந்து வரவேண்டும். நீளக்காற்சட்டை அணிந்து வருவது முற்றாகத் தடைசெய்யப்படும்.
* அங்கப்பிரதிஷ்டை செய்யும் அடியவர்களுக்கு எந்தவிதமான நோய்த்தாக்கமும் ஏற்படாத வகையில் கூடுதல் மணல் வீதிகளில் பரவப்படும். தினமும் மண் பரிசோதனை செய்யப்படும். பாதணிகளுடன் வீதியில் நடமாட எவரும் அனுமதிக்கப் படமாட்டார்கள்.
* தென்னிலங்கையில் இருந்து பெரும்பான்மை இன பக்தர்கள் இம்முறை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படும் உடை குறித்து தென்பகுதி பத்திரிகைகளில் மும்மொழிகளிலும் விளம்பரம் செய்யப்படும்.
*சுகாதாரம், குடிதண்ணீர் விநியோகம் ஆகியன உட்பட ஏனைய அடிப்படை வசதிகள் வழமைபோல் மேற்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக