புதன், 30 செப்டம்பர், 2009

தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு


கண்தெரியாத பலரும் Text to Speech எனும் தொழில்நுட்பம் மூலம் இணையப் பக்கங்களை வாசிப்பதுண்டு.

இந்த தொழில்நுட்பம் இத்தனை காலமும் தமிழுக்கு கிடைக்கவில்லை. இன்று இந்த தொழில்நுட்பம் தமிழுக்கும் வந்துவிட்டது .

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ என்ற முகவரிக்குச் சென்று அங்கே தமிழில் தட்டச்சு செய்து “Submit” எனும் பொத்தானை அமுக்குங்கள். பின்னர் வரும் சாரளத்தில் வரும் தொடுப்பை சொடுக்கி பேச்சைக் கேளுங்கள். நீங்கள் தட்டச்சு செய்ய எழுத்துக்களை ஒரு ஆண் பேசிக் காட்டுவார்.

» மொபைல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி........

மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.
ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

1920
இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.

1947
ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

1954
காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

1970
பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

1973
மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

1979
ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

1983
டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

1984
விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

1989
மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

1990
2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

1991
அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

1992
மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

1996
மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

1997
எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

2000
இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

2001
வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

2002
டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது.

2004
மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

2006
மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

2007
ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

2010
எப்படி இருக்கும் மொபைல் போன் வளர்ச்சி? சிம் கார்டுகளை உடலில் பொருத்தி எண்ணங்களை அப்படியே இன்னொரு போனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் வந்தாலும் வரலாம்.

» உலகின் முதல் 64 GB மெமரி கார்டு : டோஷிபா நிறுவனம் வெளியிட்டது

ஜப்பானை சேர்ந்த டோஷிபா நிறுவனம் உலகின் முதல் 64 GB மெமரி கார்டினை வெளியிட்டுள்ளது. இதன் விலை 630 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதில் 35 MB per Second வேகத்தில் தகவல்களை எழுதவும் , 60 MB per Second வேகத்தில் தகவல்களை படிக்கவும் இயலும் . இது சந்தை விற்பனைக்கு வரும் நவம்பர் மாதம் வரலாம் என எதிபார்க்கப்படுகிறது.

மேலும் சில புதிய 32 GB , 16 GB வகை கார்டுகளையும் வெளியிடுகிறது. இதன் சிறப்பு என்னவெனில் , இதில் 35 MB per Second வேகத்தில் தகவல்களை எழுதவும் , 60 MB per Second வேகத்தில் தகவல்களை படிக்கவும் இயலும் என்பது தான் .

அதிவேக ஆப்பரா பிரவுசர் (Opera 10) வெளியானது

பிரவுசர் போட்டியில் பல்வேறு புதிய வசதிகளுடன் எப்போதும் ஆப்பரா அறிமுகமாகும். இருந்தாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ்,

குரோம் பிரவுசர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் மற்றும் பரபரப்பு இதற்குக் கிடைப்பதில்ல . ஆனால், இன்று பிரவுசர்களில் அதிகம் பேசப்படும் பல புதிய வசதிகளை ஆப்பரா தான் முதலில் வடிவமைத்தது என்பது அதன் சிறப்பு. டேப் பயன்பாடு, பக்கங்களுக்கான தம்ப்நெயில் உருவாக்கம், இணைய பக்கங்களில் எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பம் போன்ற புதிய வரைமுறைகள் ஆகியவற்றை ஆப்பரா தான் முதலில் கொண்டு வந்தது. இதே போல் இப்போது வெளியிடப்பட்ட பிரவுசரிலும் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.


ஆப்பரா தனக்கென பல வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து இவர்கள் ஆப்பராவினையே பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வெளியாகியுள்ள ஆப்பரா 10 நிச்சயம் இதன் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாகவே இருக்கும். இதன் சிறப்புகளை இங்கு பட்டியலிடலாம். முதலில் இதன் வேகத்தைக் கூற வேண்டும். இது செயல்படும் தன்மை முதன் முதலில் கூகுள் குரோம் பிரவுசரை இயக்கிய போது ஏற்பட்ட உணர்வைத் தருகிறது. மிக வேகமாக இது இயங்குகிறது. சூப்பர் பாஸ்ட் என்று கூடச் சொல்லலாம். இதற்கு முன்னால் வந்த பதிப்பு 9.6 பதிப்பைக் காட்டிலும் 40% வேகம் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மற்றபடி இன்றைக்கு வருகின்ற பிரவுசர்களில் இருக்கும் புதிய வசதிகள் பல இதிலும் உள்ளன. பாப் அப் பிளாக்கர், ப்ளக் இன் வசதிகள், ஆர்.எஸ்.எஸ். ரீடர், பிஷ்ஷிங் தடுக்கும் வசதி எனப் பல வசதிகள் இதில் கிடைக்கின்றன. மற்ற சில பிரவுசர்களில் இல்லாத இமெயில் கிளையண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதில் பி.ஓ.பி.3 மற்றும் ஐமேப் மெயில் வசதி உள்ளது. இதனால் நீங்கள் உங்கள் பி.ஓ.பி. 3 மெயில்களை இந்த பிரவுசர் மூலமாகவே கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம்.அனைத்து வசதிகளையும் பயன்படுத்த எளிதான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது இதன் இன்னொரு சிறப்பு.

இதன் டேப்களை அமைக்கும் வசதி சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு டேப்பின் மேலாக அதன் தளக் காட்சியினை ஒரு தம்ப்நெயில் படமாக அமைத்துக் கொள்ளலாம். இது ஒரு புதிய உத்தி ஆகும். இதற்கு முன் கர்சரை அந்த டேப்பின் மேலாகக் கொண்டு செல்கையில் மட்டும் இந்த படம் தெரியும். மேலும் இவை அமைந்துள்ள டேப் பாரின வலது இடதாக இழுத்து அமைத்துக் கொள்ளலாம். இப்போது கிடைக்கும் மிக அகல மானிட்டர் வைத்திருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

அடுத்த சிறப்பு இதன் ஸ்பீட் டயல் வசதியாகும். நீங்கள் அடிக்கடி திறந்து பார்க்க விரும்பும் டேப்பிற்கான தளத்தினை அடுத்துப் பார்க்கும் 4 முதல் 24 தளங்களின் மேலாக, ஒரு தம்ப் நெயில் படமாக வைத்துக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அத்தளத்தைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அப்போது அதனைக் கிளிக் செய்து, தளத்திற்குச் செல்லலாம். இந்த வசதி டிபால்ட்டாகக் கிடைக்கிறது.


இதன் இன்னொரு குறிப்பிடத்தக்க வசதி இதிலுள்ள இன் – லைன் ஸ்பெல் செக்கர் வசதி. இது பிளாக்குகளை அமைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் புதுமையாக ஆப்பரா டர்போ என்ற பேஜ் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் டயல் அப் வகை இன்டர்நெட் இணைப்பில் கூட, வேகமாக பிரவுசிங் செய்திட முடியும். இணைய இணைப்பின் வேகம் குறையும்போது, இந்த தொழில் நுட்பம் அதனைக் கண்டறிந்து, இணைய தளங்களை ஆப்பராவின் சர்வர்களில் கம்ப்ரைஸ் செய்து பின் தருகிறது. இதனால் டேட்டா குறைவாக இறக்கம் செய்யப்பட்டாலும் நமக்குப் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பக்கங்கள் கிடைக்கும். இவை தவிர இணையப் பக்கங்களை வடிவமைப்பவர்களுக்குத் தொழில் ரீதியான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆப்பரா தந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு முக்கியமான வசதி இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இப்போதைய பிரவுசர்கள் தரும் பிரைவேட் பிரவுசிங் வசதி இதில் இல்லை. இந்த வசதி இருந்தால் நாம் பிரவுசிங் செய்த தளங்கள் குறித்த குறிப்புகள் பிரவுசரில் தங்காது. பிரவுசரை மூடியவுடன் நீக்கப்படும். இந்த வசதியை ஆப்பரா பிரவுசர் தரவில்லை. எனவே இந்த வசதி கட்டாயம் வேண்டும் என்பவர்கள் இதன் பக்கம் போக வேண்டாம். வேண்டாதவர்கள் தாராளமாக ஒரு முறை பயன்படுத்திப் பார்த்து, பிடித்திருந்தால் இதனையே வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு ஆப்பரா பிரவுசர் தேவை என்றால் கீழ்க்காணும் முகவரிக்குச் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம். அனைத்து வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குமான பைல் இங்கு இலவசமாகக் கிடைக்கிறது.

புதன், 23 செப்டம்பர், 2009

பாப் அப் ( Pop-Up )விளம்பரங்களைத் தடுப்பது எப்படி ?


ஆர்வத்துடனும் தேடும் நோக்கத்துடனும் நாம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நமக்கு எரிச்சல் ஊட்டும் வகையில் விளம்பரங்கள் திடீர் திடீரென தலை தூக்கி அது வேண்டுமா? இது வேண்டுமா? எனக் கேட்டு நம் ஆப்ஷனையும் கேட்டு தொல்லை கொடுக்கும். ஆரம்பத்தில் இவை வரத் தொடங்கிய போது தகவல்களுடன் நாம் இவற்றையும் ரசித்தோம். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த விளம்பரங்கள் அதிக எண்ணிக்கையில் வருகையில் இணைய தொடர்பை மூடிவிடும் உச்ச நிலை வரை சென்று வந்தோம்.இதற்காகவே பல பிரவுசர்களில் இந்த பாப் அப் விளம்பரங்களைத் தடுக்கும் டூல்கள் தரப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் இவற்றைத் தடுக்கும் வகையில் நமக்கு என்ன என்ன வசதிகள் உள்ளன என்று காணலாம்


1. விண்டோஸ் + சர்வீஸ் பேக் 2+ இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
இந்த மூன்றின் இணைப்பில் விளம்பரங்களைத் தடுக்க வசதி தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிலேயே தடை செய்திடும் டூல் தரப்பட்டுள்ளது. இதனை எளிதாக செட் செய்திடலாம். Tools மெனு சென்று மீது popup blocker கிளிக் செய்து பாப் அப் பிளாக்கர் எப்படி செயல்பட வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். சில தளங்கள் தரும் விளம்பரங்கள் மற்றும் பிற தகவல்களை நாம் விரும்பலாம். அதற்கேற்ற வகையில் popup blocker கிளிக் செய்து கிடைக்கும் டயலாக் பாக்ஸில் நம் விருப்பம் போல எந்த தளங்களுக்கான தடைகளை நீக்கலாம் என்பதனையும் செட் செய்திடலாம். இது சர்வீஸ் பேக் 2 நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் டவுண்லோட் செய்து இயக்கி இருந்தால் மட்டுமே கிடைக்கும். இந்த சர்வீஸ் பேக் தரும் அருமையான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வசதி இதுவாகும்.

2. வேறு பிரவுசர்கள்
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் சர்வீஸ் பேக் 2 மூலமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் பாப் அப் பிளாக்கர் டூலினைத் தருவதற்கு முன்பே பல பிரவுசர்களில் பாப் அப் பிளாக்கர்கள் தரப்பட்டன. எனவே அந்த பிரவுசர்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த வகையில் அதிகம் புகழப் பெற்ற மொஸில்லாவின் பயர்பாக்ஸ் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பயர்பாக்ஸ் வெளிவந்த போது இதன் பல புதிய வசதிகளுக்காக பலரின் பாராட்டைப் பெற்றது. பாப் அப் பிளாக்கர், டேப் பிரவுசிங் ஆகியவை மிக அதிகமாகப் பேசப்பட்டன. அவற்றின் செயல்பாடும் நிறைவைத் தருகின்றன. 2002 ஆம் ஆண்டு வெளியான கிரேஸி பிரவுசர் (Crazy Browser) தொகுப்பும் திறமையாகச் செயல்படும் பாப் அப் பிளாக்கரைக் கொண்டுள்ளது. இதிலும் இந்த டூல் மிகத் திறமையாகச் செயல்படுகிறது.

3. பிரவுசர் டூல்பார்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புடன் இணைந்து செயல்படும் வகையில் பல டூல் பார்களைத் தருவது இன்றைய இணைய தளங்களின் ஒரு செயலாக உள்ளது. அந்த வகையில் பல தளங்களில் பாப் அப் பிளாக்கர்கள் கிடைக்கின்றன. கூகுள், எம்.எஸ்.என். மற்றும் யாஹூ இவற்றில் குறிப்பிடத்தக்கன. இவற்றை எளிதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் இணைத்துவிடலாம்.இவற்றை இணைக்கையில் இந்த தளங்கள் லைசன்ஸ் ஒப்பந்தம் என்று சொல்லி நீளமான ஒரு டாகுமெண்ட் ஒன்றைத் தருவார்கள். அதனைச் சிரமப்பட்டுத்தான் படிக்க வேண்டும். படித்த பின் கண் டாக்டரிடம் நிச்சயம் செல்ல வேண்டும். அவ்வளவு சிறிய அளவிலான எழுத்துக்களில் இவை இருக்கும்.இவை விளம்பரங்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்டாலும் இன்னொரு சின்ன பிரச்சினை உள்ளது. இந்த டூல்பார்கள் உங்களின் இணையத் தேடல் குறித்த தகவல்களைச் சேர்த்துக் கொண்டே இருக்கும். மேலும் உங்கள் பெர்சனல் தகவல்களையும் எடுத்து தனக்குப் பயன்பட வைத்துக் கொள்ளும். இந்த விபரங்கள் தான் அந்த லைசன்ஸ் ஒப்பந்தத்தில் இருக்கும். பரவாயில்லை என்றால் இந்த டூல்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

4. பாப் அப் பிளாக்கர் சாப்ட்வேர்

பல சாப்ட்வேர் நிறுவனங்கள் கூடுதல் வசதிகள் பலவற்றுடன் பாப் அப் பிளாக்கர் சாப்ட்வேர் புரோகிராம்களைத் தயாரித்து இணையம் வழியே விற்பனை செய்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள், இவற்றை இலவசமாகப் பயன்படுத்தும் உரிமையும் வழங்கப்படும். எனவே இவற்றைக் கட்டணம் செலுத்தி வாங்காவிட்டாலும் இலவச காலத்தில் பயன்படுத்தி இவற்றின் தன்மையைப் பார்க்கலாம்.

5. இணைய சேவை நிறுவனம் தரும் வசதிகள்

இன்டர்நெட் சர்வீஸ் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவும் கூடுதல் கட்டணம் பெற்றும் இத்தகைய பாப் அப் பிளாக்கர் புரோகிராம்களைத் தருகின்றன. இவற்றையும் பயன்படுத்தலாம். இவ்வாறு தடைகளை ஏற்படுத்திய பின்னர் குறிப்பிட்ட தளங்களைப் பார்க்கையில் அவை தரும் பாப் அப் விண்டோவினை அப்போது மட்டும் பார்க்க வேண்டும் என விரும்பினால் அதற்கும் பிரவுசர்களில் வசதி தரப்படுகிறது. சில பிரவுசர்கள் இந்த தளம் ஒரு பாப் அப் விண்டோவினைத் தருகிறது. அதனை அனுமதிக்கவா? என்று கேள்வி எழுப்பும். பார்க்க விரும்பினால் அப்போதைக்கு மட்டும் அனுமதிக்கலாம்.

திங்கள், 21 செப்டம்பர், 2009

கம்ப்யூட்டருக்கான பாதுகாப்பான மின்சக்தி வாழங்குவது பற்றி........!


இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என இங்கு காணலாம். அவற்றின் மூலம் கிடைக்கும் மின்சக்தியின் தன்மை குறித்தும் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.ஸ்பைக்ஸ், சர்ஜஸ் என்பவையெல்லாம் எதைக் குறிக்கின்றன?டிஜிட்டல் சாதனங்களுக்கு வரும் மின்சாரம் சீராக இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட வழக்கமான வோல்டேஜ் அளவை விட்டு அதிகமாக இருந்தால் அது அதிக வோல்டேஜ் (Over Voltage) ஆகும். அதுபோல் வோல்டேஜ் அளவு குறைவாக வருவது Under Voltage ஆகும். அதிக வோல்டேஜ் பிரிவில் ஸ்பைக்கும், சர்ஜும் வருகின்றன. இந்த இரண்டுக்கும் இடையே சிறு வேறுபாடு உண்டு. மிக அதிக வோல்டேஜ் திடீரென வந்து உடனடியாக மறைந்து போவதை ஸ்பைக் என அழைக்கிறார்கள். Impulse என்றும் இதைக் குறிப்பிடலாம். மிக அதிக வோல்டேஜ் சற்று அதிகமான நேரம் (பொதுவாக நொடியில் 1/20 பங்கு) இருந்தால் அதை சர்ஜ் எனக் குறிப்பிடுகின்றனர். வோல்டேஜ் அளவு ஆபத்தான அளவுக்கு, நேரத்துக்கு குறுகிய நேரத்துக்கு குறைந்து போவது Brownout ஆகும். Sags என்றும் இதைக் கூறுவார்கள்.இதைப் பார்த்துதான் கம்ப்யூட்டர்கள் பயப்பட வேண்டும். சுத்தமாக மின் இணைப்பு துண்டாவதை Blackout எனலாம். எலக்ட்ரோமேக்னடிக் அல்லது ரேடியோ அலை அல்லது வேறு ஏதாவது சிக்னலால் மின் இணைப்பில் இரைச்சல்கள் போன்றவை கலந்து விடலாம். இதை Line Noises என அழைக்கின்றனர். மிகக் குறைந்த நேரத்தில் ஏற்புடைய அளவை விட மிகக் குறைந்த அளவுடன் கூடிய வோல்டேஜ் இதனால் கிடைக்கும்.பவர் கண்டிஷனிங்:மின்சாரம் எப்போதும் சீராக வரும் என்று சொல்ல முடியாது. ஏற்ற, இறக்கத்துடன், இரைச்சல் போன்றவற்றை சுமந்து கொண்டுதான் மின்சாரம் நமக்குக் கிடைக்கிறது. Spikes, Surges, Brownouts, Blackouts, Noise என்பவை எல்லா சாதனங்களுக்கும், குறிப்பாக கம்ப்யூட்டர்களுக்கு கேடு விளைவிப்பவை. இவை இல்லாமல் சீரான மின்சாரத்தை வழங்க சில சாதனங்கள் உள்ளன. அவை கொடுக்கிற பாதுகாப்பை Power Conditioning அதாவது மின்சாரத்தை நிலைப்படுத்துதல் எனக் குறிப்பிடுகின்றனர்.பவர் கண்டிஷனிங் செய்ய என்ன தேவை?பவர் கண்டிஷனிங் செய்திட பல சாதனங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை – Surge Supressors, Spike Busters, Isolation Transformers, Servo Stabiliser, Constant Voltage Transformers or Uninterruptible Power Supply System என அழைக்கின்றனர். நாம் பயன்படுத்தும் சாதனத்திற்கேற்பவும், நமக்கு மின்சாரம் எப்படி வழங்கப்படுகிறது என்பதற் கேற்பவும் தேவையான சாதனத்தை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.எந்த சாதனம் சிறந்தது?மேற்படி சாதனங்களுள் சிறந்தது யுபிஎஸ் என்ற Uninterruptable Power Supply சாதனமே . ஸ்பைக், சர்ஜ், பிரவுன்அவுட், பிளாக்அவுட் போன்றவற்றைக் கையாளும் திறன்பெற்றது இந்த யு.பி.எஸ். ஆகும்.மின்சாரம் தடைபடும் பொழுது எப்படி யுபிஎஸ்ஸால் மின்சாரத்தை வழங்க முடியும்?யு.பி.எஸ்.ஸில் பேட்டரி உண்டு. அத்துடன் பேட்டரி சார்ஜர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவையும் யு.பி.எஸ். ஸில் உண்டு. பேட்டரியில் இருந்து வெளியாகிற Direct Current மின்சாரத்தை கம்ப்யூட்டருக்குத் தேவையான Alternating Current மின்சாரமாக மாற்றுகிற வேலையை இன்வெர்ட்டர் செய்கிறது. வழக்கமான மின் இணைப்பு தடைப்பட்டவுடன்,பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் இதனால் கம்ப்யூட்டருக்கு மின்சாரம் கிடைக்கிறது.பேட்டரி தனது சக்தியை இழந்தால் என்ன செய்ய?மின் இணைப்பு துண்டானவுடன், கம்ப்யூட்டருக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் பொறுப்பு பேட்டரியின் மேல் விழுகிறது. மின்சக்தியைத் தரத் தொடங்கும் பேட்டரி கொங்சம் கொஞ்சமாக தனது மின்சக்தியை இழந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் வழக்கமான மின்சாரம் வந்துவிட்டால் கவலையில்லை. யுபிஎஸ்ஸில் உள்ள பேட்டரி சார்ஜர், பேட்டரியை சார்ஜ் செய்ய ஆரம்பித்து விடும். மின் இணைப்பு துண்டாகி, பேட்டரியினால் கம்ப்யூட்டர் இயங்கி கொண்டிருக்கிறது. வழக்கமான மின் இணைப்பு இன்னும் வரவில்லை என வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட அளவுக்கும் கீழ் பேட்டரியின் சக்தி இறங்கி விட்டால், பலத்த ஒலியை எழுப்பி உங்களை யுபிஎஸ் எச்சரிக்கும். அப்போது கம்ப்யூட்டரை ஆப் செய்யுங்கள். யுபிஎஸ்ஸையும் ஆப் செய்யுங்கள்.எவ்வளவு நேரம் யுபிஎஸ்ஸால் மின் இணைப்பு துண்டான சூழ்நிலையில் தாக்கு பிடிக்க முடியும்?அது உங்களது யுபிஎஸ்ஸின் பேக்கப் நேரத்தைப் பொறுத்தது. 5 நிமிட பேக்கப் யு.பி.எஸ்.ஸால், மின்சாரம் துண்டான பின்பு 5 நிமிடங்கள் தாக்கு பிடிக்க முடியும். அதிக நேரம் பேக்கப் கொண்ட யுபிஎஸ்என்றால் அதன் விலை சற்று கூடுதலாக இருக்கும். பேட்டரியும் பெரியதாக இருக்கும்.பேட்டரி நேரம் போக யுபிஎஸ்ஸில் வேறு ஏதாவது கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளதா?எவ்வளவு Kilo Volt Ampere திறன் கொண்ட யுபிஎஸ் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டருக்கு 0.5கேவிஎ யுபிஎஸ் போதும். பல கம்ப்யூட்டர்களை யுபிஎஸ்ஸில் இணைப்பதாக இருந்தால் அதிக கேவிஏ கொண்ட யுபிஎஸ்ஸை வாங்க வேண்டும்.என்ன பேட்டரியை பயன்படுத்துகிறார்கள்?கார்களுக்கு பயன்படுத்துகிற பேட்டரி, லெட்-ஆசிட் பேட்டரி, நிக்கல்-காட்மியம் மற்றும் மூடப்பட்டு பராமரிப்பு தேவையற்ற பேட்டரி எனப் பல வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் மோசமானது கார் பேட்டரி. பெரும்பாலான சிறு யுபிஎஸ்களில் SMF (Sealed Maintenance Free) பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. 5 முதல் 7 வருடங்கள் வரை இவை உழைக்கும்.யு.பி.எஸ். ஸில் பிரிவுகள் உண்டா?Online, Offline or Line interactive என மூன்று வித யுபிஎஸ்கள் கிடைக்கின்றன. மின் இலாகா வழங்கும் மின்சாரம் நேரடியாக கம்ப்யூட்டருக்கு ஆஃப் லைன் யுபிஎஸ்ஸில் வழங்கப்படுகிறது. மின்சாரம் தடைப்பட்டால் மட்டுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் கம்ப்யூட்டருக்கு சீரான மின்சாரம் செல்லும். மின் இலாகா வழங்கும் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருந்தாலும், ஆன் லைன் யுபிஎஸ் எப்பொழுதுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டரை சார்ந்தே உள்ளது. இவை வழங்குற மின்சாரம் மட்டுமே கம்ப்யூட்டருக்கு அனுப்படும். Ferroresonat Transformer கொண்ட இன்டெராக்டிவ் யுபிஎஸ் சீரான வோல்டேஜை கம்ப்யூட்டருக்கு வழங்கும்.எது மலிவானது?ஆஃப்லைன் யுபிஎஸ்தான் மலிவானது. ஆன்லைன் யுபிஎஸ்ஸின் விலை மிக அதிகம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட விலையில் இன்டராக்டிவ் யுபிஎஸ் கிடைக்கும்.பிரின்டரை யுபிஎஸ்ஸில் இணைக்கலாமா?யு.பி.எஸ் ஸின் திறன் மற்றும் இணைக்கிற பிரிண்டரைப் பொறுத்து இதற்கான விடை உள்ளது. பொதுவாக லேசர் பிரின்டரை யு.பி.எஸ்.ஸில் இணைக்கக்கூடாது. மற்ற பிரின்டர்களை இணைக்கலாம். ஆனால் உங்களிடம் அதிக கே.வி.ஏ. கொண்ட யுபிஎஸ் இருக்க வேண்டும்.

சனி, 12 செப்டம்பர், 2009

மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசரை பற்றி....


ஐந்து ஆண்டுகளுக்கு முன் மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசரை அறிமுகப்படுத்திய பின் பல்வேறு சாதனைக் கற்களைக் கடந்துள்ளது. விரைவில் இன்னும் ஒரு சாதனை மகுடத்தினை அடைய உள்ளது. தன் இன்டர்நெட் பிரவுசர் பயர்பாக்ஸ் தொகுப்பினை டவுண்லோட் செய்தவர்களின் எண்ணிக்கை இருநூறு கோடியைத் தாண்ட உள்ளது. இதனைக் கண்காணித்து அறிவிக்க இணைய தளம் ஒன்றினை மொஸில்லா திறக்க இருக்கிறது. இதன் முகவரி Onebillionplusyou.com என்று அமையும்.


இதற்கிடையே ட்விட்டர் தளத்தில் பயர்பாக்ஸ் டவுண்லோட் செய்வதனை ஒவ்வொரு விநாடியும் கணக்கெடுத்து எத்தனை டவுண்லோட் ஏற்கனவே மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்று காட்டும் வகையில் ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஒவ்வொரு விநாடியும் சராசரியாக 20 பேர் வரை டவுண்லோட் செய்வார்கள் என மொஸில்லா எதிர்பார்க்கிறது. இதை எழுதும் நாளில் இருந்து இரண்டொரு நாளில் இந்த 200 கோடி எண்ணிக்கை எட்டப்படும் எனத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை பயர்பாக்ஸ்பிரவுசரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அல்ல என்றாலும், இந்த பிரவுசர் மீது நம்பிக்கை கொண்டு அதனைச் சோதித்துப் பார்க்க விரும்புவர்களின் விருப்பத்தினைத் தெரிவிப்பதாக அமைகிறது.
18 மாதங்களுக்கு முன் தான் (பிப்ரவரி 22, 2008) பயர்பாக்ஸ் டவுண்லோட் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் குறுகிய காலத்தில் 150 கோடிப் பேர் டவுண்லோட் செய்கிறார்கள் என்பது இந்த பிரவுசரின் தனித்தன்மைக்கு ஒரு பாராட்டு ஒப்புதல் என்று தான் கொள்ள வேண்டும்.
இந்த செய்தியினை எழுதுகையில் கிடைத்த எண்ணிக்கை தகவல் இதோ தரப்படுகிறது. தளத்தின்முகவரி, நாள், நேரம், டவுண்லோட் எண்ணிக்கை இங்கு காட்டப்படுகிறது.

http://www.twitter.com/FirefoxCounter 1,024,106,599 downloads at 10.9 per second on 20090823 07:24 UTC

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டதா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது ?

சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து கண்டுபிடிப்பதுஅல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.
இதன் மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப் படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும் கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும்.
இதற்கு நீங்கள் செய்யவேண்டியது மின்னஞ்சலை எழுதி முடிந்தவுடன் இந்த இணையத்தளத்துக்கு சென்று உங்கள் மினஞ்சல் முகவரியையும் உங்கள் மின்னஞ்சலுக்கான தலைப்பையும் கொடுக்க வேண்டும்
பின் Select your SpyPig tracking image என்ற இடத்தில் உள்ள எதாவது ஒரு படத்தினை தெரிவு செய்து Number of notifications to receive என்ற இடத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் பெறுபவர் எத்தனை முறை உங்கள்
மின்னஞ்சலைப் படிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவு செய்யவும்
பின் கீழ் உள்ள click to activate my spypic என்ற Button ஐக் click செய்யவும் அப்போது கீழ் உள்ள பெடடியில் நீங்கள் தெரிவு செய்த படம் தோன்றும் அந்த படத்தினை ஒரு நிமிடத்துக்குள் Copy செய்து நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு இடத்தில் paste செய்து அந்த மின்னஞ்சலை சாதரண மின்னஞ்சல் போல் அனுப்பவும். அந்த மின்னஞ்சல் திறந்து படிக்கும் போது உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!

உலக நாடுகளின் நேரங்கள்.....