வெள்ளி, 25 டிசம்பர், 2009

நாளை ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் உலக மக்களால் நினைவுகூரப்படவுள்ளது. 2004 ஆம்ஆண்டு தாயம் உள்ளிட்ட பலநாடுகளை ஆழிப்பபேரலை தாக்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தாயகத்தில் யாழ்ப்பணாம் முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட கரையோர மாவட்டங்களை தாக்கிய ஆழிப்பேரலை பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிர்களைக் காவுகொண்டது.

                                                பல பன்நாடுகளைத் தாக்கிய ஆழிப்பேரலையால் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளார்கள். இதன் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை டிசம்பர் 26ஆம் நாள் பன்னாட்டு மக்களால் நினைவுகூரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாலயம் வடமராட்கி கிழக்கில் உள்ளது. இதில் மக்கள் வணக்கம் செலுத்தவுள்ளார்கள்.

                           இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாலயங்கள் உள்ளன. ஸ்ரீலங்காப் படையினரின் வல்வளைப்பு காரணமாக ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவின் முள்ளியவளை கஜட்டையடி என்னும் இடத்திலும் புதுக்குடியிருப்பிலும் இன்நினைவாலயங்கள் தமிழ்மக்களால் கட்டப்பட்டு நினைவுகூரப்பட்டது.இம்மக்கள் தற்போது வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இன்நிலையில் முள்ளிவாய்காலில் உயிரிழந்தவர்களைகூட நினைவுகூர முடியாத அளவிற்கு ஸ்ரீலங்காப்படையினரின் அடக்கு முறைக்குள் மக்கள் அடைபட்டுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சனி, 19 டிசம்பர், 2009

தமிழீழத்துக்கான வாக்கெடுப்பினால் அதிர்ச்சி! முறியடிப்பதற்கு சிங்கள புத்திஜீவிகள் அரசுக்கு ஆலோசனை!!

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களினால் எல்லா நாடுகளிலும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு ஐக்கிய இலங்கைக்கு பாரிய ஆபத்தாக மாறவுள்ளது. ஆகவே, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைக்கு சமாந்தரமாக சிறிலங்கா அரசு வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை தேர்தல் முடிவடைந்த கையோடு வேகமாக ஆரம்பிக்கவேண்டும் என்று சிங்கள புத்திஜீவிகள் சிலர் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்துவரும் குமார் மேசஸ், வோல்டர் ஜெயவர்த்தன போன்ற சிங்கள இனவாத புத்திஜீவிகள் குழுவே இந்த ஆலோசனையை சிறிலங்கா அரசுக்கு வழங்கியுள்ளது.
அந்த ஆலோசனையில் அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் எனப்படும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிறிலங்காவில் விடுதலைப்புலிகளின் அமைப்பின் வீழ்ச்சிக்கு பின்னர் சளைத்துவிடவில்லை. தமது மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கு சர்வதேச அளவில் ஆதரவு தேடும்வகையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்திவருகிறார்கள்.
அந்தந்த நாடுகளில் உள்ள அரச அதிகாரிகளின் அனுசரணையுடன் அந்நாட்டு தேர்தல் கண்காணிப்புடன் முறையான தேர்தலாக இதனை நடத்தி அந்த முடிவுகளை அந்நாட்டு அரசுக்கு சமர்ப்பித்துவருகிறார்கள். இது அவர்களது மிகப்பெரிய ஒரு நடவடிக்கையாகவே சிறிலங்கா பார்க்கவேண்டியுள்ளது.
ஏற்கனவே இவ்வாறான தேர்தல்கள் இரண்டு நடைபற்று முடிந்துவிட்டன. இன்னொன்று எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அடுத்த 12 மாதங்களினுள் மொத்தம் நான்கு தேர்தல்களை நடத்தி முடிக்கும் நோக்குடன் துரித கதியில் புலம்பெயர்ந்துவாழும் மக்கள் செயற்பட்டுவருகிறார்கள்.
நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்ட இந்த தேர்தல் முடிவுகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் உண்மையான அபிலாஷை என்ற விடயத்தை சர்வதேச சமூகத்தை நம்பவைப்பதற்கான முயற்சியாகவே இந்த தேர்தல்கள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் பதில் நடவடிக்கை மிக மெதுவானதாகவே காணப்படுகிறது.
தேர்தல்கள் முடிவடைந்த கையோடு உடனடியா – துரித கதியில் – வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பிக்கவேண்டும். அங்கு தமிழ்மக்களின் அடையாளங்களை முற்று முழுதாகவே அழித்தொழிக்கும் வகையில் காரியங்களை நிறைவேற்றிவிட்டால், சர்வதேச ரீதியில் தமிழ்மக்களின் உணர்வுகள் இயற்கை மரணத்தை அடைந்துவிடும். அதற்கு பிறகு சிறிலங்கா அரசே ஏதாவது தமிழ் மக்களுக்கு தருவதாக அறிவித்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கமாட்டார்கள்.
சிறிலங்காவின் தேசப்பற்றாளர்கள் அனைவரும் அரசு மேற்கொள்ள வேண்டிய இந்த நடவடிக்கைக்கு வேகமாக உழைக்கவேண்டும். விடுதலைப்புலிகளை அழித்தொழித்த அதே வேகத்துடன் இந்த நடவடிக்கையும் அமையவேண்டும்.

- என்று அந்த இனவாத சிங்கள குழு அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.

வியாழன், 3 டிசம்பர், 2009

செவ்வாய், 1 டிசம்பர், 2009

உலகை ஆட்டிப்படைக்கும் எயிட்ஸ்! : இன்று சர்வதேச எயிட்ஸ் தினம்

ஓடும் இயந்திரங்களுடன் தானும் ஒரு இயந்திரமாகவே மாறிக் களைத்து போகும் மனிதன்; விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானம் - இவற்றோடு பின்னிப் பிணைந்து நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டிருக்கும் மனித குலத்தின் அபிவிருத்தி புதியதொரு வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகின்றது.

அறிவியில்,தொழில்நுட்பம், நாகரிகம் என அனைத்துத் துறைகளும் புதுமைகள் படைக்கும் களங்களாக மாறியிருக்கும் இக்காலகட்டத்தில் இவை எல்லாவற்றுக்கும் சவாலாக விளங்கும் விடயங்களும் இருக்கவே செய்கின்றன.

அதில் பிரதானமாக சொல்லப்படுபவற்றில் முக்கிய இடம் வகிப்பது `எயிட்ஸ்` எனப்படும் உயிர்க்கொல்லி நோய் என உறுதியாகக் கூறலாம்.

இயற்கையை மனிதன் வெல்ல முடியாது என்பது போல், இந்தக் கொடிய நோயையும் வெற்றிகொள்ள முடியாமல் உலகம் இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

வேற்றுக்கிரகங்களில் புகுந்து சாதனை செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானத்தால், மனிதனுக்குள் புகுந்து உயிர்க்கொலை செய்யும் இந்த கொடிய நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லையே...?

ஆம்! சர்வதேச எயிட்ஸ் தினமான இன்று இந்த நோய் எந்தளவுக்கு உலகப்பரம்பலில் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதனையும் அதன் பின்விளைவுகளால் உலகம் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் பற்றியும் கட்டாயம் தெரிந்தாக வேண்டும்.

33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோய் பீடிப்பு

உலகத்தில் 33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயுடன் வாழ்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் படி, வயதுவந்த சுமார் 31.3 மில்லியன் பேர் இந்த நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 15.7 மில்லியன் பெண்களும் அடங்குவதாக அக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதைவிட கவலைதரக் கூடிய விடயமாக கொள்ளப்படுவது எதுவெனின், காரணம் எதுவுமின்றி 2.1 மில்லியன் எண்ணிக்கையிலான சிறுவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதுதான்.

2008 ஆம் ஆண்டில் மாத்திரம் 2.7 மில் லியன் மக்கள் புதிதாக இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதுடன் 4 லட்சத்து 30ஆயிரம் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மில்லியன் மக்கள் கடந்த 2008ஆம் ஆண்டில் எயிட்ஸ் நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 2 லட்சத்து 80 ஆயிரம் சிறுவர்களும் இந்நோயால் மரணமாகியுள்ளனர்.

எனினும் கடந்த எட்டு ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டு 17 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைகளிலிருந்து தெரியவருகிறது.

இலங்கையைப் பொருத்தவரை அண்ணளவாக 15 வயதுக்கு மேற்பட்ட 4000 பேரும் 15 வயதுக்குக் குறைந்த 50 பேரும் எச்ஐவி-யினால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2008 ஆம் ஆண்டில் 1023 பேர் எயிட்ஸ் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் 2009 ஆம் ஆண்டு முதல் 9 மாதங்களில் மாத்திரம் 1127 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை சுகாதார அமைச்சின் எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

விஞ்ஞானம், மருத்துவம் உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்களிலும் புரட்சியை ஏற்படுத்தியதாக 20ஆம் நூற்றாண்டு பிரஸ்தாபிக்கப்படுகிறது. அணுவாயுதம் முதல் விண்வெளிப் பயணம் வரை காத்திரமான பல மாற்றங்கள் இந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

மருத்துவத்துறையை ஆட்டிப்படைக்கும்...

எவ்வாறாயினும் 20 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் உலக மருத்துவத் துறையை கலங்க வைத்து, இன்றுவரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நோயாக எயிட்ஸ் காணப்படுகிறது.

எயிட்ஸ் என்ற நோய்க்கு எச்.ஐ.வி. என்ற வைரஸ்தான் காரணம் என முறையான மருத்துவ பரிசோதனைகள் மூலம் 1981 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்நோய் பரவியிருக்கக் கூடிய வாய்ப்பு இருந்துள்ளது. 1981 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை 25 மில்லியன் மக்கள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்.

பொதுவாக, உடலுறவு கொள்ளுதலில் மாத்திரமே எச்ஐவி தொற்றுவதாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கிப் பழகவும் அச்சம் கொள்கிறார்கள்.

உடலுறவினால் எச்ஐவி தொற்று உண்டாவது பிரதான காரணமாக உள்ளபோதிலும் அதுமட்டும் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. ஓரினச் சேர்க்கை, இரத்தம் பரிமாறப்படுதலினூடாக பரவுதல் மற்றும் தாய் சேய் உறவினூடாக தொற்றுதல் போன்ற ஏனைய காரணங்களும் உண்டு.

இந்த வைரஸ் பீடிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகுவதன் மூலமோ அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதாலோ நோய் தொற்றி விடுவதில்லை.

ஒருவரின் உடல் திரவங்கள் மற்றொருவரின் உடல் திரவத்துடன் சேரும்போது இக்கிருமி பரவுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால்தான் உடலுறவை பிரதானப்படுத்திப் பார்க்கிறது உலகம்.

பாதுகாப்பற்ற உடலுறவு முறைகள், ஈடுபாடுகள் என்பன இந்த வைரஸை பரிமாற்றம் செய்து விடுகின்றன. அதனால் ஏற்படும் பின்விளைவு தான் ஒரு தனிமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக மரணம் வரை கொண்டு செல்கிறது.

எச்ஐவி எனும் வைரஸ் மனித உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மெதுவாக குறைக்கிறது. அதனால், ஈடுசெய்ய முடியாத பல்வேறு நோய்களால், பீடிக்கப்படும்போது அவற்றை எதிர்க்கக் கூடிய திரவச் சுரப்புகள் இன்றி மரணம் நேரிடுகிறது.

இந்தத் தொற்றுக்கு உள்ளாகிய நபர் இன்னும் பலருடன் உடலுறவுச் சேர்க்கையில் ஈடுபடுவதனால் மேலும் பலருக்கு அது பரவ ஆரம்பிக்கின்றது.

மாபெரும் சவால்

எனவேதான், உலகம் இன்று மாபெரும் சவால் ஒன்றை எதிர்நோக்கியிருக்கிறது.

இரத்தத்தில் 10 வீதம் எச்ஐவி அதிகரிப்பு ஏற்படுமாயின் அதனால் 81 வீதம் நோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படின் இந்த உயிர்க்கொல்லி நோய் மரணத்தை மேலும் துரிதப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எச்ஐவியை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள் கண்டறியப்பட்டுள்ள போதிலும், அதனை நீண்டகால நோக்கில் குணமாக்கக் கூடியதாகவோ அல்லது தொடர்ச்சியான ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாகவோ மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

போதியளவு விழிப்புணர்ச்சி இல்லாமல் இந்த நோயைத் தொடர்வதற்கு வழி செய்யப்படுமானால், குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் பாரியதொரு சனத்தொகை அழிவு ஏற்படும் என்பது மட்டும் நிச்சயம்.

நடைமுறை வாழ்வில் தன்னைத் தானே காத்துக்கொள்வதுதான் சிறந்த மருந்து என்றும் நம்பிக்கையுடனான உறவுகளை வளர்த்துக்கொள்ளுதலும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுதலும் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் மருத்துவத்துறை, உலகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

முழு உலகத்தையும் அழிப்பதற்கு மேற்குலகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஆயுதம் `எயிட்ஸ்` தான் என்றே கூறப்படுகிறது. மனித இனத்தை மெதுமெதுவாக அழித்துக் கொண்டிருக்கும் எயிட்ஸ் எனும் அரக்கனை அழிக்க ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயற்படுதலே காலத்தின் தேவையாகும்.


thanks virakesari

வெள்ளி, 27 நவம்பர், 2009

தளபதிகள் ராம் மற்றும் நகுலன் தொடர்பில் வெளியாகும் கதைகளின் உண்மைப் பின்னணி என்ன?: விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை விளக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதிகளான ராம் மற்றும் நகுலன் பற்றி அண்மைக் காலமாக வெளிவரும் கதைகளின் பின்னணியில் - அவர்களது முக்கியத்துவத்திற்கு அப்பால் அந்தக் கதைகளை வைத்து சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடாத்த முயலும் உளவியல் போரே முக்கியமானதாகும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை விளக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பாக - விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினது வெளியகப் பணிப்பிரிவின் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் இன்று விடுத்துள்ள அந்த அறிக்கை கீழே முழுமையாகத் தரப்படுகின்றது.

அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்!

எமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் பேசும் மக்களே,

எமது இயக்கத்தின் முன்னாள் தளபதிகளாக இருந்த திரு. ராம் மற்றும் திரு. நகுலன் ஆகியோர்கள் பற்றி அண்மைக் காலமாகப் பல்வேறு வகையான கதைகள் உலாவிவருவதானால் - காலத்தின் கட்டாயத் தேவையையும், அவசரத்தையும் கருத்தில் கொண்டு உண்மை நிலவரத்தை உங்களுக்கு விளக்க வேண்டியது எமது கடமை என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினராகிய நாங்கள் உணர்கின்றோம்.

இந்த விடயத்தில் - ராம் மற்றும் நகுலன் ஆகியோரது முக்கியத்துவத்திற்கு அப்பால், அவர்கள் பற்றி வெளிவரும் கதைகளின் பின்னணியில் சிறிலங்கா அரசு எமது இனத்தின் மீது நடாத்த முயலும் பெரும் உளவியல் போரே முக்கியமானதாகும். அதனை நாம் விளங்கிக் கொள்வதே அவசியமானதாகின்றது.

அந்த உளவியல் போரின் ஆழ அகலத்தையும், அந்தப் போரின் விளைவாக சிறிலங்கா அரசு ஏற்படுத்த முனையும் தாக்கத்தையும் புரிந்து கொள்வதற்கு தளபதிகள் ராம் மற்றும் நகுலன் பற்றி வெளியாகும் கதைகளின் உண்மைப் பின்னணியை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

எமது இயக்கத்தின் முன்னாள் தளபதியான ராம், கடந்த மே மாதத்துக்கு பின்னர் - தன்னுடனிருந்த சில போராளிகளுடன் அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளியேறி மட்டக்களப்பு பகுதி மறைவிடங்களில் மாறி மாறி இருந்து வந்தார். இவருடன் எமது இயக்கத்தின் இன்னொரு முன்னாள் தளபதியான நகுலனும் கூட இருந்தார்.

ஆனால், காலப்போக்கில் - வீரச்சாவுகள், காணாமல் போதல், சிங்களப் படையினரிடம் போய்விடுதல், உள் முரண்பாடுகள் போன்ற பல்வேறு காரணங்களினால் ராம் மற்றும் நகுலனுடன் இருந்த போராளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போனது.

இந்த நிலையில் - தனியாகத் தாக்குப் பிடித்து நிற்க முடியாத நிலையில் - மட்டக்களப்பில் இரகசியச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சில புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய ராம், பின்பு - அவர்களது ஏற்பாட்டில், அவர்களது உதவியுடன் - மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச மறைவிடமொன்றில் நகுலனுடன் தங்கியிருந்தார்.

இந்த நேரத்தில் - மே மற்றும் யூன் மாதங்களில் வெல்லாவெளி பகுதியில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் தங்கியிருப்பதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறை செய்திகளை வெளியிட்டது.

இந்த செய்திகளை தொடர்ந்து அடிக்கடி பல தடவைகள் இடங்களை மாற்ற வேண்டியிருந்தது. இதனால், இவர்கள் இருவரையும் பாதுகாத்து வைத்திருப்பதில் பல்வேறு சிக்கல்களை புலனாய்வுத் துறைப் போராளிகளும், இவர்களை வைத்திருந்த ஆதரவாளர்களும் எதிர்நோக்கினர்.

இத்தகைய சூழ்நிலையில் - இன்னொரு திருப்பமாக - இறுதிக் கட்டப் போரின் போது வன்னியிலிருந்து வெளியேறி வந்து வவுனியா மறைவிடமொன்றில் தங்கியிருந்த புலனாய்வுத் தறையின் மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளர் பிரபா, மட்டக்களப்பு நோக்கி நகரும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

இவருக்கு - ராம், நகுலன் ஆகியோரைப் பாதுகாப்பாக வைத்திருந்த புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் ஏற்கெனவே தொடர்பு இருந்து வந்தது. அதன் காரணமாக - அவர் ராம் மற்றும் நகுலனுடனும் தொடர்பில் இருந்தார்.

மட்டக்களப்பு நோக்கி நகரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரபா - அற்குரிய உதவியைப் பெறுவதற்காக - அப்போது திருகோணமலையில் இருந்ததாக நம்பப்படும் தவேந்திரன் என்ற புலனாய்வுத் துறைப் போராளியுடன் தொடர்பினை ஏற்படுத்தினார்.

இவற்றுக்கு அமைய - தவேந்தினின் உதவியுடன் தான் மட்டக்களப்புக்கு வந்து அவர்களைச் சந்திப்பதாக ராம் மற்றும் நகுலனிடம் பிரபா சொல்லியிருந்தார்.

இந்தத் தவேந்திரன், எற்கெனவே, முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து ஏனைய நூற்றுக்கணக்கான போராளிகளுடன் சிங்களப் படையினரிடம் சரணடைந்திருந்தவர்.

சிறிலங்கா தடுப்பு முகாம்களிலிருந்து வேறு வழிகளில் தப்பி வெளியேறிய போராளிகள் மூலமாக தவேந்திரன் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்குவதாக தகவல்கள் கசிந்திருந்தன.

இருந்த போதும் - அவர் எவ்வாறு சிறிலங்கா தடுப்பு முகாமிலிருந்து வெளியில் வந்தார் என்பது பற்றிய விபரங்கள் சரிவர ஆராய முடியாத சூழலில் - தன்னையும், ஏனைய சில போராளிகளையும் மட்டக்களப்புக்கு நகர்த்தும் ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக பிரபா தவேந்திரனைத் தொடர்பு கொண்டிருந்தார்.

இந்த இடத்தில் - இந்தத் தவேந்திரன் பற்றிய ஒரு பின்னணியைத் தெரிந்து கொள்ளுவது அவசியம்: இவரது தந்தை ஒரு சிங்களவர். இவரது சகோதரர்கள் கூட முற்றாகச் சிங்களச் சூழலிலேயே வளர்ந்து, சிங்கள இனத்திற்குள்ளேயே திருமண பந்தங்களையும் ஏற்படுத்தியவர்கள்.

தவேந்திரன் கூட மிகச் சரளமாக - சிங்களவர் போன்றே - சிங்கள மொழியைப் பேசக் கூடியவர். இந்தச் சாதகமான பின்னணிகள் காரணமா - திருகோணமலையின் சிங்களக் கிராமங்களை அண்டிய பிரதேசங்களிலேயே முன்னர் அவருக்குப் பணிகளும் வழங்கப்பட்டிருந்தன.

இத்தகைய சிங்களப் பின்னணிகள் இவருக்கு இருந்ததாலும், இந்தச் சிங்களத் தொடர்புகள் மூலமாக முன்னர் அவரால் செய்யப்பட்டிருந்த வெற்றிகரமான வேலைகளின் பெறுபேறுகளை மனதில் வைத்துக்கொண்டுமே - அவை சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் - தான் மட்டக்களப்புக்கு நகருவதற்கான உதவி தேடிய பிரபா, தவேந்திரனை நாடினார்.

செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக - திருகோணமலையிலிருந்து வேறு சில சிங்களப் பொது மக்களுடன் வாகனமொன்றில் வந்த தவேந்திரன் - குறித்த நேரத்தில், குறித்த ஒரு இடத்தில் வைத்து - பிரபா குழுவினரை ஏற்றிச் சென்றார்.

வாகனத்திற்குள் ஏறிய பின்னர் தான், அதற்குள் இருந்தவர்கள் எல்லோருமே சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் என்பது பிரபாவுக்குத் தெரியவந்தது.

மட்டக்களப்பிலிருந்த ராம் மற்றும் நகுலனை இலக்கு வைத்து சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் வவுனியாவில் மேற்கொண்ட முதல் நடடிக்கை இது.

இதன் பின்னர் - பிரபாவை வைத்து மட்டக்களப்பில் புலனாய்வுத் தறைப் போராளிகளின் பாதுகாப்பிலிருந்த தளபதிகளான ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் தொடர்புகளை ஏற்படுத்தினர்.

ஆனால் - ராம் மற்றும் நகுலனிற்கோ அல்லது அவர்களைப் பாதுகாத்த புலனாய்வுத் துறைப் போராளிகளுக்கோ பிரபா சிறிலங்கா படையினருடன் இருக்கும் விடயம் அப்போது தெரிந்திருக்கவில்லை.

ராம் மற்றும் நகுலனை வேறு ஒரு மிகப் பாதுகாப்பான இடத்திற்கு தான் நகர்த்தப் போவதாகத் தகவல் கொடுத்த பிரபா - குறித்த ஒரு இடத்தில் வேறு சில ஆட்களுடன் "ஹயஸ்" வாகனம் ஒன்றில் வந்து அவர்களை ஏற்றிச் சென்றார். தவேந்திரனும் அவருடன் வந்திருந்தார்.

பிரபாவுடன் வந்தவர்கள் அனைவருமே சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் என ராம் மற்றும் நகுலனைப் பாதுகாத்திருந்த புலனாய்வுத் தறைப் போராளிகள் கருதிய போதும், அவர்கள் தவேந்திரனின் தொடர்புச் சிங்களவர்கள் என பிரபா நம்ப வைத்தார்.

இதன் பின்னர் - எமது புலனாய்வுத் துறைப் போராளிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாதிருந்த ராம் மற்றும் நகுலன் ஆகியோர் திருகோணமலைப் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக நம்பப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்த தமிழ் செயற்பாட்டாளர்களைத் தொடர்பு கொண்ட ராம், தான் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும், அதற்கு தனக்கு நிதி மற்றும் ஆயுதங்களை ஒழுங்கு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

இதனை அவரது ஒரு வீரச்செயலாகவும், பெரும் தியாகமாகவும் கருதி யாரும் கேள்விக்கு உட்படுத்தாத வகையில் நன்கு திட்டமிட்டு சிறிலங்கா படையப் புலனாய்வுத் தறையினர் செயற்படுத்தினர்.

இந்த நேரத்தில் - திரு. செல்வராசா பத்மநாதன் (கே.பி) அவர்கள் எமது இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்த போது - சிறிலங்கா அரசு அதனை ஒரு பெரும் அபாயமாக நொக்கியது.

கே. பி. அவர்களை விட்டு வைத்தால் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஒழுங்குபடுத்தி விடுவார் என்று அஞ்சிய சிறிலங்கா அரசு ராம் அவர்களை ஒரு துரும்புச் சீட்டாகப் பாவித்து கே.பி. அவர்களை இலக்கு வைத்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு பகுதியினர் கே. பி. அவர்களின் தலைமையை ஏற்காது முரண்பட்டு இருந்த நேரத்தில் - கே.பி. அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய ராம், அவருக்கு ஆதரவு தெரிவித்ததுடன், கே. பி. அவர்களது தலைமையை ஏற்கும்படி கடிதங்களையும் எழுதினார்.

அதே நேரத்தில் - விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் இருந்த குழப்பங்கள்,மோதல்கள், பிரிவுகளைச் சாதுரியமாகப் பாவித்த சிறிலங்காவின் புலனாய்வுத் துறையினர் - ராம் அவர்களுக்கும் கே. பி. அவர்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி - நுட்பமாகக் காய்களை நகர்த்தி இறுதியில் கே. பி. அவர்களையும் கடத்தினர்.

இங்கு - ராம் மற்றும் நகுலன் ஆகியோரை சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தனித்தனியாகக் கையாண்டனரா அல்லது ஒன்றாகச் சேர்த்து வைத்து நாடகங்களை அரங்கேற்றினரா என்பது இன்னும் புலப்படவில்லை.

ஆனால் - இந்த இருவரையும் வைத்து வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் வளர்த்து, இந்தச் செயற்பாட்டாளர்கள் பற்றிய முழத் தகவல்களையும் சேகரித்துள்ளனர் என்பது மட்டும் தெளிவாகப் புலனாகின்றது.

இந்த நிலையில் - கடந்த செப்ரெம்பர் மாதத்திற்குப் பின்னர் ராம் அவர்கள் சிறிலங்காப் படையினரிடம் இருப்பது பற்றிய தகவல்கள் மெல்லக் கசியத் தொடங்கின.

அதனால் - அவரை வைத்து தாங்கள் நடாத்தி வந்த புலனாய்வுப் போர் இனிமேல் வெற்றியளிக்காது போய்விடுமோ என சிறிலங்கா புலனாய்வாளர்கள் விழி்படைந்தனர். இந்த நிலையில் - கடந்த நவம்பர் 5ஆம் திகதி மின்னேரியா சிறிலங்கா படை முகாமிலிருந்து ராம் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும், பின்னர் அவர் நவம்பர் 10 ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும் திடீரெனச் செய்திகள் வெளியாகின.

அந்த நேரத்தில் - தான் தப்பி ஓடி வந்துவிட்டதாக ராம் அவர்கள் வெளிநாட்டிலிருக்கும் எமது புலனாய்வுப் போராளி ஒருவருக்கு தொலைபேசி வழியாகச் சொன்ன கதைகள் நம்பும்படியானவையாக இருந்திருக்கவில்லை.

உண்மையிலேயே ராம் அவர்கள் தப்பி ஓடியிருந்தாரா, அல்லது ராம் அவர்கள் தமது பிடியில் இருக்கும் தகவல் கசிந்த நிலையில் புதிய வியூகம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்தும் நோக்குடன் சிறிலங்கா படையப் புலனாய்வாளர்களே அவ்வாறான ஒரு கதையைப் பரப்பினார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ராம் மற்றும் நகுலன் ஆகியோரை வைத்து சிறிலங்காப் புலனாய்வுத் துறையினர் ஆடி வரும் இந்தப் புலனாய்வுப் போரின் உச்சக் கட்டம் தான் - வரும் மாவீரர் நாள் அன்று ராம் நிகழ்த்தப் போகும் கொள்கை விளக்க உரை.

இதில் - சிறிலங்கா படையப் புலனாய்வாளர்கள் எடுத்துக்கொள்ளக் கூடிய தலைப்பு - தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களது வீரச்சாவு.

தேசியத் தலைவர் அவர்களது வீரமரணத்தை ஏற்றுக்கொண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தத் துடிப்பவர்களை ஒரு புறத்திலும், மறுமனையில் - தேசியத் தலைவர் அவர்கள் உயிருடன் வாழ்கிறார் என்று வாதிடுபவர்களையும் அணி பிரித்து மோத வைக்க எதிரி புதிய வியூகங்களை வகுக்கின்றான்.

தேசியத் தலைவர் அவர்களது வீரச்சாவு பற்றிய விடயம் இங்கே ஒரு கருவி மட்டும் தான். நோக்கம் - வெளிநாட்டுத் தமிழ் சமுதாயத்தை இன்னும் குழப்பி, அவர்களுக்கு இடையில் இருக்கும் முரண்பாட்டை வளர்த்து, அவர்களைப் பலவீனப்படுத்துவதாகும்.

இவ்வாறாக - சிறிலங்கா அரசாங்கம் எம் மீது நடாத்த முனையும் பெரும் உளவியல் போருக்குப் பலியாகிவிடாமல் தமிழ் பேசும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நாம் அன்பாக வேண்டிக் கொள்ளுகின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கதிர்காமத்தம்பி அறிவழகன்
பொறுப்பாளர்
வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத் துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்.

"விடுதலைக்காய் இன்னுயிர் தந்தவரை" நெஞ்சினில் நிறுத்தி:..................

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்

"ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது." எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும், எமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களையும் நினைவுகூரும் இப்புனித நாளில், எத்தகைய இடர்களையும் எத்தகைய துன்பங்களையும் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்போமென உறுதிபூணுவோமாக.

தேசியத்தலைவர்செவ்வாய், 24 நவம்பர், 2009

"துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்"


மீண்டும் தாயக மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.
  • இரட்டைவாய்க்கால், ,விசுவமடு, ,முள்ளியவளை,  கிளிநொச்சி, வன்னிவிளாங்குளம், ஆலம்குளம், ஈரப்பெரியகுளம், முளங்காவில், ஆட்காட்டிவெளி, பண்டிவிருச்சான், அளம்பில், உடுத்துறை, கோப்பாய், சாட்டி, கொடிகாமம், ஈச்சம்குளம், எள்ளாம் குளம்,  புதுவையாறு, மணலாறு, புடிமுகாம், தரவை, தாண்டியடி,  சுண்டலடி, வாகரை, ஆலங்குளம்,  திருமலை,  மாவடி முன்மாதிதி, கஞ்சிகுடிச்சாறு,  பெரியகுளம், தியாகவனம், கோட்டைமாவடி
என்கின்ற எங்கள் மாவீரர்களின் கோவில்கள் நிச்சயம் கருத்தரிக்கும்,

புதைகுழிகள்

போர் விதிகளை வரையறை செய்துள்ள சாசனமான, 'ஜெனீவா ஒப்பந்தம்", இரண்டாம் உலகப் போரின் பின்னர் அனைத்துலக நாடுகளாலும் ஏற்றுக் கைச்சாத்திடப்பட்டது. இதில் மருத்துவ மனைகள், கல்விக் கூடங்கள், அகதி முகாம்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை தாக்கப் படக்கூடாதவையாகவும், பொதுமக்கள், உதவி நிறுவனங்கள், நோயாளிகள் போன்ற பலர் தாக்கப் படக்கூடாதவர்களாகவும் வகைப்படுத்தி விதிகளாக ஆக்கப்பட்டுள்ளன. போர்க் கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது கூட விதியாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் கடந்த 50 ஆண்டுகளாகத் தம்மை ஆளும் அரசினாலும் மற்றவர்களாலும் சந்தித்த, இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற ஒரே இனம் என்ற வரலாற்றுச் சாதனைக்கு இலங்கைத் தமிழினம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும். இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் செய்தவர்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து – பூசி மெழுகி – உடல் அடக்கம் செய்யும் இடம் தான் புதைகுழிகள். துரையப்பா விளையாட்டரங்கு, செம்மணி, கைதடி இன்னும் எத்தனையோ? ஏன்றோ ஒருநாள் இவை அனைத்தும் தோண்டப்படும். அன்று உண்மை அம்பலமாகும் மயானத்துக்குப் போனவர்கள் நாலு பேருக்கு நன்றி சொன்னால் போதும். ஆனால் புதைகுழிக்குள் போனவர்கள் படைப் பிரிவினர்களுக்கும் அவர்களுக்கு அதிகாரம் இட்டவர்களுக்கும் பதில் சொல்லும் வரை போகவே மாட்டார்கள். உடல் தானே புதைக்கப்பட்டது. உயிரில்லையே.  • போர்கள் நடந்து முடிவில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நினைவுத் தூபிகள் போரிட்ட நாடுகளின் நகரங்களில் முக்கிய இடங்களில் நிறுவப்படும். அவற்றில் போரில் உயிர் நீத்தவர்களின் பட்டியல் செதுக்கப் பட்டிருக்கும். ஆனால் போர் நடந்து முடியும் முன்னரே போரில் மரணித்த மீட்கப் பட்ட வீரர்களின் உடல்களைப் புதைத்தும், உடல்கள் மீட்கப்படாத மரணித்த வீரர்களை நினைத்தும் வேறு வேறு கிராமங்களில் தேர்ந்தெடுத்த இடங்களில் தூபிகளை அமைத்து – எம் வீரர்கள் மரணிக்கவில்லை. அவர்கள் இந்த இல்லங்களில் துயில்கிறார்கள். அவர்களின் உடல்கள் இங்கே விதைக்கப்பட்டிருக்கின்றன – என்ற ஒரு புதிய சித்தாந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கினர். இந்தச் சித்தாந்தத்தை விளக்கிட 'விரித்திட விரித்திடப் பொருள் பலவாய் வெளிவந்தன வந்தன வந்தனவே" என்று பாரதியின் 'தம்பி கழற்றிடக் கழற்றிட துணி புதிதாய் வளர்ந்தன வளர்ந்தனவே" பாஞ்சாலி சபத வரிகளிடம் அடி எடுக்கலாம் எனத் தோன்றுகிறது.


  •  
உடல்கள் விதைகள் என்றால் விதைத்த சில நாட்களில் அவை முளைத்துவிடும். அதாவது ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது பல போராளிகளல்லாதோர் மனங்களில் அந்த விதை வேர் விடுகிறது. போராளிகள் முளைப்பார்கள். ஓரணு உயிரினம் பலவாக Multiple Fission of cells என்ற வகையில் பெருகுவது போல. இது மேலே சொன்ன சித்தாந்தத்தின் ஒரு விரிவு.

அருச்சுனன் அபிமன்யுவுக்குச் சுபத்திரையின் கர்ப்பத்தில் இருக்கும் போதே வியூகங்களை உடைத்துச் செல்வதைக் கற்பித்தது போல, எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கர்ப்பத்திலேயே ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது, அவன் வித்துடல் துயிலும் இல்லங்களில் தகுந்த மரியாதையுடன் விதைக்கப் படும்போது, பல போராளிகள் வேர் விடுவார்கள். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் வேறொரு விரிவு.

எம் இன விடுதலைக்கு இந்த இளம் வயதில் போராளிகள் வாழ்வை அனுபவிக்காது உயிரைக் கொடுத்தார்களே! நாம் என்ன செய்தோம்? ஏன்ற வினாவை துயிலும் இல்லங்களுக்குச் செல்பவர்களின் உயிர்களில் கரைத்துவிடுகிறது. வேர் விடுகிறது. போராளிகள் மரணிக்கவில்லை. என்றால்தானே மறைந்த போராளிகளின் உயிர்கள் அங்கு செல்பவர்களின் உயிர்களுடன் உறவாட முடியும். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் பிறிதொரு முடிவு.  • மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தி ஒரு புறம் கோயில்கள் இடிக்கப்படுகின்றன என்ற வேதனை மறுபுறம். இச்செய்கையின் விளைவு செய்தவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறதே என்ற அவர்களின் அறியாமையைப் பார்த்த பரிதாபம். மறைந்த போராளிகளின் விதைகளில் முளைத்த மரங்கள் வெட்ட வெட்டத் துளிர்ப்பவை. அந்த மரங்கள் வேரோடு சாய்த்தாலும் நிலத்திலிருந்து முழுமையாகப் பிடுங்கப்படாத தும்பு வேர்களிலிருந்தும் முளைப்பவை.
'யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி" ஆனால், போராளிகளோ இருந்தால் ஆயிரம் பொன். இறந்தாலோ பல்லாயிரம் பொன். நினைவுகள் சிதைக்கப்பட்டால் கோடி பொன் என்பது புதுமொழி. இல்லை இல்லை. மேலே கூறிய சித்தாந்தத்தின் இன்னுமொரு விரிவு.
ஒரு கோயில் கட்டுவதன் தாக்கத்தை விட அதை இடிப்பதன் தாக்கம் பல மடங்கு கூடியது. தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு கண்ணகி சிலை உடைக்கப்பட்டதன் தாக்கத்தைப் போன்றது. இதற்கு உதாரணமாக குழந்தையின் கையில் கரடிப் பொம்மை (Teddy Bear) என்று வேறொருவர் கூறியதைக் கலைஞரால் மெல்லவும் முடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை. எப்படி அது சமிக்கும். இதே நிலையில் தான் ஈழத் தமிழ் நெஞ்சங்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தியைக் கேட்டுக் கொதிக்கின்

மீண்டும் அந்த மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.சனி, 14 நவம்பர், 2009

கார்த்திகை 27 ல் நாங்களும் தீபம் ஏற்றுவோம்..................தமிழ மக்களின் விடிவுக்காய் தமது இன்னுயிரை அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள். தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரனின் தமிழீழ இலட்-சியம் கனவாகிவிடாமல் அதனை நனவாக்கப் புறப்பட்டு எதிரியுடன் மறப்போர் புரிந்து மண்ணிலும், கடலிலும் தம் உடல்களை வித்தா-க்கிவிட்ட இளைஞர்களும் யுவதிகளும் தமிழ மக்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள். இது தமிழ் மக்களுக்கான வரலா-ற்றுக் கடமையும் கூட. 27.11.1982 ல் தனது இன்னுயிரைத் தமிழ் மண்ணுக்காய் ஈந்த முதலாவது மாவீரர் சத்தியநாதன் என்னும் லெப்ரினன்ட் சங்கரின் உயிர் தியாகம் பெற்ற நாளை மாவீரர் தினமாக தலைவர் பிரகடனம் செய்து கார்த்திகை 27ஐ தமிழ் மக்களின் பொதுப் பிரார்த்தனை தினமாக தமிழ் மக்கள் அனுஸ்டத்து வருவது அவர்கள் மாவீரர்களில் கொண்ட மதிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தீபம் ஏற்ற இங்கே சொடுக்குங்கள்..http://november27.net/

சாதனை மனிதன்.............


"சந்திரனில் தண்ணீர்" நாஸா அறிவிப்பு   பூமியின் துணைக்கோளான சந்திரனில் தண்ணீர் இருப்பதாக நாஸா ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீண்டகாலமாக இந்த ஆராய்ச்சி இடம்பெற்றுவந்ததாகவும் அண்மைய ஆய்வுகளால் ஆதாரத்துடன் நிரூபிக்கக் கூடியதாக உள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

"சந்திரனில் தண்ணீர் உண்டு என்பதை நாம் கண்டுபிடித்துள்ளோம். மிகுந்த சந்தோசத்துடன் இந்தத் தகவலை உலகுக்கு கூறுகிறோம்" என நாஸா ஆய்வுநிலையத்தின் திட்டமிடல் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானி எந்தனி கொலபிரேட் தெரிவித்துள்ளார்.

ஆய்வின் புதியதொரு பக்கம் திறந்திருக்கிறது எனக் குறிப்பிடும் எந்தனி, தண்ணீர் அதிகம் இருப்பதை தமது செயற்கைக் கோள்களில் தெளிவாக காட்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.


Related VideoE-mail to a friend 

செவ்வாய், 10 நவம்பர், 2009

WIN.........வின்டோஸ் 7 வெற்றி பாதையில்.....


கூகிளின் வளர்ச்சியால் தலையை சொறிந்து கொண்டிருந்த மைக்கிரோசொப்ருக்கு கொஞ்சம் ஆறுதலான விடயம் அண்மையில் அதனால் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்ட Windows 7 விற்பனை கொடிகட்டி பறப்பதுதான்.

பெருமளவான Vista மற்றும் Windows XP பாவனையாளர்கள் Windows 7 க்கு மாறிவருவது குறிப்பிடத்தக்கது. ஐப்பசி 22 ல் Windows 7 வெளியிடப்பட்ட பிறகு அதன் விற்பனை, 2007 தை மாதத்தில் Windows Vista வெளியிடப்பட்டபோது அதன் விற்பனையிலும் பார்க்க 234% உயர்வாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

Net Application எனும் நிறுவனம் அண்மையில் கணிணி இயங்கு தளங்களின் பாவனை தொடர்பாக, இணைய உலாவிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு மேற்கொண்ட ஆய்வொன்றில், NetApplication நிறுவனத்தால் ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து கணினி களிலும் கார்த்திகை 1 ம் திகதி 3.6% ஆனவை Windows 7 இயங்குதளத்தை கொண்டிருந்த்து. இது Windows 7 உத்தியோகமாக வெளியிடப்பட்ட ஐப்பசி 22 ல் 1.99% ஆகவும் அதற்கு முன்னைய தினம் 21 ல் 1.89% ஆகவும் இருந்த்தாக கூறப்படுகிறது.

2009 ஐப்பசி மாதம் எல்லா வகையான இயங்கு தளங்களை கொண்டிருந்த கணினிகள் 92.52%. சோகம் என்னவென்றால் இது 2008 மார்கழி மாதம் 94% ஆக இருந்தது தான்.

Mac OS X -5.27 %
Linux at -0.96 %

அமேசன் இணையதளத்தில் Windows 7 க்கு செய்யப்பட்ட முற்பதிவுகளின் எண்ணிக்கை, 2007ல் வெளிவந்த ஹரிப்பொட்டர் புத்தகங்களின் இறுதிப்பாகமான Harry Potter and the Deathly Hallows, புத்தகத்திற்கு செய்யப்பட்ட முற்பதிவுகளின் எண்ணிக்கை யிலும் பார்க்க அதிகம் என அமேசன் இணையதளம் தெரிவித்திருக்கிறது என்றால் பாருங்களேன்.

பிரித்தானியாவின் பிரபலமான guardian.co.uk இணையத்தளம் தனது தளத்துக்கு வருகை தருபவர்களில் Windows 7 பாவனையாளர்களின் எண்ணிக்கை Linux பாவனையாளர்களை மிஞ்சியிருப்பதாக அறிவித்திருக்கிறது. கடந்த காலங்களில் Windows 7 பாவனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வந்ததுடன் ஜூன் மாதம் இது முதன்முறையாக Iphone பாவனையாளர்களை முந்தியிருந்ததாக guardian இணையத்தளம் மேலும் தெரிவித்திருக்கிறது.

Windows 7 ன் இந்த வெற்றிக்கு காரணம் இது Windows Vista உடன் ஒப்பிடும் போது நல்ல வேகம் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு கொண்டிருப்பதுடன் குறைந்த விலையில் கிடைப்பது மற்றும் சாதாரண தர கணினி, களிலும் நிறுவகூடியதாக இருப்பதுதான்.

கூகிள் மற்றும் அப்பிள் கம்பனிகளுடன் கடும் போட்டியில் இருக்கும் மைக்கிரோசொப்ருக்கு Windows 7 கொஞ்சமாவது ஆறுதலை கொடுத்திருக்கும்.
thanks{lankasri.com

கைகளுக்குள் வரும் இன்டர்நெட்..........3

அதென்ன தகவல் பாக்கெட்?

இன்டர்நெட் என்பது "பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்' என அழைக்கப் படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் "சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்' என அழைக்கப்படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன் படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடுத்துககாட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால் சிறு சிறு பலகைகளை, மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை அமைத்திருப்பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன.

ஒவ்வொரு ஹெடரிலும் செக்சம் (Checksum) எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது. இப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது? நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர், டொமைன் நேம் சர்வர் (Domain Name Server DNS) என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன.

கைகளுக்குள் வரும் இன்டர்நெட்.........2

நாம் ஓர் இணையதளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது. இதற்கு புரோட்டோகால் (Protocol) என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட் டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர்கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை–பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி – ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.

இன்டர்நெட்டில் இணைக்கப் படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 விலிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது, உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஓர் ஐ.எஸ்.பி., ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால், அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்ட ரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol)என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின்ச் செயல்பாடு. ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.

கைகளுக்குள் வரும் இன்டர்நெட்..........1

உலக அளவில் இணைக்கப்பட்ட பல கம்ப்யூட்டர்களை நாம் இன்டர்நெட் என அழைக்கிறோம். ஆனால் இமைப்பொழுதில் எப்படி எங்கோ ஒரு மூலையில் உள்ள கம்ப்யூட்டர் சர்வரில் உள்ள தகவல்கள் நம் கம்ப்யூட்டரை வந்தடைகின்றன? இன்டர்நெட்டை முதலில் பயன்படுத்தும் அனைவரின் மனதிலும் இந்த சந்தேகம், வியப்பு எழுவது இயற்கையே. ஒரு சிலர் மேலும் துருவி ஆய்வு செய்து, நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்கின்றனர். சிலரோ அதுதான் இன்டர்நெட் என்று கிடைக்கும் தகவல்களைப் பற்றிய சுவராஸ்யத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். இங்கு அந்த இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம். நம் கைகளுக்குள் உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தகவல்கள், படங்கள், வீடியோக்கள் எப்படி நம் இல்லத்தில் ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டருக்குள் வருகிறது என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரை இயக்கி, இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து, பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் – இன்டர் நெட்எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், சபாரி, குரோம், – என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை "கிளையண்ட்" என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்" என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியேஅனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்" என்னும் அதி வேக வழியில் செல்கிறது. இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்" என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.

மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்


வாழைப்பழம் – எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம்.
வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.

அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 200 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் காலை, மதியம், இரவில் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு உட்கொள்ள வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு அவர்களிடம் எந்த திறன் மேம்பட்டு இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள்.

அந்த ஆய்வில், உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிட்ட அனைத்து மாணவர்களது மூளையின் செயல்பாட்டுத் திறனும் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை, அப்போது நடந்த அந்த மாணவர்களது தேர்வு முடிவும் உறுதி செய்தது.

அதாவது, அந்த தேர்வில் மேற்படி மாணவர்கள் அனைவரும் வழக்கமாக பெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது என்பதால், நீங்களும் குறைந்த விலையில் எளிதாக எங்கும் கிடைக்கும் வாழைப்பழத்தை தினமும் வாங்கி சாப்பிடலாமே…............

வெள்ளி, 6 நவம்பர், 2009

விண்டோஸ் இயக்கம் தொடங்குகையில் ஏதேனும் புதிய பிரச்னை ஏற்படுகிறதா?


விண்டோஸ் இயக்கம் தொடங்குகையில் ஏதேனும் புதிய பிரச்னை ஏற்படுகிறதா? வழக்கத்தைக் காட்டிலும் தாமதாகத் தயாராகிறதா? இது உங்கள் கம்ப்யூட்டர் தொடங்குகையில் ஸ்டார்ட் அப் மூலம் தயார் நிலையில் வைக்கும் புரோகிராம்களினால் ஏற்படுவது. உங்களை அறியாமல் இன்ஸ்டால் செய்திடும் புரோகிராம்கள் பல தொடக்கத்திலேயே தயாராகும்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய புரோகிராம்கள் இப்போது உங்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.

எனவே உங்களுக்கு எந்த புரோகிராம்கள் தேவை என்று பார்த்து அவற்றை மட்டும் இயங்கும்படி செலக்டிவ் ஸ்டார்ட் அப் தயார் செய்திடலாம். அதற்கான வழியினை விண்டோஸ் தருகிறது. அதனை இங்கு காண்போம்

1.ஸ்டார்ட் பட்டன் அழுத்தி ரன் விண்டோவினைப் பெறவும்.

2.இந்த விண்டோவில் “msconfig” என டைப் செய்திடவும்.

3.கிடைக்கும் விண்டோவில் General” என்ற டேபில் கிளிக் செய்திடவும்.

4.இதில் “Selective Startup” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

5.இதில் பல பிரிவுகள் சிறிய கட்டங்களுடன் இருக்கும். இந்த டிக் அடையாளங்களை எடுத்துவிடவும்.

6.முதல் கட்டத்தில் மட்டும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ரீ பூட் செய்திடவும்.

7.பின் மீண்டும் அடுத்ததில் மட்டும் டிக் அடையாளம் ஏற்படுத்தி இதே போல் ரீ பூட் செய்திடவும்.

வரிசையாக இவ்வாறு செயல்படுகையில் பிரச்னை இருக்கும் புரோகிராம் உங்களுக்குத் தெரியவரும். அது உங்களுக்கு வேண்டுமா என்று பார்க்கவும். இப்படியே தேவயற்ற புரோகிராம்களுக்கு எதிரே உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிட்டு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து பூட் செய்திடவும்.

இனி எந்த சிரமமுமின்றி விண்டோஸ் இயங்கத் தொடங்கும். தேவையில்லாமல் உங்கள் ராம் மெமரியும் வீணாகாது.இதை ஒவ்வொன்றாக செய்வது நேரம் எடுக்கும் செயல் என்று நீங்கள் நினைத்தால் பாதி பாதியாக தேர்ந்தெடுத்து ரீபூட் செய்திடலாம். பின் எந்த பாதியில் பிரச்னை உள்ளது என்று பார்த்து அதில் ஒவ்வொன்றாக இறங்கலாம். இது போல ஸ்டார்ட் அப் புரோகிராம்களை சுத்தம் செய்வது ஷட் டவுண் செய்வதில் உள்ள பிரச்னைகளையும் தீர்த்துவிடும்.

மூளையை வளர்க்கும் இணைய தேடல்..............

  
இண்டெர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா?
முதல் தலைமுறை இண்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட்டல் தலைமுறை.இரண்டாவது தலைமுறை இண்டெர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை.30 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க வேண்டும்.

மூன்றாவ‌து த‌லைமுறை இண்டெர்நெட் என்றாலே ப‌ய‌ந்து ஒதுங்கி கொள்ளும் முத்த‌ த‌லைமுறை.விதிவிலக்கான‌ ஒரு சில‌ரைத்த‌விர‌ பெரும்பாலான‌ தாத்தா பாட்டிக‌ளை இந்த‌ பிரிவில் தான் சேர்க்க‌ வேண்டும்.

இப்ப‌டி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்ப‌ம் என்று க‌ருதக்கூடிய‌ தாத்த‌க்க‌ளுக்கும் பாட்டிக‌ளுக்கும் இண்டெர்நெட்டை அறிமுக‌ம் செய்து வைப்ப‌தை விட‌ பெரிய‌ சேவை வேறு இருக்க‌ முடியாது தெரியுமா?

இண்டெர்நெட் அறிமுக‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு புதிய‌ உல‌கை திற‌ந்துவிடும் என்ப‌து ஒருபுற‌ம் இருக்க‌ அது அவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கும் என்ப‌தே விஷ‌ய‌ம்.அதாவ‌து இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ ப‌யிற்சியாக‌ அமையும் என‌ தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அதிக‌ம் இல்லை ஒரு வார‌ கால‌ம் கூகுல் தேட‌லில் எடுப‌ட்டாலே போதும் பெரிய‌வ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு சுறுசுறுப்பாகி முடிவெடுக்கும் ம‌ற்றும் புரிந்து கொள்ளும் ஆற்ற‌ல் மேம்ப‌டுபவ‌தாக‌ க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டுள்ள‌து.

அமெரிக்காவைச்சேர்ந்த‌ யுசிஎல்ஏ என்னும் அமைப்பு இது தொட‌ர்பான‌ ஆய்வை ந‌ட‌த்தியுள்ள‌து.55 வ‌ய‌து முத‌ல் 78 வ‌ய‌தான‌வ‌ர்க‌ளை கொண்டு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட இந்த‌ ஆய்வில் எப் எம் ஆர் ஐ ஸ்கான் முறையில் முளையின் செய்ல்பாடு ஆல‌சி ஆராய‌ப்ப‌ட்ட‌து. ஆய்வில் ப‌ங்கேற்றோர் இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்தும் போது அவ‌ர்க‌ள் மூலையில் நிக‌ழும் ராசாய‌ண‌ மாறுத‌ல்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

அப்போது தேடலில் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு மிக‌வும் சுறுசுறுப்பாக‌ இருப்ப‌து க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து.முளையில் முடிவெடுக்க‌ ப‌ய‌ன்ப‌டும் ப‌குதியில் இந்த‌ செய‌ல்பாடு அமைந்திருந்த‌தை ஆய்வால‌ர்க‌ள் க‌வ‌னித்துள்ள‌ன‌ர்.

இந்த‌ வ‌கை செய‌ல்பாடு முடிவெடுப்ப‌து ம‌ற்றும் புரிந்து கொள்ளுத‌லில் முக்கிய‌ பாங்காற்றும் என்று க‌ருத‌ப்ப‌டுகிற‌து.என‌வே இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ ப‌யிற்சியாக‌ அமையும் என்று க‌ருதப்ப‌டுகிற‌து.ஒரு வார‌ கால‌ம் தேட‌லில் ஈடுப‌ட்டாலே போதுமான‌து என்றும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அல்சைம‌ர்ஸ் போன்ற‌ நினைவுத்திற‌ன் குறைபாட்டினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இணைய‌ தேடல் உத‌வ‌லாம் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

என‌வே உங்க‌ள் வீட்டில் பெரிய‌வ‌ர்க‌ள் இருந்து அவ‌ர்க‌ள் இண்டெர்நெட் விஷ‌ய‌த்தில் ப‌ய‌ந்தாங்கொலிக‌ளாக‌ இருந்தால் அவ‌ர்க‌ளுக்கு இண்டெர்நெட்டை க‌ற்றுக்கொடுப்ப‌து மிக‌ச்சிற‌ந்த‌ உத‌வியாக‌ இருக்கும்.

வியாழன், 5 நவம்பர், 2009

டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்.....................


உங்களால் நம்பமுடியவில்லையா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ கணினி வேலைகளை செய்வதற்கு கம்ப்யூட்டருக்கு தனி எல்.சி.டி மானிட்டரும், டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு தனி எல்.சி.டி மானிட்டரும் வைத்து இடத்தை அடைத்துக் கொண்டிருப்போம்.

இனி அந்த தொல்லை இல்லை.டிவியையும் பார்த்துக்கொண்டு,கணினி வேலைகளையும் செய்து கொள்ள வசதியாக கொரியா நாட்டை சேர்ந்த எல்ஜி நிறுவனம் உலகத்திலேயே முதல் முறையாக எல்.சி.டி.டி.வி மானிடரை சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

நாம் தனியாக FULL HD வசதியுள்ள எல்.சி.டி டிவி வாங்கவேண்டுமென்றால் குறைந்தது 35,000 ரூபாய் என்ற விலையில் வாங்க வேண்டும். ஆனால் எல்.ஜி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த மானிடர் 12,990 என்ற ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது. அதிலும் FULL HD தொழில்நுட்பம் கொண்ட மானிடர்கள் 15,750 என்ற விலையிலேயே கிடைக்கிறது.

சரி இந்த டிவியில் படம் பார்த்துக்கொண்டே கணினி வேலைகளை எப்படி செய்வது என்று நீங்கள் கேட்கலாம்.அதற்கு நீங்கள் இந்த படத்தை பாருங்கள்.

வெப் முகவரிகளுக்கு பெரும் பஞ்சம் வரும்- ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை

புதிய தலைமுறை வெப் முகவரிகளுக்கு உலக நாடுகள் மாறா விட்டால் அடுத்த ஆண்டு வெப் முகவரிகளுக்கு பெரும் பஞ்சம் ஏற்படும் என ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய கமிஷன் கூறுகையில், இன்டர்நெட் புரோட்டோகால் வெர்சன் 6 அல்லது ஐபிவி6 (IPv6) தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டிய அவசரம், அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான வெப் முகவரிகளை உருவாக்க முடியும்.

ஐபிவி6 தயாராகி பத்து வருடங்களாகி விட்டது. இதன் மூலம் 340 டிரில்லியன் வெப் முகவரிகளைத் தர முடியும். ஆனால் தற்போது உள்ள ஐபிவி4 தொழில்நுட்பத்திலிருந்து, ஐபிவி6க்கு மாற வெகு சில வர்த்தக நிறுவனங்களே தயாராக உள்ளன.

ஆனால் புதிய தொழில்நுட்பத்துக்கு விரைவில் வர்த்தக நிறுவனங்கள் மாறுவது அவசியம், அவசரம். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு வெப் முகவரிகளை ஒதுக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு இணையதளத்துக்கும் ஐபி முகவரி உண்டு. இது எண்களால் குறிப்பிடப்படப்படுகிறது. (உ.ம்) - 192.168.1.1. ஐபி முகவரி கொடுக்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில், நினைவில் கொள்ளும் வகையில் வேறு பெயர்கள் சூட்டப்படுகின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள ஐபிவி4 தொழில்நுட்பம், 32 பிட் முகவரிகளைக் கொண்டதாக உள்ளது. இதன் மூலம் 4.3 பில்லியன் வெப் முகவரிகளை கையாள முடியும். ஆனால் ஐபிவி 6 தொழில்நுட்பம் 128 பிட் கொண்டதாகும். இதன் மூலம் பல பில்லியன் புதிய வெப் முகவரிகளை உருவாக்க முடியும்.

ஐபிவி6 தொழில்நுட்பம் குறித்து ஐரோப்பா, மேற்கு ஆசியா, ஆசியாவைச் சேர்ந்த 610 அரசு, கல்வி மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களிடம் கருத்து அறியப்பட்டது. இதில் வெறும் 17 சதவீதம் பேர்தான் ஐபிவி6க்கு ஆதரவாக கருத்தளித்துள்ளனர் என்கிறது ஐரோப்பிய ஆணையம்.

இன்டர்நெட்டின் வளர்ச்சிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு மெதுவாக மாறி விடுவதுதான் நல்லது என்கிறது இந்த ஆணையம்.

இதுகுறித்து ஆணையத்தின் தகவல் தொடர்பு செயலாளர் டெட்லெப் எக்கெர்ட் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சமூக, பொருளாதார துறைகளில் இன்டர்நெட் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகி விட்டது. விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

எனவே ஐபிவி6 தொழில்நுட்பத்திற்கு மாறுவதே அனைவருக்கும் நல்லது, குறிப்பாக இன்டர்நெட்டுக்கு நல்லது


நன்றி லங்கா சிறி

புதன், 21 அக்டோபர், 2009

செயற்கை இதயம் - மிகக் குறைந்த விலையில்

மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. கரப்பான் பூச்சியின் இதயமோ 13 அறைகளைக் கொண்டது.
இந்த அமைப்பினால் புவியில் அதிககாலம் தொடர்ந்து கொண்டிருக்கும் உயிரினமாக இருக்கின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு ஐந்து அறைகள் கொண்ட செயற்கை மனித இதயத்தை, கரக்பூர் ஐ.ஐ.டி. புரபஸர் சுஜாய் குஹர் என்பவர் உருவாக்கியிருக்கிறார்.

பரிசோதனைகள் முடிந்து வெற்றி பெறும் தறுவாயில் இருக்கும் முயற்சி கைகூடினால் மிகக் குறைந்த விலையிலும் இருக்கும். அமெரிக்காவில் முப்பது லட்சங்களுக்குக் கிடைக்கும் செயற்றை இதயமானது ஒரு லட்சம் ரூபாவுக்குக் கிடைக்கும்.

இன்றைய நிலையில் உலக அளவில் சுமார் இரண்டு கோடி பேர் செயற்கை இதயத்திற்கான தேவையுடன் உள்ளனர். சுமார் முப்பது சதவீதத்தினரே தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.சமீப காலமாக இந்திய மருத்துவச்சேவை சிறந்து வருகிறது. உலகத் தரம் வாய்ந்த அறுவைச் சிகிச்சைகள் இங்கு நடைபெறுகின்றன. சென்னை முக்கிய இடத்தை வகிப்பது குறிப்பிடப்பட வேண்டியது.எளிய மக்களுக்கும் எல்லாம் கிடைத்தால் நன்றாயிருக்கும். தமிழக அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நல்வரவாய்த் தெரிகிறது. வழக்கமான முறைகேடுகள் இன்றி மக்கள் பயனடைந்தால் மக்கள் பயன்பெறலாம்.

வெள்ளி, 9 அக்டோபர், 2009

ரேபிட் ஷேர் ப்ரீமியம் இலவசமாக.......


நாம் பல ஆன் லைனில் பெறும் கோப்புகள் பெரும்பாலும் rapidshare, megaupload, hotfile போன்ற file sharing தளங்களில் பதிவிறக்கும் வகையிலேயே கிடைக்கின்றன. அவை இலவச பயனர்களுக்கு பதிவிறக்கத்திற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எனவே அதிக கோப்புகளை பதிவிறக்க முடிவதில்லை. இதற்கென rapidshare premium link generator தளங்கள் பல இணையத்தில் இலவச சேவையாக premium லிங்க் களை அளிக்கின்றன.

நான் இணையத்தில் தேடியபோது கிடைத்த ஒரு தளம் அனைத்து file sharing premium account களுக்கான premium லிங்கை இலவசமாக அளிக்கிறது.

www.rapid8.com இதன் வழியாக 7 தளங்களின் premium லிங்கை இலவசமாக பெற முடியும்.

இதில் நீங்கள் பதிவிறக்க வேண்டிய கோப்பின் url ஐ கொடுத்து டவுன்லோடை க்ளிக் செய்யவும்.

இதன் மூலமாக ஒரே நேரத்தில் பல கோப்புகளை பதிவிறக்க முடியும் , மேலும் டவுன்லோடு மேனேஜர் மூலம் பல பாகமாக பிரித்து வேகமாகவும் செய்ய முடியம். மேலும் இது resume supported டவுன்லோடிங்கை தருகிறது.

Trial சாப்ட்வேரை எளிதாக கிராக் செய்யுங்கள்...


இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் பல பயனுள்ள மென்பொருட்கள் trial ஆகவே உள்ளது. எனவே இதனை சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது.
ஒவ்வொரு முறை நாம் அந்த மென்பொருளை பயன்படுத்த ஆரம்பிக்கும் போதும் அது நம் கணிணியின் தேதியையும் அந்த மென்பொருள் பதியப்பட்ட தேதியையும் ஒப்பிடுகிறது. நமது கணிணியின் தேதி trial தேதிக்குள் இருந்தால் பயன்படுத்த அனுமதிக்கிறது. நமது கணிணியின் தேதியை trial நாளுக்குள் இருக்குமாறு செய்ய Run As Date என்கிற மென்பொருள் பயன்படுகிறது. இதனை Windows 2000, XP, 2003 and Vista ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.


நீங்கள் பதியும் மென்பொருளின் தேதியை நினைவு வைத்துக்கொள்ளவும்,
பின்னர் அதன் trial period முடியும் வரை இதனை சாதாரணமாக பயன்படுத்தலாம்.
Trial period முடிவதற்கு ஒரு நாள் முன்பு Run As Date மென்பொருளை இயக்கவும்.
பெரும்பாலான மென்பொருட்களை இதனைக்கொண்டு பயன்படுத்த முடியும்.

எந்த தளத்தை ஹேக் பண்ணணும்....

ஹேக் பண்ணுறது ரொம்ப பெரிய விஷயம்னு நெனைச்சீங்களா?
கீழே இருக்குற ஸ்டெப்ப எல்லாம் அப்படியே பண்ணுங்க, நீங்களும் ஹேக்கர் ஆயிடலாம்,

முதல்ல எந்த தளத்தை ஹேக் பண்ணணுமோ அதை ஓப்பன் பண்ணுங்க, (எ.கா www.orkut.com )

அடுத்து கீழே இருக்குற ஸ்க்ரிப்ட்-ஐ அப்படியே காப்பி பண்ணி அட்ரஸ் பார்ல அடிங்க,

javascript: document.body.contentEditable = 'true'; document.designMode = 'on'; void 0.


அடுத்து ஜாலியா எடிட் பண்ணுங்க....

அப்புறம்....

வியாழன், 8 அக்டோபர், 2009

டிவிடி படங்களை எப்படி நகல் எடுப்பது?

இந்த காலத்தில் சாதாரண குறுந்தகடுகளின் விலையிலும் வீழ்ச்சி அவற்றில் எழுதும் கருவிகளின் விலையிலும் வீழ்ச்சி. கொஞ்ச காலத்துக்கு முன் எட்டாக்கனியாக புதுப்பெண்ணாக மினிக்கி கொண்டிருந்த டிவிடிகளும் இந்த காலத்தில் சகஜமாக மலிந்து விட்டன. டிவிடி எழுதிகளும் மிக மிக குறைவான விலைகளில் கிடைக்க ஆரம்பித்து விட்டன. காலம் செல்ல செல்ல இந்த டிவிடி எனப்படும் டிஜிட்டல் வீடியோ (வெர்சடைல்) டிஸ்க்குகளும் மலிவாகி விடும்(இப்போது ஒருவர் வாங்கும் திறனுக்குள்ளே தான் இருக்கிறது. இருந்தாலும் சாதாரண சிடிக்களை ஒப்பிடும் போது டிவிடி விலை அதிகம்).

DVD+r, DVD-r, DVD+RW, DVD-RW என்று பலவடிவங்களில் டிவிடி டிஸ்குகள் விற்கப்படுகின்றன. அவற்றுக்கு என்ன வித்தியாசம் என்பதை விவாதிக்க அல்ல இந்த கட்டுரை. இந்த கால டிவிடி எழுதிகள் ஆக எல்லா வகை டிவிடிகளிலும் எழுதும் திறன் பெற்றுள்ளது. சாதாரணமான குறுந்தகடுகள் 700MB அல்லது 750MB கொள்ளளவு கொண்டதாக இருக்கும். ஆனால் பொதுவாக டிவிடி குறுந்தகடுகள் 4.7GB கொள்ளவு கொண்டதாக இருக்கும். மார்க்கெட்டில் இது ஏரளமாக கிடைக்கிறது. அதுவும் போக டிவிடியில் இரண்டு அடுக்கு (double layer) டிவிடி என்ற மற்றொரு வகை உண்டு. இந்த வகையில் 9.4GB-க்கு மேல் விசயங்களை ஒரே (பெருந்)தகடில் அடக்கி விடலாம். இதன் விலையும் அதிகம். மார்க்கெட்டிலும் குறைவாக தான் கிடைக்கிறது.

இப்போது ஒரிஜினல் டிவிடியில் இருக்கும் திரைப்படங்களை நகல் எடுத்துக் கொள்ள வேண்டுமானால் இரண்டு பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்.

1. முதலாவது பெரும்பான்மையான படங்கள் இரண்டு அடுக்கு டிவிடியில் தான் வெளியிடப்படுகிறது. அதன் கொள்ளளவு 9.4GB-க்கு மேல் இருப்பதால் உங்களிடம் இருக்கும் 4.7GB சாதாரண டிவிடி குறுந்தகடில் அடுக்குவது கடினம்.

2. ஒரிஜினல் சினிமா டிவிடிகள் சூட்சும சூத்திரத்தில் (encryption) உள்ளடக்கி வைக்கப்பட்டிருக்கும். அதனால் டிவிடியில் வரும் விசயங்களை வன் தகடில் நகல் எடுக்கவோ, இல்லை இன்னொரு டிவிடியில் நேரடி நகல் எடுக்கவோ முடியாது.

மேல் சொன்ன டிவிடி நகல் பிரச்சனைகளுக்கு மென்பொருள் தான் தீர்வு கொடுக்க வேண்டும். நான் பயன்படுத்துகிற வரையில் DVD shrink என்ற மென்பொருள் அருமையாக இருக்கிறது. DVD Shrink பற்றிய சின்ன விளக்கம்.

1. சாதரணமாக எல்லா சினிமா டிவிடிகளிலும் மெயின் சினிமா போக, அந்த படம் எடுக்கப்பட்டது எப்படி? இயக்குநரின் செவ்வி, அது போக ட்ரெய்லர்கள் சில சமயம் கேம்கள் என பலவிசயங்களும் இணைக்கப்பட்டிருக்கும். DVD shrink மென்பொருள் உங்களுக்கு தேவையான தலைப்புகளை(title) மட்டும் நகல் எடுத்துக் கொள்ள உதவுகிறது. தேவையில்லாததை விட்டு விடும் போது சேமிப்பு கொள்ளளவும் குறைவாகவே தேவைப்படும்.

2. ஒரு வேளை உங்களுக்கு சினிமா டிவிடியில் இருக்கும் எல்லா விசயங்களும் வேண்டுமென்றாலும் இந்த மென்பொருள் 4.7GB அளவுக்கு படத்தை சுருக்கிக் கொடுக்கும். சுருக்கும் அல்காரிதத்தால் (compression algorithm) படத்தின் குவாலிட்டி அடிபட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த மென்பொருளில் அருமையான அல்காரிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான் இந்த மென்பொருளை அனுபவித்த வரையில் படத்தின் குவாலிட்டியில் சொல்லத் தகுந்த தரக்குறைவு ஏற்ப்பட்டதில்லை.

3. இந்த மென்பொருளின் உள்ளே கட்டமைக்கப்பட்டுள்ள சூட்சும அவிழி (decrypt algorithm) அல்காரிதம் அருமை. எல்லாவித டிவிடிகளையும் கண்டுக்கொண்டு தடைகளை உடைக்கிறது.

4. அது போக டிவிடி சினிமா தகடுகளில் பிராந்திய (Region) பிரச்சனை ஒன்று இருக்கிறது. சில பிராந்திய டிவிடி படங்களை சில டிவிடி ப்ளேயர்கள் கண்டுக் கொள்வதில்லை.இந்த மென்பொருள் Region Free-ஆக மாற்றுவதற்கும் உதவுகிறது.
5. வன் தகடில் உங்கள் தேவையான அளவுக்கு சுருக்கி பிறகு 4.7GB அளவுள்ள டிவிடி குறுந்தகடில் எழுதுவதற்கு உங்களுக்கு நீரோ போன்ற எழுதி மென்பொருள்கள் தேவைப்படும்.

டிவிடி வட்டுக்களை கண்டுக் கொள்ள கட்டாயம் உங்களிடம் டிவிடி ட்ரைவ் இருக்கவேண்டும். உங்களிடம் பவர் புஃல் ஆன கணி இருந்தால் மட்டுமே சீக்கிரம் வேலை முடியும். என்னுடைய 2.4GHz , 768MB கணியில் ஒரு சினிமா டிவியை நகல் எடுக்க 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக DVD shrink மென்பொருள் இலவசம். அதை இங்கிருந்து தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

http://www.dvdshrink.org/where.html

வேறும் 1.04MB அளவே உள்ள நிறுவி (setup) . பயன்பாடு பற்றிய விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

http://www.dvdshrink.info/guides.php

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

விரும்பிய மென்பொருட்களின் Serial No பெறுவது எவ்வாறு?


ஒரு
மென்பொருளை தரவிறக்கி விட்டு அதன் Serial No, Crack போன்றவற்றை ஒவ்வொரு
தளமாக தேடுபவரா நீங்கள் ? கண்ட கண்ட வைரஸ் தளங்களுக்கு சென்று வைரஸ் ஐ ஏன்
விலைக்கு வாங்குகிறீர்கள்? இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு
தளத்துக்கும் போகாமல் Serial No, Crack போன்றவற்றை எடுப்பத்துக்கு
உத்தவுவது தான்
Craagle என்ற இந்த மென்பொருள்.
இந்த
மென்பொருளில் நீங்கள் தேட வேண்டிய மென்பொருளின் பெயரையும் அதன் Version
ஐ உம் கொடுக்க வேண்டியது தான் அது தானாகவே தளங்களில் தேடி உங்களுக்கு
வேண்டிய மென்பொருளின் Serial No, Crack என்பவற்றை வரிசைப்படுத்தும் அதில்
Right click செய்து
download செய்ய வேண்டியதது தான் உங்கள் வேலை.

சில Antivirus Software கள் இம்மென்பொருளை adware என தடுக்கலாம் ஆனால் நீங்கள் பயமில்லாமல் பயன்படுத்தலாம் உங்கள் Computer க்கு எந்த பிரச்சனையும் வராது.

இது சட்டவிரோதமானது தயவுசெய்து இதை கல்வி பயன்பாட்டுக்காக மட்டும் பயன்படுத்தவும்.

இணையத்தில் கிடைக்கும் இலவச சேவைகள்

இலவச மென்பொருட்கள்...

தினமும் ஒவ்வொரு பெறுமதியான மென்பொருட்கள் இலவசமாக (சட்டரீதியாக) வழங்கப்படுகிறது. மறுநாள் அம் மென்பொருளை நீங்கள் பணம் செலுத்தி தான் பெற முடியும்
தள முகவரி : http://www.giveawayoftheday.com/


யாருடைய இணையத்தளம்...

நாம் பார்க்கும் இணையத்தளமானது யாருக்கு சொந்தமானது, யாருடைய பெயரில் டொமைன் பதிவுசெய்யப்பட்டுள்ளது, எந்த Server இல் இயங்குகிறது எவ்வளவு காலத்துக்கு டொமைன் பதிவு செயப்பட்டிருக்கிறது என்பவற்றை அறிய (.COM, .NET, .EDU மட்டும்)
தள முகவரி : http://www.allwhois.com/


DHTML Source code...

இணையத்தளம் வடிவமைப்போருக்கு மிகவும் பயனள்ள தளம் DHTML Source code போன்றவற்றை இலவசமாக டவுன்லோட் செய்யலாம்
தள முகவரி : http://www.getelementbyid.com/

உங்கள் வலைப்பதிவுக்கு தேவையான Guest Book போன்றவற்றை...

உங்கள் வலைப்பதிவுக்கு தேவையான Guest Book, Email Forms, Message Forum,போன்றவற்றை இலகுவாக உருவாக்கி உங்கள் வலைப்பூவில் இணைப்பதற்கு
தள முகவரி : http://www.bravenet.com/

Online இல் Icon களை வடிவாமைப்பதட்கு...

Online
இல் உங்களுக்கு தேவையான Icon களை வடிவாமைப்பதற்கு உதவும் தளம் இதில்
நீங்கள் உங்களுக்கு தேவையான படத்தை Upload பண்ணி அப்படத்தையும் Icon ஆக
மாற்றலாம்
தள முகவரி : http://www.rw-designer.com/online_icon_maker.php

இணையத்தில் கிடைக்கும் இலவச சேவைகள்

சுருக்க குறியீடுகளை அறிய...

எந்தவொரு சுருக்கக் குறியீட்டின் விரிவாக்கத்தை அறிவதற்கு acronymfinder என்ற இணையம் உதவுகிறது
உதாரணமாக XML என தேடினால் eXtensible Markup Language என சட்டென்று விடை கிடைக்கும்
தள முகவரி : http://www.acronymfinder.com/

விண்டோஸ் நுட்பங்கள் அறிய...

பெரும்பாலான
கணணிப் பயனாளர்கள் Windows இயக்க முறையையே பயன்படுத்துகிறார்கள் விண்டோஸ்
சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு அவற்றுக்கான
உதவிக்குறிப்புகள் மற்றும் விண்டோஸ் பற்றிய புதிய விடயங்களை அறிந்து
கொள்வதற்கு.
தள முகவரி : http://windowssecrets.com/

பீட்டா பதிப்புகளை அறிய...
எந்தவொரு
மென்பொருளானாலும் அதனை எந்தவொரு நிறுவனமும் உடன சந்தைக்கு அனுப்பாது
முதற்கட்டமாக வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டுக்காக முழுமை செய்யப்படாத
பதிப்பான Beta பதிப்பையே வெளிவிடுகிறது. இவ்வாறன பதிப்புக்களை அறிந்து
கொள்வதற்கு.
தள முகவரி : http://www.betanews.com/

இணைய மொழிகளைக் கற்றுக் கொள்ள...

HTML, XHTML, XML, PHP, WML, CSS, ASP போன்ற இணைய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு மிக சிறந்த தளம்
தள முகவரி :http://www.w3schools.com/

தமிழ் - ஆங்கிலம், தமிழ் - ஜேர்மன், ஜேர்மன் - தமிழ் அகராதி


ஆங்கில சொற்களுக்கு தமிழ் கருத்துக்களும், தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கிலம்,
ஜேர்மன் கருத்துக்களும், ஜேர்மன் சொற்களுக்கு தமிழ்க் கருத்துக்கள் கூறும்
பேரகராதி. சுமார் 17357 சொற்தொடர்கள், பழமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தள முகவரி : http://www.tamildict.com/

தொழில்நுட்ப உதவிகளுக்கு...

கணணியை
பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் இவ்வாறான சிக்கல்கள்
ஏற்படும் நேரங்களில் கேள்விகளைக் கேட்டு திருத்தமான பதில்களை பெற்று
அவ்வாறான சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியும்
தள முகவரி :http://techguy.org/

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!

உலக நாடுகளின் நேரங்கள்.....