ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் உலக மக்களால் நினைவுகூரப்படவுள்ளது. 2004 ஆம்ஆண்டு தாயம் உள்ளிட்ட பலநாடுகளை ஆழிப்பபேரலை தாக்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தாயகத்தில் யாழ்ப்பணாம் முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட கரையோர மாவட்டங்களை தாக்கிய ஆழிப்பேரலை பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிர்களைக் காவுகொண்டது.
பல பன்நாடுகளைத் தாக்கிய ஆழிப்பேரலையால் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளார்கள். இதன் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை டிசம்பர் 26ஆம் நாள் பன்னாட்டு மக்களால் நினைவுகூரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாலயம் வடமராட்கி கிழக்கில் உள்ளது. இதில் மக்கள் வணக்கம் செலுத்தவுள்ளார்கள்.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாலயங்கள் உள்ளன. ஸ்ரீலங்காப் படையினரின் வல்வளைப்பு காரணமாக ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவின் முள்ளியவளை கஜட்டையடி என்னும் இடத்திலும் புதுக்குடியிருப்பிலும் இன்நினைவாலயங்கள் தமிழ்மக்களால் கட்டப்பட்டு நினைவுகூரப்பட்டது.இம்மக்கள் தற்போது வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இன்நிலையில் முள்ளிவாய்காலில் உயிரிழந்தவர்களைகூட நினைவுகூர முடியாத அளவிற்கு ஸ்ரீலங்காப்படையினரின் அடக்கு முறைக்குள் மக்கள் அடைபட்டுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக