புதிய தலைமுறை வெப் முகவரிகளுக்கு உலக நாடுகள் மாறா விட்டால் அடுத்த ஆண்டு வெப் முகவரிகளுக்கு பெரும் பஞ்சம் ஏற்படும் என ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய கமிஷன் கூறுகையில், இன்டர்நெட் புரோட்டோகால் வெர்சன் 6 அல்லது ஐபிவி6 (IPv6) தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டிய அவசரம், அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான வெப் முகவரிகளை உருவாக்க முடியும்.
ஐபிவி6 தயாராகி பத்து வருடங்களாகி விட்டது. இதன் மூலம் 340 டிரில்லியன் வெப் முகவரிகளைத் தர முடியும். ஆனால் தற்போது உள்ள ஐபிவி4 தொழில்நுட்பத்திலிருந்து, ஐபிவி6க்கு மாற வெகு சில வர்த்தக நிறுவனங்களே தயாராக உள்ளன.
ஆனால் புதிய தொழில்நுட்பத்துக்கு விரைவில் வர்த்தக நிறுவனங்கள் மாறுவது அவசியம், அவசரம். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு வெப் முகவரிகளை ஒதுக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு இணையதளத்துக்கும் ஐபி முகவரி உண்டு. இது எண்களால் குறிப்பிடப்படப்படுகிறது. (உ.ம்) - 192.168.1.1. ஐபி முகவரி கொடுக்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில், நினைவில் கொள்ளும் வகையில் வேறு பெயர்கள் சூட்டப்படுகின்றன.
தற்போது நடைமுறையில் உள்ள ஐபிவி4 தொழில்நுட்பம், 32 பிட் முகவரிகளைக் கொண்டதாக உள்ளது. இதன் மூலம் 4.3 பில்லியன் வெப் முகவரிகளை கையாள முடியும். ஆனால் ஐபிவி 6 தொழில்நுட்பம் 128 பிட் கொண்டதாகும். இதன் மூலம் பல பில்லியன் புதிய வெப் முகவரிகளை உருவாக்க முடியும்.
ஐபிவி6 தொழில்நுட்பம் குறித்து ஐரோப்பா, மேற்கு ஆசியா, ஆசியாவைச் சேர்ந்த 610 அரசு, கல்வி மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களிடம் கருத்து அறியப்பட்டது. இதில் வெறும் 17 சதவீதம் பேர்தான் ஐபிவி6க்கு ஆதரவாக கருத்தளித்துள்ளனர் என்கிறது ஐரோப்பிய ஆணையம்.
இன்டர்நெட்டின் வளர்ச்சிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு மெதுவாக மாறி விடுவதுதான் நல்லது என்கிறது இந்த ஆணையம்.
இதுகுறித்து ஆணையத்தின் தகவல் தொடர்பு செயலாளர் டெட்லெப் எக்கெர்ட் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சமூக, பொருளாதார துறைகளில் இன்டர்நெட் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகி விட்டது. விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
எனவே ஐபிவி6 தொழில்நுட்பத்திற்கு மாறுவதே அனைவருக்கும் நல்லது, குறிப்பாக இன்டர்நெட்டுக்கு நல்லது
நன்றி லங்கா சிறி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக