மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. கரப்பான் பூச்சியின் இதயமோ 13 அறைகளைக் கொண்டது.
இந்த அமைப்பினால் புவியில் அதிககாலம் தொடர்ந்து கொண்டிருக்கும் உயிரினமாக இருக்கின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு ஐந்து அறைகள் கொண்ட செயற்கை மனித இதயத்தை, கரக்பூர் ஐ.ஐ.டி. புரபஸர் சுஜாய் குஹர் என்பவர் உருவாக்கியிருக்கிறார்.
பரிசோதனைகள் முடிந்து வெற்றி பெறும் தறுவாயில் இருக்கும் முயற்சி கைகூடினால் மிகக் குறைந்த விலையிலும் இருக்கும். அமெரிக்காவில் முப்பது லட்சங்களுக்குக் கிடைக்கும் செயற்றை இதயமானது ஒரு லட்சம் ரூபாவுக்குக் கிடைக்கும்.
இன்றைய நிலையில் உலக அளவில் சுமார் இரண்டு கோடி பேர் செயற்கை இதயத்திற்கான தேவையுடன் உள்ளனர். சுமார் முப்பது சதவீதத்தினரே தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.சமீப காலமாக இந்திய மருத்துவச்சேவை சிறந்து வருகிறது. உலகத் தரம் வாய்ந்த அறுவைச் சிகிச்சைகள் இங்கு நடைபெறுகின்றன. சென்னை முக்கிய இடத்தை வகிப்பது குறிப்பிடப்பட வேண்டியது.எளிய மக்களுக்கும் எல்லாம் கிடைத்தால் நன்றாயிருக்கும். தமிழக அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நல்வரவாய்த் தெரிகிறது. வழக்கமான முறைகேடுகள் இன்றி மக்கள் பயனடைந்தால் மக்கள் பயன்பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக