நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் மாற்று வடிவமேயாகும் எனச் சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழக சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத, விரிவுரையாளர் றொகான் குணரட்ண எச்சரிக்கை விடுத்துள் ளார். நெடியவன் தலைமையில் இயங்கி வரும் க்ளோபல் தமிழ் போரம் என்ற அமைப்பு மிகவும் ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ ராஜ்ஜியத்தை உரு வாக்க முனைப்புக் காட்டி வரும் உருத்திர குமாரனை விடவும் நெடியவன் ஆபத்தானவர் என அவர் கூறியுள்ளார். உருத்திரகுமாரன் இலங்கை அரசாங்கத் துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள் ளக் கூடிய அரசியல் சாணக்கியத்தைக் கொண்டவர்.எனவே நெடியவனின் ஜீ.ரீ.எப். அமைப்பின் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ ராஜ்ஜிய உருவாக்கத் திற்கு ஆதரவாக வாக்களித்த 90 வீதமான வர்கள் இலங்கைப் பிரஜைகள் அல்ல எனவும் அவர்கள் ஒருபோதும் இலங்கைக்குத் திரும்ப மாட் டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஜீ.ரீ.எப். அமைப்புப் போன்றே பி.ரீ.எப். அமைப்பும் மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்களை வழங்க வேண்டும் என்பது குறித்துப் பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்வுக்குத் தெளிவான விளக்கம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக எந்த நேரத்தில் ஆயுதப் போ ராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எந்த நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்பது குறித்துக் கோத்தபாய விளக்கத்துடன் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவை ஏற்பட்டால் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கோத்தபாய தயங்க மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் மேற்குலக நாடுகள் கவனிக்கத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக