பேருந்து நண்பனை வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்தபோது அவன் வீட்டில் இருந்தவர்களை மயங்கச் செய்து அங்கிருந்த நகை மற்றும் பணத்தை அபகரித்துச் சென்றுள்ளான்.இச் சம்பவம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், 2 ஆம் குறுக்குத் தெருவில் இடம்பெற் றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியாவிலுள்ள கால்நடை வைத்திய நிலையம் ஒன்றுக்குச் சென்று திரும்பிய பிரஸ்தாப நபருடன் யாழ்.நோக்கி வந்த பஸ் ஸில் பயணித்த இளைஞன் ஒருவன் நட்பை ஏற்படுத்தி அவருடன் சுவாரஸ்யமாகப் பேசியுள்ளான்.இதனையடுத்து பிரஸ்தாப நபரிடம் தனக்கு யாழ்ப்பாணம் தெரியாது என்றும் அதனைப் பார்ப்ப தற்குத்தான் வருவதாகவும் கூறியுள்ளார்.
இளைஞனின் வஞ்சகமில்லாத பேச்சு வார்த்தை யினால் கவர்ந்த அவர், யாழ்ப்பாணத்தில் உள்ள எனது வீட்டில் தங்கலாம் என கூறியுள்ளார். இதில் ஆனந்தம் அடைந்த அவ் இளைஞன் அப்பிள், ஒரேஞ் பழங்களை அவர் வீட்டுக்கு வாங்கிக்கொடுத்துள்ளார். அத்துடன் இரவு நேரச் சாப்பாட்டினை மேசையின் மேல் வைத்து விட்டு வீட்டுக்காரர்கள் வெளியே சென்ற வேளை அதில் மயக்க மருந்தினைத் தெளித்துள்ளார்.
அதனை உண்ட வீட்டில் உள்ளவர்கள் மயக்க முறவே வீட்டில் இருந்த கையடக்கத் தொலைபேசி, ஒரு தொகைப் பணம், பவுண் என்பவற்றை அபகரித் துத்தப்பிச் சென்றுள்ளான்.
அவ் உணவை உண்ட இருவர் நேற்று மதியம் வரை மயக்கம் தெளியாததனை யடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் 2 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஏ.சிந்துஜன் (வயது-14), திருமதி என்.சிவானந்தன் (வயது- 35) என்பவர்களே மயக்க மடைந்தவர்கள் ஆவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக