
ஜி.எல்.பீரிஸ் அங்கு மேலும் தெரிவித் தவை வருமாறு:
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒருவருட காலத்துக்குப் பின்னர், அமெ ரிக்க இலங்கை உறவுகளை வலுப்படுத் துவதற்கான விடயங்களில், அமெரிக்கா அக்கறை காட்டுவதை நாங்கள் எந்த வகை யிலும் எதிர்க்க வில்லை. இதனை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இது குறித்து நாங் கள் முறையிடவில்லை. ஆனால் மனித உரிமை விடயங்களில் அளவுக்கு அதிக மாக அக்கறை காட்டுவதை இயன்றளவு குறைத்துக்கொள்ளுங்கள்.
இதேவேளை, அமெரிக்காவுடனான எமது உறவு ஒரு பரிமாணத்தை மாத்திரம் கொண்டதாக அமையக்கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செய்யக்கூடிய வேறு பல விடயங்கள் உள் ளன.
யுத்தத்தை வெல்வது போன்று சமாதானத்தை வெல்வதும் மிகக் கடினமான விடயம்.
அதேவேளை, யுத்தகால அவசரகாலச் சட்டத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தமை, அதிகளவு சுதந்திரத்தை வழங்கி யுள்ளமை, தேசிய நல்லிணக்க ஆணைக் குழுவை அமைத்துள்ளமை போன்ற இலங்கை அரசின் நடவடிக்கைகளை அங் கீகரித்துப் பாராட்டவேண்டும்.
மிகக் குறுகிய காலத்துக்குள் இலங்கை யில் நிகழ்ந்துள்ள மாற்றங்களின் அளவை அமெரிக்கா அங்கீகரிக்கவேண்டும்.
இலங்கையில் புதிய நம்பிக்கையு ணர்வு காணப்படுகின்றது. முழு நாடும் புத்துயிர் பெறுகின்றது. பெருமளவில் உல் லாசப் பயணிகள் வரத் தொடங்கியுள் ளனர். என அவர் குறிப்பிட்டுள் ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக