நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வு, இன்று மே மாதம் 17 திகதி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகிறது
இவ் ஆரம்ப நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை எமது இணையத்தளமாகிய www.govtamileelam.org ஊடாக ஒளிபரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறோம்.
இவ் ஒளிபரப்பு பிலடெல்பியா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பிப்பதால் ரொறன்ரோ நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், பிரித்தானியா நேரப்படி மாலை 6 மணிக்கும், ஐரோப்பிய நேரப்படி மாலை 7 மணிக்கும் ஒளிபரப்பு ஆரம்பமாகும்.
வெளியீடு: அனைத்துலகச் செயலகம்
தொடர்புகளுக்கு: info@govtamileelam.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக