இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வுகாணுமாறு, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் நேரடியாக வற்புறுத்தப்பட்டுள்ளதாகத் தக வல் வெளியாகி உள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ் ரானில் நடைபெற்ற ஜி 15 நாடுகளின் உச்சி மாநாட் டின்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா, அமைச்சர் பீரிஸிடம் இது விடய மாகப் பேசினார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
சகல சமூகத்தினரும் சம பங்களிப்புச் செய்யக் கூடிய அரசியல் தீர்வு ஒன்று தேவை என்பது குறித்தே இந்திய அமைச்சர் பிரஸ்தாபித்ததாகவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
இலங்கையின் சிறுபான்மை இனத்தவரான தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு அவசரமாகத் தீர்வு காணவேண்டும் என்ற எமது விருப்பத்தை இலங்கை யிடம் வற்புறுத்தியுள்ளோம் என்று அமைச்சர் கிருஷ் ணாவே தெரிவித்திருக்கிறார்.
மேற்கண்ட தகவல்களில் இரண்டு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவையாகக் கருதக் கூடியவை. இனப்பிரச்சினைக்கு அவசரமாகத் தீர்வு காணப்படவேண்டும் என்று இந்தியா வலியு றுத்தி இருப்பது ஒன்று. சகல சமூகத்தினரும் சமமா கப் பங்களிப்புச் செய்யக்கூடிய அரசியல் தீர்வு குறித்து இந்தியா ஆராய்ந்துள்ளதான தகவல் இரண்டாவது.
இவற்றின் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் இந்தியாவுக்குச் செல்வார் என்ற செய்தியும் கிடைத்திருக்கிறது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண் டும் என்பதில் இந்தியா காட்டும் கரிசனை வரவேற் கத்தக்கது. ஆனால் இலங்கை விரைவான தீர்வு ஒன் றைக் கொண்டு வருவதில் ஆர்வம் கொண்டுள்ளது என்பதற்கான சமிக்ஞை எதுவும் இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் குழுக்களை நியமித்து அவற்றில் காலத்தை இழுத்தடித்து இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சர்வதேச சமூகம் மற்றும் அரசாங்கங்களின் எதிர்பார்ப்பின் வேகத்தைத் தணித்து விடுவதும்
அதன் பின்னர், தனக்குச் சாதகமான நிலையை உருவாக்குவதற்கு வழமை போன்று பல ""கயிறு திரிப்புகளை'' அவிழ்த்து விடுவதும்
வேகம் தணிந்த பின்னர் வெறும் பெயருக்குத் தான் நினைத்த உப்புச் சப்பற்ற தீர்வு ஒன்றை நாடா ளுமன்றத்தில் சமர்ப்பித்து தனக்குள்ள ""அசுர'' வாக் குப் பலத்தைப் பயன்படுத்தி அதனை நிறைவேற்றி விட்டு
எமது நாட்டு மக்களின் அவர்களின் பிரதிநிதி களின் பெருவிருப்பத்துடன் இனப் பிரச்சினைக்கு "இந்தத் தீர்வு' சட்டமாக்கப்பட்டுள்ளது. இதுவே நாட் டுக்கு உகந்தது என்று கூறி தமிழர்களுக்குச் சம அந் தஸ்தோ, சுயாட்சி அதிகாரமோ இல்லாத வெறும் அர சியல் சக்கை ஒன்றை இலங்கை அரசு ஒப்புக்குக் காட்டிக் கொள்ளும்.
இந்தியாவைத் திருப்திப்படுத்தும் பொருட்டு அங்கு நடைமுறையில் உள்ள ஆகக் குறைந்த அரசியல் அதிகாரம் கொண்ட அமைப்புக்குப் புதிய பெயர் சூட்டி முலாம் பூசிக்காட்டவே இலங்கை அரசு முயலுமென நிறையவே எதிர்பார்க்கலாம்.
இதனைவிட வேறு எந்த விதத்திலும் தமிழ் மக் களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் விதத்தில் அவர்களும் இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்று என்பதனை ஏற்றுக் கொண்டு திருப்தி தரக்கூடிய போக்கு எதுவும் மஹிந்த அரசிடம் இருந்து தென்படவில்லை.
இத்தகையதொரு பின்னணியில் இந்தியா விரும் பும் சிறிதளவு நியாயமுள்ள தீர்வைத்தானும் இலங்கை உருவாக்குமா என்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் சந்தேகமாகவே உள்ளது.
இந்தியா தானும் தனது நாட்டில் உள்ளது போன்று அரைச் சமஷ்டி அரசியல் முறைமையையே ஆகக் கூடியதாக வலியுறுத்தும் என எதிர்பார்க்கலாம். அதற்கு மேல் அரை சென்ரி மீற்றர் கூட அதிகமாகச் சிபார்சு செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது.
இலங்கையில் பூரண சமஷ்டி அமைப்பு ஒன்றை, உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கு மாறு இலங்கையை வலியுறுத்துமானால் ஏற்கனவே அங்குள்ள மாநிலங்கள் ""தொந்தரவு கொடுக்கும்'' என்ற அச்சம் இந்திய மத்திய அரசிடம் உண்டு.
ஆகவே இலங்கைத் தமிழ் மக்களின் உரிமை களை வழங்குவது குறித்த இலங்கை இந்தியப் பேச்சுக்கள் தமிழர்களின் உண்மையான, முழுமை யான அரசியல் உரிமைகளை வழங்க வகை செய்யும் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறுவதற்குரிய சாதக மான ஏதுக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக