கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வல்லுறவு என்ற பட்டோலை யாழ்.குடாநாட்டில் சோழர்காலத்துக் கல்வெட்டுப்போல பொறிக்கப் பட வேண்டிய விடயமாகிவிட்டன. அந்ததளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. மலையக மக்கள் இரத்தம் உறுஞ்சும் அட்டை க்கு பழக்கப்பட்டுப் போனதுபோல, யாழ்ப்பாண மக்கள் கடத்தல், களவு என்ற கொடூரத்திற்கு பழக்கப்பட வேண்டிய துர்ப்பாக்கியம்.
நிலைமை இந்தளவு தூரம் முனைப்பு பெறுவதற்கு குடாநாட்டின் குழப்ப நிலையே காரண மெனலாம். அதாவது வன்னியில் யுத்தம் நடந்து கொண் டிருந்த காலம் தொட்டு இன்று வரை நீடித்து வரும் தொலைபேசி மிரட்டல்கள், எச்சரிக்கை கள் குடாநாட்டை குழப்பிவிட்டன. சாதாரணமாக இரண்டு இளைஞர்கள் சேர்ந்து விட்டால், தாம் நினைத்த எவருக்கும் கையடக்கத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடமுடியும் என்ற நிலைமை முற்றிவிட்டது.
தொலைபேசி மிரட்டல் குறித்து பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மிரண்டு போய் உள்ளவர்களை மிரட்டும் பணியை விசாரணை என்ற பெயரில் செய்தமையால், முறைப்பாட்டில் நம்பிக்கை இழக்க வேண்டிய தாயிற்று. இத்தகைய பொதுவான களநிலைமை தனிப்பட்ட கோபதாபங்களை நிறைவேற்றுவதற்கு பேருதவியாகியுள்ளது. குடாநாட்டில் நடந்த கடத்தல் சம்பவங்களை ஆராயும் போது அவற்றில் பெரும்பகுதி நண்பர் களால், குடும்ப உறுப்பினர்களால், தனிப்பட்ட பகையாளர்களால் செய்யப்பட்டதை அறியமுடி கின்றது.
தனிப்பட்ட பகைமையில் நடக்கின்ற கடத்தல் சம்பவங்கள் பொதுமைப்படுத்தப்பட்டு குடா நாட்டு மக்கள் பயப்பீதியில் உறைந்து போவ தற்கும், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருக்கின்ற தமிழ் உறவுகள் யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கும் தடை செய்கின்றன. குடாநாட்டில் இருக்கக் கூடிய பாதுகாப்பற்ற நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் தனிப்பட்ட பகையாளர்கள் தொடர்பில் பொலிஸார் அசமந்தம் காட்டுவார்களாயின் எதிர்கால நிலை மையும் வேதனைக்குரியதாகவே இருக்கும்.
தமிழனாய் துணிவுடன் எழுதும் பதிவர்களில் நீங்கள் குறிப்பிடக்கூடியவர்..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் இதே பாணியில் பணியை தொடருங்கள்
வாழ்த்துக்கள்...