ஞாயிறு, 16 மே, 2010
மஹிந்த அரசின் புதிய அறிவிப்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகம்! காலத்தை இழுத்தடிக்கும் பம்மாத்து என அரியநேத்திரன் காட்டம்
இனப்பிரச்சினைக்கான அடிப்படைகளை ஆராய்ந்து தேசிய நல்லிணக்கம் காண்பதற்காக அரசு நியமிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நல்லி ணக்க ஆணைக் குழு, தமிழ்மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் நாடகத் தின் ஓர் அங்கம். அது ஒரு பம்மாத்து ஏற்பாடு. காலத்தை இழுத்தடிக்க
யாழ்ப்பாணம்,may 16
இனப்பிரச்சினைக்கான அடிப்படைகளை ஆராய்ந்து தேசிய நல்லிணக்கம் காண்பதற்காக அரசு நியமிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நல்லி ணக்க ஆணைக் குழு, தமிழ்மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் நாடகத் தின் ஓர் அங்கம். அது ஒரு பம்மாத்து ஏற்பாடு. காலத்தை இழுத்தடிக்க எடுத்துள்ள நடவடிக்கையாகவே இந்தக் குழுவை நோக்கவேண்டியுள்ளது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சாடுகின்றார்.
பிரச்சினைகளின் அடிப்படைகளை ஆராய்ந்து தேசிய நல்லிணக்கம் காண 7பேர் கொண்ட ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கவுள்ளார் என்று அமைச் சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துத் தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு நேற்று உதயனுக்குத் தெரிவித்தார்.
இது விடயமாக அவர் மேலும் தெரி வித்தவை வருமாறு: இலங்கை சுதந்திரம் அடைந்தாகாக கூறப்படும் 1948முதல் கடந்த 61வருடகாலமாகபல்வேறு ஒப் பந்தங்களை தமிழ்மக்களுடன் செய்து கொண்ட தெற்குத் தலைமைகள், இப் போது தமிழர் பிரச்சினை குறித்து ஆராய ஆணைக்குழு நியமிக்க முன்வருவது வேடிக்கையான விடயமாகும்.
தந்தை செல்வா பண்டா ஒப்பந்தம், தந்தை செல்வா டல்லி ஒப்பந்தம் என இரு ஒப்பந்தங்கள் பிரதான இரு கட்சி களுடன் செய்யப்பட்டன. அதன் பின்னர் திம்புப் பேச்சுவார்த்தை, இலங்கை இந் திய ஒப்பந்தம், விடுதலைப் புலிகளுக் கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், தன்னாட்சி அதி காரசபை, சுனாமி மீள் கட்டமைப்பு உடன் பாடு, அனைத்துக்கட்சி தெரிவுக்குழு, நிபுணர்குழு என காலத்துக்குக் காலம் தமி ழர் பிரச்சினைகள் தொடர்பான எத்த னையோ உடன்பாடுகள் வந்து போயின.
கடந்த 61வருடகாலத்தில் வந்துபோன அந்த உடன்பாடுகளின் மூலம் தமிழர் பிரச்சினைக்குரிய மூல காரணத்தை கண் டறிய முடியாத அரசு, இப்போது புதிதாக தமிழர் பிரச்சினையை ஆராய்வதற்கென நல்லிணக்க ஆணைக்குழு நியமிப்பது என்பதும் பம்மாத்து.
காலத்தை இழுத்தடிக்கவும் இந்தியா வையும் சர்வதேசத்தையும் ஏமாற்றவும் தமிழர்களை ஏமாற்றவும்தான் நல்லிணக்க ஆணைக்குழுவை அரசு நியமிக்கின்றது. இந்த ஆணைக்குழுவை நியமித்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு கிடைக்கும் என்பது கேள்விக்குரிய, நகைப்புக்குரிய விடயமே.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் அரங்கேற்றப்படும் நாடகம்தான் இந்த ஆணைக்குழு என்று உறுதியாகக் கூறலாம்.
இந்த ஏமாற்றுச் சதியில் தமிழ்மக்களை வீழ்த்த முடியாது என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும். இத்தகைய ஏமாற்றுத் திட்டங்களை நிறுத்தி மிகவும் பிரச் சினைக்கு விரைந்து தீர்வு ஒன்றை முன் வைக்க அரசு முன்வரவேண்டும்என்றார் அவர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக