யுத்தம் முடிபடைந்து விட்டதாக அரசாங் கம் அறிவித்து ஒரு வருடமாகிவிட்ட நிலையி லும் காணாமல் போனோர் மற்றும் கடத்தப் பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட் டியுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் காணாமல் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர் கள் கலந்து கொண்டதுடன் காணாமல் போனோரின் புகைப்படங்களையும் தாங்கியிருந்தனர். இதன்போது உறவினர்கள் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட தமது உறவுகளை விடுவிக்கக் கோரி கண்ணீர் மல்கக் கத றியழுததுடன் அவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறும் ஜனாதிபதியை மன்றாடி வேண்டிக் கொண்டனர்.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கருத்துக் கூறிய ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேம ரத்ன, தங்களுக்கு இவ்வாறான விடயங்க ளை வெளிக்கொணர்வதில் அச்சமில்லை எனவும் அச்சப்படுமளவுக்குத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் குறிப்பிட்டார்.
தாம் காணாமல் போனோரைக் கண்டு பிடிப்பதில் தொடர்ந்து இவ்வாறான முயற்சி களை மேற்கொள்வோம் எனவும் எக்காரணம் கொண்டும் இதிலிருந்து பின்வாங்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டார். இலங்கையில் வெடித்துள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமலும் தமிழ் மக்களுக்குச் சமவுரிமையைப் பெற்றுக் கொடுக்காமலும் அரசு செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள முன் னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக் கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனாலும் அங்கு சிரட்டைகளில் மோதிரம் செய்வதற்கே பழக்கப்படுகின்றனர். இதுவா புனர்வாழ்வு? எனவும் உதுல் பிரேமரத்ன கேள்வி எழுப்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக