நவாலி வடக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை கப்பம் கோரி கடத்தப்பட்ட இருவரும் மானிப்பாய்ப் பொலிஸாரால் நேற்று யாழ். சுண்டுக்குளிப் பகுதியில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டனர். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரையும் பொலி ஸார் கைது செய்தனர்.
கப்பப்பணம் செலுத்தச் சென்றபோது இருவரையும், கடத்தப்பட்டவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் வைத்து ஒருவரையுமே பொலிஸார் கைது செய்தனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன ஜெயக்கொடி தகவல் தருகையில் நவாலி வடக்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேந்திரன் (வயது 40) மற்றும் பரராஜசிங்கம் மகேஸ்வரன் (வயது 25) ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் மோட்டார் சைக் கிளில் யாழ். நகருக்கு சென்ற போது இனந்தெரியா தோரால் கடத்தப்பட்டனர்.
இதில் மகேந்திரன் மானிப்பாயில் கராஜ் நடத்திவருவதுடன் மகேஸ்வரன் வாகனங்களுக்கான மின் இணைப்பு வேலைகள் செய்பவர்.இருவரையும் கடத்திச் சென்று இனந் தெரியாத குழுவினர் மகேந்திரனின் குடும் பத்தினரிடம் 50 இலட்சம் ரூபாய் பணமும் மகேஸ்வரினின் குடும்பத்தினரிடம் 30 இலட் சம் ரூபாய் பணமும் கப்பமாக தொலைபேசி மூலம் கோரியிருந்தனர்.
மேற்படி தொகைப் பணத்தை ஒப்படைத்தால் மட்டுமே இருவரும் விடுவிக்கப்படுவர் என்றும் இது தொடர்பில் பொலிஸாரிடமோ படையினரிடமோ முறையிடக் கூடாதெனவும் கடத்தல்காரர்கள் மிரட்டியிருந்தனர்.இந் நிலையில் தமது கப்பத் தொகையை நேற்று முன்தினம் இரவு குறைத்துக் கேட்ட கடத்தல்காரர்கள் 25 இலட்சம் ரூபாய் பெறு மதியான தங்க நகையும் ஒரு இலட்சம் ரூபாய் பணமும் ஒப்படைத்தால் இருவரையும் விடுவிக்க முடியும் என கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அறிவித்தனர்.
அத்துடன் குறித்த தங்க நகைகளையும் பணத்தையும் சங்கானைச் சந்தைக்கு முன்பாக கொண்டுவருமாறும் வரும் போது வாகனத்தின் அடையாளத்தை தெரிவிக்குமாறும் கடத்தல்காரர்கள் தெரிவித்தனர். இந் நிலையில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தையும் ஆட்டோ ஒன்றில் மானிப்பாய் பொலிஸார் கொண்டு சென்றனர்.அப்போது நகைகளையும் பணத்தையும் பெறுவதற்கு கடத்தப்பட்ட மகேந்திரனின் மோட்டார் சைக்கிளில் வந்த கடத்தல் காரர்கள் இரு வரை சங்கானை சந்தைப்பகுதியில் வைத்து மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடத்தப் பட்ட இருவரும் தங்கவைக் கப்பட்டிருந்த சுண்டுக்குளி சுவிட்ச் லேனில் உள்ள வீட்டுக்கு பொலிஸார் சென்றனர்.குறித்த வீட்டில் கடத்தல்காரர் ஒருவர் காவல் இருக்க கடத்தப்பட்ட இருவரும் தனித் தனி அறையில் வாய்,கைகள்,கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர்.உடனடியாக குறித்த இருவரையும் மீட்டதுடன் கடத்தல் காரர்களின் மூன்றாவது நபரையும் பொலிஸார் கைது செய்தனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன ஜெயக்கொடி தெரிவித்தார்.
இதேவேளை இக்கடத்தல் கும்பலுக்கும், நவாலி அட்டகிரியில் வைத்து சிறுவன் கடத்தப் பட்ட சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையயன பொலிஸார் தெரிவித்தனர்
தகவலை உடன் அறிய தந்தமைக்கு நன்றி, அது சரி யாழ்ப்பாணத்தில் நீங்க எங்க இருகிறிங்க ? நானும் யாழ்ப்பாணம்தான் ,
பதிலளிநீக்குமேனன், jaffnakm.blogspot.com