வன்னியில் பன்றிக்கு வைத்த பொறியில் சிறுத்தைப் புலி ஒன்று சிக்கி உயிரிழந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.பொறியில் சிக்கிய சிறுத்தைப் புலி தப்பிக்க முயன்றபோது கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இச் சிறுத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வளர்த்ததாக இருக்கலாம் என செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. வன்னியில் இடம் பெற்ற கடும் யுத்தத்தின் காரணமாக வன விலங் குகள் நடுக்காட்டுக்குள் சென்றதாகவும் அவை தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவித்தன. பொறியில் சிக்கிய சிறுத்தப் புலியை மீட்க வன விலங்கு அதிகாரிகள் வர தாமதமானதாலேயே அது உயிரிழந்ததாக கூறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக