வியாழன், 22 ஏப்ரல், 2010

சிங்கள மக்களின் சிறந்த தலைவரான மகிந்த நாட்டின் சிறந்த தலைவராவாரா?

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசு எந்தவிதமான ஆர்வத்தையும் காட்டுவ தாக தெரியவில்லை.யுத்தம் முடிந்து விட்டது. யுத்தத்தில் அரசுக்கு வெற்றி என்ற நினைப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றி அரசு சிந்திக்காமல் விடுவதற் கான காரணமாக இருக்குமாயின் மீண்டும் ஓர் இனயுத்தம் இந்த மண்ணில் நிகழ்வதற்கான வாய்ப்பு நிறையவேயுண்டு. இந்தக் கருத்து அரசியல் பின்னிலையில் நின்றோ அல்லது அரசியல்வாதிகளின் பிரகடன பாவனையில் நின்றோ நாம் கூறவில்லை.

மாறாக இறைகொள்கை, ஆன்மீகச் சிந்தனை என்பவற்றின் அடிப்படையில் நின்று உலக நியதியை கூறுகின்றோம். இந்நியதியை எவர் நிராகரிக்கின்றாரோ அவர் தோல்வி காண்கிறார் என்பதே தத்துவம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சிறந்த தலைவ ராக சிங்கள மக்கள் கருதுகின்றனர்.

அவர்களின் கருத்து நிலையானது. விடுதலைப்புலிகளைக் தோற்கடித்தவர். சிங்கள மக்களாகிய எமக்கு அச்சமற்ற வாழ்வைத்தந்தவர். நாங்கள் வடக்குக் கிழக்கு எங்கும் செல்லக் கூடிய வழியைக் காட்டியவர்.

எங்கெல்லாம் அரச மரங்கள் நிற்கின்றனவோ அங்கெல்லாம் புத்தபிரானின் சிலையை பிரதிஷ்டை செய்யும் சுதந்திரத்தை ஏற்படுத்தியவர். எனவே அவர் சிறந்த தலைவர் என சிங்கள மக்கள் எண்ணுகின்றனர்.ஆனால் தமிழ், முஸ்லிம் மக்களின் பார்வையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எத்தன்மையினராகக் கருத்தப்படுகின்றார் என்பது இங்கு கவ னிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஏனெனில், மகிந்த ராஜபக்  இந்த நாட்டின் ஜனாதிபதி. அவர் தனித்து சிங்கள மக்களின் தலைவர் அல்ல.

ஆக, இந்த நாடு முழுவதற்கும், தலைவராக இருக்கக் கூடியவர். எல்லா இன மக்களின் மனங்களையும் வெல்லும் போதுதான் நாட்டின் சிறந்த தலைவராக முடியும்.இருந்தும் துரதிர்ஷ்டவசமாக இன்று வரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கள மக்களின் சிறந்த தலைவராகவே இருக்கின்றார். இந்நிலைமையானது இன ஒற்றுமைக்கும் நாட்டின் சமாதானத்திற்கும் ஆரோக்கியமாக அமையமாட்டா?

தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை மக்கள் குறித்தும், ஆட்சி குறித்தும் அச்சமடைந்தவர்களாக இருப்பார்களாயின் நாட்டில் யுத்தம் முடிந்திருந்தாலும் மனப் போராட்டம் முடிபு பெறயில்லை என்றே கூறவேண்டும்.எனவே சிங்கள மக்களின் சிறந்த தலைவராக இருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட் டின் சிறந்த தலைவராக தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இதற்காக அவர் செய்ய வேண்டியது; தமிழ், முஸ்லிம் மக்களும் சிங்கள மக்கள் அனுபவிக் கின்ற சுதந்திரத்தை, உரிமையை வழங்குவதாகும். இதை விடுத்து தனித்து சிங்கள மக்களை மட்டுமே திருப்திப் படுத்துபவராக அவர் இருப்பாராயின், தற்போது அவருக்குக் இருக்கக்கூடிய குரு சந்திரயோகம் எப்படியும் எவராலும் இல்லாமல் போகலாம்.அதன் பின்னர் இதுவரை வென்ற வெற்றிகள் கூட அர்த்தமற்றவையாகிவிடும். சிந்தித்துச் செயற்படுவதே நன்று

thanks valampuri news paper

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!
Get paid To Promote at any Location

உலக நாடுகளின் நேரங்கள்.....