கடத்தல்காரர்கள் இராணுவப் புலனாய் வாளர்கள் எனத் தெரிவித்து அண்மைய சில நாள்களாகப் பழகி வந்ததாகக் கடத்தப்பட்ட வர்களில் ஒருவரான மகேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கராச் உரிமையாளரான மகேந்திரனுடன் கடத்தல் காரர்கள் அண்மைக்காலமாகத் தாம் இரா ணுவப் புலனாய்வாளர்கள் எனத் தெரிவித்து தொடர்பை ஏற்படுத்தினர். இந் நிலையில் கடந்த திங்கட்கிழமை மகேந்திரனுடன் தொடர்பு கொண்ட கடத்தல் காரர்கள் தாம் கொழும்புக்குச் செல்லவுள்ள தாகவும் தமக்குப் பலகாரங்கள் பிடிக்கும் என வும் இருந்தால் கொண்டு வந்து தருமாறும் கேட்டிருந்தனர். இதனால் பலகாரங்களைக் கொண்டு செல்லும் போது தொழில் ரீதியாக நட்பு வைத் திருந்த மகேந்திரன் என்னையும் அழைத்துச் சென்றார்.
அப்போது யாழ்.பிரதம தபாலகத்திற்கு முன்பாக நின்ற கடத்தல்காரர்கள் என்னை அங்கு விட்டுவிட்டு மகேந்திரனை மட்டும் அழைத்துச் சென்றனர். பின்னர் சில மணி நேரத்தில் திரும்பி வந்த மகேந்திரன் என்னை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந் தார். இந் நிலையில் மறுநாள் செவ்வாய்க் கிழமை காலை 6.30 மணிக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மகேந்திரன், இரா ணுவப் புலனாய்வாளர்கள் (கடத்தல்காரர் கள்) வருமாறு அழைத்ததாகவும் அங்கு போவ தற்கு என்னையும் வருமாறு கேட்டார்.
இதற்கமைய மகேந்திரனின் வீட்டிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் யாழ்.நகருக் குப் புறப்பட்டோம். அப்போது யாழ்.நகரில் தரித்து நின்ற கடத்தல்காரர்களில் ஒருவர் என் னை இறக்கி விட்டு மகேந்திரனின் மோட்டார் சைக்கிளில் அவரை மட்டும் அழைத்துச் சென்றார்.
பின்னர் அரைமணி நேரத்தில் மகேந்திர னின் மோட்டார் சைக்கிளில் வந்த கடத்தல் காரர் என்னையும் அழைத்துச் சென்று வீடொன்றில் தங்க வைத்தார்.அந்த வீட்டிற்குள் சென்றபோது கம்பிகள், இரும்புச் சட்டங்கள் காணப்பட்டதுடன் இரத்தக் கறையும் சுவரில் படிந்திருந்தது. அறைக்குள் கொண்டு சென்று சில நிமிடங்களில் பின் பக்கமாக வந்த ஒருவர் எனது கண்களை மூடி துணி ஒன்றைக் கட்டினார்.
பின் இரும்புச் சங்கிலியால் இரண்டு கைகளையும் சேர்த்து வரிந்து கட்டினார். பின்னர் எனது வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைக் கூறுமாறு கேட்டார். எனக்குத் தெரியாது எனக் கூற மிரட்டினார். அதனால் எனது கைத்தொலைபேசியை அவரிடம் வழங்கி அதில் உள்ளதாகத் தெரிவித் தேன். பின்னர் அவர் எனது வீட்டிற்குத் தொடர்பு கொண்டு கப்பம் கோரியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அதன் பின் எனது வாய்க்குள் துணியை வைத்துவிட்டனர் என்றார். இதேவேளை நடந்த சம்பவங்கள் எவையும் தமக்குத் தெரியாது எனக் கடத்தப்பட்டவர்கள் அடைக்கப்பட்ட வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.சம்பவம் இடம்பெற்ற இரவு கூக்குரல் கேட் டதாகவும் தாம் சென்று விசாரித்தபோது எது வும் தெரியவரவில்லை எனவும் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக