தந்திரமாக செயல்பட்டு தப்பிவிடுவதில் குற்றவாளிகள் சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களை கைரேகை மற்றும் பிற அங்க அடையாளங்களை வைத்து கண்டுபிடிப்பது சிரமம். அவர்களை எளிதில் அடையாளம் காண புலனாய்வுக்குழுவினர் புது வழியை கண்டுபிடித்துள்ளனர்.
நுண்ணுயிரிகளான கிருமிகள் குற்றவாளிகளை காட்டிக்கொடுப்பதில் உதவும் என்பதே அந்த கண்டுபிடிப்பு. ஒருவரின் உடலில் பல லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. கண், முக்கு, குடல் என ஒவ்வொரு பகுதியில் வாழும் நுண்ணுயிரிகளும் வெவ்வேறு வகையாகவும், விதவிதமான பண்புகளையும் கொண்டவையாக இருக்கின்றன.
சாதாரண தொடுதலிலும் இந்த கிருமிகள் இடம் பெயருகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு அங்கேயே அழியாமல் நிலைக்கின்றன. அதேபோல் ஒவ்வொரு மனிதனின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளும் வித்தியாசமாக இருக்கின்றன.
எனவே இதைக் கொண்டு புலனாய்வு செய்ய முடியும் என்று கொலரோடா (அமெரிக்கா) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மெய்ப்பித்துள்ளனர். அவர்களது ஆய்வில் 70 முதல் 90 சதவீத அளவில் குற்றவாளிகளை அடையாளம் காணலாம் என்று தெளிவானது.
`பேக்டீரியல் ஜெனிடிக் சிக்னேச்சர்` எனப்படும் இந்த முறை, எளிதில் பயன்தரும் புதிய புலனாய்வு முறையாக எதிர்காலத்தில் வரப்போகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக