அணுசக்தி பாதுகாப்புத் தொடர் பான மாநாட்டில் கலந்து கொள் வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அந் நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா வுடன் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.
இந்தச் சந்திப்பு இன்றும் நாளையும் வாசிங்டனில் இடம்பெறவுள் ளது. இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் மகிந்த அரசுக் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிட்டக் கூடிய அதிக வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால் இனிவரும் காலங்களில் இலங்கையில் ஏற்படக் கூடிய அரசியல் மாற்றங்களில் சர்வதேச சமூகத்தின் சக்தி எவ்வகையானதாக இருக்கப் போகின்றது. மற்றும் அதற்கான சாத்தியங்கள் என்ன என்பது குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்படலாம் என்று கொழும்பில் உள்ள இந்தியத்தூதரக வட்டா ரங்கள் தெரிவித்தன.
இதேவேளை இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகத் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணைச் செயலர் றொபேட் ஓ பிளேக் கருத்துத் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி எப்போதும் கூறியி ருந்தார். அவ்வாறு பெற்றுக் கொள்வதானது இலங்கையின் அரசியல் அமைப்பைத் திருத்துவதற்கு அவருக்கு இடமளிக்கும். பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல் படுத்துவதில் தான் உறுதிப்பாட்டுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த கூறியுள்ளார். இந்த 13-வது திருத்தமானது மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும்.
வட மாகாணம் உட்பட்ட மாகாணங்க ளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக அது அமையும். நல்லிணக்கம் தொடர்பாக எப்போதும் அவர் உறுதிப்பாட்டுடன் இருப்ப தாக நான் நினைக்கின்றேன். அதனை இப் போது முன்னெடுப்பது மிகவும் முக்கியமா னது என்று நான் நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார்
காலம் காலமாக உலகையே ஏமாற்றி வரும் இந்த கொலைவெறி அரசியல் அநாகரிகங்களை எப்போது இந்த உலகம் உணர்ந்து கொள்ளும்? தமிழருக்கு பேரினவாதத்தினால் ஏதாவது நன்மை விளையும் என்பது கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிப்பதற்கு சமம். தம் பிராந்திய நலன்களுக்காக அப்பாவி தமிழரை முழு உலகும் பேரினவாத கொலைக்கரங்களால் அநாதைகளாக அழித்தொழித்து விட்ட பின் கடமைக்காக ஒரு அறிக்கை. அவ்வளவே. இதற்குமேல் எதுவும் நடைபெறப் போவதில்லை.
பதிலளிநீக்குகரிகாலன்