ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூட்டு நடவடிக்கை - த.தே.கூ.-சி.மு.கா. பேச்சு

தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற் காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கி ரஸும் இணைந்து செயற்படவுள்ளன. இது குறித்துப் பேசவருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிஸுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நாவலப்பிட்டியில் மீள் தேர்தல் நடைபெற்ற பின்னர் கொழும்பில் இப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தைகளில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. சிறுபான்மை மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுபான்மை மக்களின் உரிமை களுக்காகக் குரல் கொடுக்கும் போது இணைந்து செயற்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு, முஸ்லிம் காங்கிரஸிடம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமக்கு இந்த அழைப்பை விடுத்ததாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை வர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி யில் மீள் தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததன் பின் னர் கொழும்பில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மீள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ரவூப் ஹக்கீம் தற்போது கண்டியில் பிரசாரங்களை மேற்கொண்டு வரு கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரி வித்துள்ளார்.

ஆளும் கட்சியில் பல பேரினவாத சக்திகள் இயங்கி வருவதாகவும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!
Get paid To Promote at any Location

உலக நாடுகளின் நேரங்கள்.....