சிறியோர் முதல் பெரியோர் வரை சொக்லேட் சாப்பிடுவதென்றால் கொள்ளை ஆசை தான். சமீப காலமாக சொக்லேட் சாப்பிடுவது கூடாது என்றே கூறப்பட்டு வந்தது.
சிறுவர் சாப்பிட்டால் பற்களுக்குக் கூடாது என்பார்கள். பெரியோர் என்றால் கொலஸ்ட்ரோல் வரும் என்று அச்சுறுத்தப்பட்டார்கள். பொதுவாக நீரிழிவு நோயுள்ளவர்கள் இதனைச் சாப்பிடவே கூடாது எனக் கூறப்படுவதுண்டு. இனிப்பு அதிகம் என்பதுதான் இதற்குக் காரணம்.
ஆனால் இப்போது சொக்லேட் பற்றிய மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்திருக்கின்றது. அதுதான், தினமும் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது.
இந்தப் புதிய ஆய்வு இன்று நேற்றல்ல, கடந்த 8 ஆண்டுகளாக லண்டனில் நடத்தப்பட்டு வந்த ஒன்று. 35 வயது முதல் 65 வயது வரை உள்ள 30 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் சுமார் 39 சதவீதமானோருக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படவில்லை. சொக்லேட்டில் உள்ள கோகோ பீன்ஸ் இரத்தத்தில் நைட்ரிக் அமிலத்தை அதிகரிக்க செய்கிறது. இதன்மூலம் இரத்தநாளங்கள் நன்றாகச் செயல்பட வழியேற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே இதயநோய் ஏற்பட வாய்ப்பு இல்லை என லண்டன் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், வழக்கத்தை விட தினமும் 6 கிராம் கூடுதலாக சொக்லேட் சாப்பிடுபவர்களில் 85 சத வீதம் பேருக்கு இதய நோய் பாதிப்பு இல்லை எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அப்படியானால், அதிகளவில் சொக்லேட் சாப்பிடுபவர்களின் இதயம் வலுப்பெறும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை அல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக