தமிழ் மக்கள் எல்லோர் மீதும் நம்பிக்கையையிழந்துள்ளனர். அவர் கள் யாரையும் நம்பத் தயாரில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித் துள்ளார்இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது,
வடக்கு-கிழக்கு மக்களிற்கான அரசியல் தீர்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாகவே நாம் அதிகம் கவனம் செலுத்துவோம்.
வடக்கு-கிழக்கு மக்கள் எமக்கு வாக்களித்தது எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டதனால் தான். தமிழ் மக்களின் அரசியல் தீர்வையும் விரைவான மீள்குடியேற்றத்தையும் நாம் வலியுறுத்துவோம். அரசியல் அமைப்பு திட்டம் தொடர்பாக மக்கள் நம்பிக்கை இழந்ததே மிகக்குறைந் தளவு மக்கள் வாக்களிக்க காரணமாகியது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது அரசுக்கோ வாக்களிப்பது ஆக்கபூர்வமான தல்ல என மக்கள் எண்ணுகின்றனர்.
தமிழ் மக்கள் எல்லோர் மீதும் நம்பிக்கையை இழந்துள்ளனர். அவர்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை. நாம் 13 ஆசனங் களை பெற்றுள்ளோம். மேலும் ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை பெறுவோம்.
தேர்தல் ஆணையகம் சீரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலும் மேலும் சில ஆசனங்களைப் பெற்றிருப்போம். வவுனி யாவிலிருந்து 4 ஆயிரம் இடம் பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அங்கு அவர்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட வில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் பேசத் தயார்
இதேவேளை தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் போட்டியிட்ட தாம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 13 ஆசனங்களை வென்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் தமிழர் பிரச்சினைக் காகவும் அரசியல் தீர்வுத் திட்டமொன்றின் அவசியம் குறித்தும் குரல்கொடுக்கப் போவதாகவும் விரிவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கத் திட்டமொன்றின் அவசியம் விஞ்சி நிற்ப தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதி பதியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எனவும் அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் மீள் குடி யேற்றம் ஆகிய பிரச்சினைகளே பிரதான பிரச்சினைகளாகும் என குறிப்பிட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக