சி.ஐ.டியினர் எனக் கூறி யுவதியை பல வந்தமாக இழுத்துச் சென்று பாலியல் வல்லு றவு புரிந்ததாக தெரிவித்து இருவரை மானிப் பாய் பொலிஸார் கைது செய்தனர்.இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவ தாவது,
வவுனியா முகாமில் வசித்துவந்த சுமார் 20 வயதுடைய பிரஸ்தாப யுவதி நீண்டகாலத் துக்குப் பின் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப் பாணத்துக்கு வந்துள்ளார்.யாழ்ப்பாணத்துக்கு வந்த அவர் கட்டுடை மானிப்பாயில் உள்ள தனது உறவினர் களுக்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
இந் நிலையில் யுவதியை அழைத்துச் செல்ல உறவினர்கள் வந்தவேளை யாழ். பஸ் நிலையத்துக்கு வந்த இருவர் தம்மை சி.ஐ.டியினர் என அறிமுகப்படுத்தி விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து அவ் யுவதியை அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து திகிலடைந்த உறவினர் கள் கட்டுடைப் பகுதி இளைஞர்களிடம் தெரி வித்துள்ளனர்.
சி.ஐ.டியினர் எனத் தெரிவித்த இளைஞர் களை அடையாளம் கண்ட உறவினர்கள் இளைஞர்களின் உதவியுடன் இரவிரவாக தேடுதல் மேற்கொண்டு மறுநாள் கட்டுடைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த இளைஞர்களை மடக்கி பிடித்ததுடன் யுவதி யையும் மீட்டனர்.
பிடிக்கப்பட்டபோது இளைஞர்களில் ஒரு வர் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும், மற்றையவர் கடுமையாக தாக்கப்பட்டதாக வும் தெரிவிக்கப்பட்டது.இவர்கள் இருவரும் மானிப்பாய் பொலி ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரு கின்றனர். மருத்துவப் பரிசோதனைக்காக யுவதியும் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நண்பரே! HUCK பண்ணுவது எப்படி என்பது புரியவில்லை... தயவு செய்து மீண்டும் ஒரு பதிவில் விளக்கவும்...
பதிலளிநீக்கு