இலங்கை கடற்பரப்பில் சீனாவில் பிரசன் னம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்திய விமானப் படையினருக் கான தளமொன்றை வன்னியில் அமைப்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கச்சதீவு-இந்தியா தொடர்பான பிரச்சி னையில் சீனாவின் தலையீடு தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வன் னியில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் பயன்படுத்தப்பட்டு வந்த இரணைமடு விமா னத் தளத்தை இந்திய விமானப் படையினர் பயன்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதற்கமைவாக இந்திய உயரதிகாரிகள் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்குமிடையில் சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்துத் தொலைத்தொடர்பு வச திகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இரணைமடு உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அண்மையில் ஏ-9 வீதியின் கிழக்குப் பகு தியில் சில கிராமங்களில் மக்கள் மீளக்குடிய மர்த்தப்படவுள்ளதாக அரச அதிபர் அறிவித்த போதும் இப் பகுதியில் மக்கள் குடியமர்த்தப்படாமைக்கு இதுவே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறான தகவல்கள் வெளி யாகியுள்ள போதும் குறிப்பாக வடக்கில் பலாலி விமான நிலையம் உட்பட வன்னியில் விமான ஓடுதளம் மற்றும் விமானப் படைத் தளம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் இந்தியாவுக்கு வழங்கியிருப்பதன் அடிப்படையிலேயே இந்திய வான்படை அதிகாரிகள் மற்றும் வான் படை நிர்மாணத்துறைப் பிரிவினர் நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ள போதும் இலங்கை -இந்திய தரப்புக்கள் உத்தியோகபூர்வமாக எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக