அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் இலங்கை அரசு பெரும் வெற்றியைப் பெற்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை அவர்கள் முன்வைக்க வேண்டும் என்ற எமது கொள்கைகளில் மாற்றங்கள் எதுவும் இல்லை என நோர்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நோர்வேயின் நாடாளுமன்றத்தில் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோனாஸ் கார்ஸ்ரோர் இனால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மையில் நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து இலங்கையில் புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் நோர்வேயின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படும் என்ற கருத்துக்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தமிழ் மக்களின்பிரச்சி னைகளுக்கு ஒரு அரசியல் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற எமது கொள்கைகளில் மாற்றங்கள் இல்லை. விடுதலைப்புலிகள் பலம் தற்போது முற்றாக இல்லாது போயுள்ளது. ஜனாதிபதி ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலிலும் தற் போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் வெற்றி பெற்றுள் ளார்.
நாம் முன்னர் ஜனாதிபதிக்குத் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் கூட தமிழ் மக்களுக் கான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தோம். அவ்வாறான நிலைமைகளில் நோர்வே தனது உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்திருந்தோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பரே! HUCK பண்ணுவது எப்படி என்பது புரியவில்லை... தயவு செய்து மீண்டும் ஒரு பதிவில் விளக்கவும்...
பதிலளிநீக்கு