கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை மறந்து விடவே இலங்கை விரும்புவதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். தமிழ், சிங்களப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு யாலிய விக்கிரம சூரிய வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் தந்திரோபாயங்கள் மற்றும் பொருளாதார முக்கியத் துவம் ஆகியவற்றை உலக நாடுகள் தற்போது ஏற்றுக் கொண்டுள் ளன.பழையவற்றை மறந்து புதிய ஓர் சகாப்தத்தை நோக்கிச் செல்ல வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. அமெரிக்காவில் வாழும் இலங்கை யர்கள் ஒரே சமூகமாக அணி திரள வேண்டும்.
அண்மையில் நடைபெற்ற 2 முக்கியமான தேர்தல்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வெற்றி கிட்டியுள்ளதாகவும் அதன் மூலம் மகிந்த சிந்தனைகளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளமை புலப்படுவ தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா இறுக்கமாக இருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரின் மேற்கண்ட கருத்து இலங் கை அரசின் உயர்மட்ட ஆலோச னையில் வெளியிடப்பட்டதாக அரசி யல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதேவேளை இலங்கை அரசு மீதான போர்க் குற்ற விசாரணை யை அமெரிக்கா முன்னெடுப்ப தைத் தடுப்பதில் இலங்கை அரசு பல்வேறு உபாயங்களைக் கையாண்டு வருவ தாகவும் ராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக