எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி தென் ஆபிரிக்காவில் ஆரம்பமாக உள்ள உலககிண்ண கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேவிட் பெக்கம் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி ஏ.சி.மிலன் நகரில் நடைபெற்ற கால் பந்து போட்டியில் ஏ.சி.மிலன் அணிக்காக களமிறங்கிய பெக்கம், கோல் அடிக்க முயற்சித்த போது, காலின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெக்கமிற்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதுவே அவர் போட்டியில் பங்கு பற்றாமைக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலககிண்ண கால் பந்து தொடரில் தொடர்ந்து 3 முறை விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக