உலகில் குள்ளமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பிங் பிங் (வயது 21) நேற்று மரணமானார். இத்தகவலை பிரிட்டனின் கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனா நாட்டைச் சேர்ந்த பிங்பிங் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதற்காக இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிங் பிங்கின் உயரம் ஆக 74.6 சென்டி மீட்டர் (2 அடி 5 அங்குலம்) மட்டுமே.
கடந்த ஞாயிறன்று இஸ்தான்புவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றிலும் இவர் கலந்து கொண்டார். அங்கு வந்திருந்த, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகத்தின் அதி உயர்ந்த மனிதரான சுல்தான் கோசனுடன் இவர் உரையாடி மகிழ்ந்தார்.
இவரது திடீர் மறைவு சீன நாட்டினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. _
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக