இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இலங் கைக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒரு வரைய றைக்கு அப்பால் இலங்கைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என வும் இந்தியா, சீனா உட்பட இலங்கைக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகைப் பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக் கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு முடிபெடுத்திருப்பது தொடர்பில் இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அணிசேரா நாடுகள் பான் மூனுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அணிசேரா நாடுகள் அனுப்பி வைத்துள்ள இந்த எதிர்ப்புக் கடிதத்திற்கு ஆதரவு வழங்குவ தாக பகிரங்கமாக அறிவிக்கவும் இல்லை, இலங்கைக்கு ஆதரவாக தனது கருத்தினை வெளியிடவும் இல்லை.
இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணைகள் விடயத்தில் மேற்குலகம் தற்போது மிகுந்த சிரத்தைக் காண்பிப்பதனால் இந்த விவ காரத்தில்தான் இனிமேலும் இலங் கைக்கு ஆதரவளிப்பதாக அறிவி த்து மேற்குலகினைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் இந் தியா மிகுந்த அவதானமாகச் செயற்படுகின்றது. இது இவ்வாறிருக்க இலங்கை க்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த பல அணிசேரா நாடுகளே ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கான கடிதத் தில் கையயழுத்திடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைக்கு மிகவும் நெருக்கமான நாடான லிபியாவின் பேச்சாளர் ஒருவரிடம் போர்க் குற் றங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்காமல் அந்தக் கேள்விக்கான பதிலை இலங்கையிடமோ அல்லது ஐ.நா விடமோ கேட்கும்படி கூறி நழுவி யுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக