' தேசிய வீர மாணவர்களுக்கான விருது' நிகழ்வு இன்று பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் மானிப்பாய் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சின்னராசா தனன்சிகா என்ற தமிழ் மாணவிக்குத் தங்க விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
தனது உயிரை துச்சமென மதித்து உயிராபத்தை எதிர்நோக்கிய மாணவர்களுக்குத் தக்கசமயத்தில் உதவிபுரிந்த மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேசிய வீர மாணவர்களாக கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.
இரண்டாவது தேசிய வீர மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வே இன்று நடைபெற்றது.
உக்கிரமாக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், செல் தாக்குதல்களுக்கு மத்தியில், பதுங்குக் குழிக்குள் சிக்கிக்கொண்ட 11வயது மாணவரை பேராபத்திலிருந்து காப்பாற்றியமைக்காகவும் மேலும் சிலரை உயிராபத்திலிருந்து காப்பாற்றியமைக்காவும் இந்த விருது மேற்படி மாணவிக்கு வழங்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக