ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்தின் நுழைவாயிலில் சிங்களவர்கள் கூடி நின்று அங்கு செல்லும் தமிழர்களை நிழற்படம் எடுத்து அச்சுறுத்துவதாகத் தெரிய வந்துள்ளது.
தமிழர் மனித உரிமைகள் நடுவகத்தின் பொதுச் செயலாளர் கிருபாகரன் இது குறித்துத் தகவல் வெளியிட்டார். இம் மாதம் 12 ஆம் திகதி ஐக்கியநாடுகள் மனித உரிமைச் சபையின் அமர்வில் கலந்து கொள்ளத் தான் சென்றவேளை தன்னைச் சிங்க ளத்தில் நிந்தித்ததாகவும் தன்னை அவர்கள் நிழற்படம் பிடித்தார்கள் என்றும் கிருபாகரன் குறிப்பிட்டார்.
அந்தச் சிங்களவர்கள் ஜெனீ வாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உட்பட்ட நிலையங்களின் சாரதிகளென்றும் அவர் குறிப்பிடுகின்றார். அந்தச் சமயத்தில் பிடிக்கப்பட்ட நிழற்படத்தைப் பிரசுரித்துக் கொழும்பில் இருந்து வெளிவரும் திவயின நாளேட்டில் தன்னை அவ தூறு செய்யும் விதமான செய்தி ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது என்றும் கிருபாகரன் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் அமர்வுகளில் தான் கலந்து கொள்வதைத் தடுக்கும் முயற்சியே அதுவென்று கிருபாகரன் மேலும் கூறினார்.
இங்க ஒரு சிங்களவனும் ஒன்டும் புடுங்கேலாது? எதுக்கு இந்த வதந்தி? வெளிநாடுகளை பொறுத்த வரை சிங்களவன் தமிழனுக்கு அடி பணிஞ்சு போய்தான் ஆகவேண்டும்! இங்கு வாழுகின்ற சிங்களவர்கள் எம்முடன் முறைத்தால் அடி பயங்கரமாக இருக்கும்!
பதிலளிநீக்கு