எனது வாழ்க்கையில் 100 வயது வரை வாழ்ந்தவர்களை நான்காணவில்லை. எனது கிராமத்தில் இருந்தவர்கள் யாரும் அவ்வாறு நீண்டகாலம் வாழ்ந்ததில்லை நான்தான் முதல்தடவையாக அவ்வாறு வாழ்கிறேன். எனவே எனது கிரா மத்துக்குச் சென்று அதனைக் கொண்டாட விரும்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து தற்போது கொழும் பில் தங்கியுள்ள 99 வயது நிரம்பியருமதி அருளம்மா தம்பிராசா என்ற தமிழ்த் தாய்.
வன்னியில் போர் நடைபெற்ற போது ஒவ்வொரு நிமிடமும் பயங்கரமாகவே நகர்ந் தது. எல்லாப்பக்கமும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. நாம் உயிர்தப்புவோம் என எண்ணவில்லை என வன்னியில் நடைபெற்ற போரில் உயிர் தப்பிய 99 வயது நிரம்பிய அருளம்மா தம்பிராசா, ஐ.ஆர்.ஐ.என். செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்ததாக அது தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வருடம் இந்த நேரம் வன்னியில் நடைபெற்ற போரில் சிக்கியிருந்த பல ஆயிரம் பொதுமக்களில் அருளம்மா தம்பிராசாவும் (99 வயது) ஒருவர் அரசு படைகளுக்கும் விடு தலைப்புலிகளுக்குமிடையில் நடைபெற்ற மோதல்களில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தன் நகருக்கு அண்மையான கிராமமான நவஜீ வனம் பகுதியை கடந்தவருடம் ஜனவரி மாதம் மோதல்கள் அண்மித்தபோது அருளம்மா வின் குடும்பம் விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டு பிரதேசத்தின் ஆழமான பகுதிக்கு இடம் பெயர்ந்திருந்தது. அருளம்மாவை அவரின் மகன்களும் பேரப் பிள்ளைகளும் கதிரையில் வைத்து தூக்கி சென்றிருந்தார்கள். 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம் பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களுக்கு அருளம்மா தனது குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.
அவர் தற்போது கொழும்பிலுள்ள தனது உறவினர்களுடன் வாழ்ந்துவருகிறார். போர் நடைபெற்ற போது ஒவ்வொரு நிமிடமும் பயங்கரமாகவே நகர்ந்தது. எல்லாப்பக்க மும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. நாம் உயிர் தப்புவோம் என எண்ணவில்லை. அங்கு ஒவ்வொரு வினாடியும் ஒரு வாழ்நாளாகவே நகர்ந்தன என அருளம்மா தெரிவித்திருந்தார்.
அன்றைய பயங்கர அனுபவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எனது மகன்கள் என்னை தூக்கிவந்தனர் ஒரு இடத் தில் சொற்பநேரமே எம்மால் தங்கமுடிந்தது. அது மிகவும் பயங்கரமான காலம். உணவை பெறுவதும் காலைக்கடன்களை முடிப்பதும் கடினமாகவே இருந்தது. இதன் போது உயி ரையிழக்கவும் நேரலாம் என்ற அச்சங்கள் ஏற்பட்டிருந்தன.
கடவுளின் கருணையால் நான் தற்போது இங்கு இருக்கிறேன். அங்கிருந்து எவ்வாறு வெளியேறுவது என எமக்குத் தெரியவில்லை. எல்லாப்பக்கமும் மக்கள் அச்சத்துடன் ஓடிக் கொண்டிருந்தனர். மிகப்பெரும் குண்டு வெடிப்பு கள் நிகழும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் எனது கண்களை மூடிக்கொண்டேன்.
அது ஒரு கெட்டகனவு. எனது வாழ்வில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. நான் எனது 60ஆவது வயதுகளில் பேரப்பிள்ளைகளைக்கண்டபோதே போர் ஆரம்பமாகியிருந்தது. என்னால் கற்பனை செய்யமுடியாத நிகழ்வுகளை எல்லாம் நான் கண்டேன் பல மரணங்களையும், பேரழிவையும் கண்டேன். எனது கிராமத்திற்கு திரும்பவும் செல்லலாம் என அதிகாரிகள் கூறியபோது நாம் உடனடியாக திரும்பிச்செல்ல விரும்பவில்லை.
எனது கிராமத்தில் என்ன எஞ்சியுள்ளன என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. எமது வீடு அழிவடைந்துள்ளது. அங்கு எல்லா இட மும் கண்ணிவெடிகள் உள்ளன. நான் ஓய் வெடுக்க வேண்டுமென எனது பிள்ளைகள் விரும்புகின்றனர்.
எனது வாழ்க்கையில் 100 வயது வரை வாழ்ந்தவர்களை நான்காணவில்லை. எது கிராமத்தில் இருந்தவர்களில் யாரும் அவ் வாறு நீண்டகாலம் வாழ்ந்ததில்லை. நான்தான் முதற்தடவையாக அவ்வாறு வாழ்கிறேன். எனவே எனது கிராமத்திற்குச் சென்று அதனை நான் கொண்டாட விரும்புகிறேன்.எனது கிராமத்திற்குச் சென்று முன்னரை போல அமைதியாகவும் கவலைகள் இன்றியும் வாழவே நான் விரும்புகிறேன். இதுதான் எனது கனவு என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக