மேரி ஜொசப்பின் எனும் அமெரிக்கப் பெண்மணி தனது 114 ஆவது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் கனடாவில் 1895ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி பிறந்தவர்.
1923ஆம் ஆண்டு இவர் வோல்டர் என்பவரை மணந்து கொண்டார். இவரது கணவர் 1967 ஆம் ஆண்டு மரணமானார். இவருக்கு இரண்டு மகன்களும் எட்டுப் பேரப்பிள்ளைகளும, 13 கொள்ளுப் பேரர்களும் உளர்.
இவரே உலகின் இரண்டாவது அதி வயது கூடிய பெண்மணியாவார். முதலாவது வயது முதிர்ந்த, ஜப்பானைச் சேர்ந்த பெண்மணி, இவரைவிட 7 நாட்களே மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் மற்றுமொரு 114 வயது பெண்மணியான நேவா மொரிஸ் என்பவரும் காலமானார். இவர் 1895 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி பிறந்தவர்.
பிரான்ஸைச் சேர்ந்த யூஜின் பிளான்சார்ட் மூன்றாவது அதி வயது கூடிய பெண்மணியாகக் கருதப்படுகின்றார். இவர் 1896ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி பிறந்தவர்.
அமெரிக்காவில் சுமார் 96,000 பேர் 100 வயதைத் தாண்டியும் வாழ்ந்து கொண்டிருப்பதாக கின்னர்ஸ் உலக சாதனை அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக