புதன், 24 மார்ச், 2010
முதன் முறையாக வலிகாமம் வலயக் கல்வி பாடசாலை பெண்கள் உதைபந்தாட்டப் போட்டி
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையில் முதல் முறையாக இடம் பெற்ற பெண்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மானிப்பாய் மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம் கொழும்பு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரார் மகேஸ்வரன் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டது.
மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் மானிப்பாய் மகளிர் கல்லூரியும் மல்லாகம் குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் விளையாடின.
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின எனினும் முதல் பாதி ஆட்டம் வரை இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது. இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற்காக சம நிலை தவிர்ப்பு உதைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து முதல் இரு கோல்களை குளமங்கால் பாடசாலை பெற்றுக் கொண்ட போதிலும் அடுத்து வந்தவாகள் கோல்கள் அடிக்கத் தவறிவிட்டார்கள் மானிப்பாய் மகளிர் கல்லூரியில் முதல் மூன்று பேரும் கோல்கள் பெறாது பந்துகள் தடுக்கப்பட்ட போதிலும் இறுதியாக வந்த இருவரும் கோல்கள் பெற்றதைத் தொடர்ந்து முதல் ஜந்து உதைகளில் இரு அணிகளும் தலா இரண்டு உதைகளை கோல்களாகப் பெற்று சமநிலையில் மீண்டும் காணப்பட்டார்கள்.
இந் நிலையில் மீண்டும் இரு அணிகளில் இருந்தும் ஒவ்வொருதர் கோல்கள் பெற விடப்பட்ட போதிலும் குளமங்கால் வீராங்கனை பந்தை வெளியால் அடித்தார் மானிப்பாய் மகளிர் கல்லூரி வீராங்கனை அடித்த பந்து களமங்கால் கோல்காப்பாளரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனை மத்தியஸ்தார் முதலிலேயே கோல்காப்பாளர் நகர்ந்து விட்டார் என அறிவித்து மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு வழங்கியதைத் தொடர்ந்து மானிப்பாய் மகளிர் கல்லூரி அணி ஒரு கோலை பெற்றுக் கொண்டது.
இதனைத்தொடர்ந்து நிலையில் மானிப்பாய் மகளிர் கல்லூரி 03க்கு 02 என்ற கோல் கணக்கில் மல்லாகம் களமங்கால் மகா வித்தியாலயத்தை வெற்றி பெற்று அமரார் மகேஸ்வரன் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக