வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே முன்னாள் யாழ்ப்பாணம் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பிணர் அமரர் மகேஸ்வரன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான முதல் தடவையாக இடம் பெற்ற பெண்களுக்கான பத்து ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டியில் சுஜிந்தினியின் ஹற்றிக் சாதனையுடன சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இறுதி ஆட்டத்தில் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியும் அளவெட்டி அருணோதயா கல்லூரியும் மோதிக்கொண்டன முதலில் துடுப்பெடுத்தாடிய விக்டோரியாக் கல்லூரி 07 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது றதீபா32, பிரணவி ஆட்மிழக்காது 27, ரஜிதா சுகந்தி தலா 13 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்கள்.
அருணோதயாக் கல்லூரியைச் சேர்ந்த பிரியா 02 ஓவாகள் பந்து வீசி 19 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டு;க்களையும் காவேரி சதீஸ்கா நதீபனா தலா 02 ஓவர்கள் பந்து வீசி முறையே 17,18,25, ஓட்டங்களைக் கொடுத்து தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
110 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அருணோதயாக் கல்லூரி 10 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது தர்மின் 27, நதீபனா 11 காவேரி 10 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்கள்.
விக்டோரியாக் கல்லூரியைச்சேர்ந்த சுஜிந்தினி 02 ஓவர்கள் பந்து வீசி 08 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் இவர் தனது முதலாவது ஓவரின் 04,05,06 ஆவது பந்துகளில் தொடர்ந்து விக்கெட்டுக்களை கைப்பற்றி இந்த சாதiனையை ஏற்படுத்தியுள்ளார்
மற்றும் பானுப்பிரியா 02 ஓவர்கள் பந்து வீசி 05 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கோபிகா 02 ஓவர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் சஜிதா 02 ஓவர்கள் பந்து வீசி 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்
போட்டிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மசேஸ்வரன் ஸ்ரீகஜன் ஊட்பட மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள் போட்டியில் சிறந்த துடுப்பாட்டம் மற்றும் ஆட்டநாயகியாக விக்டோரியாக் கல்லூரியைச்சேர்ந்த பானுப்பிரியாவும், சிறந்த பந்து வீச்சாளராக விக்டோரியாக் கல்லூரியைச்சேர்ந்த சுஜிந்தினியும் சிறந்த களத்தடுப்பாளராக அருணோதயாக் கல்லூரியைச்சேர்ந்த நதீபனாவும்,தெரிவு செய்யப்பட்டதுடன் சுற்றுப் போட்டியில் முதல் 106 ஓட்டங்களைப் பெற்ற மானிப்பாய் மகளிர் கல்லூரி வீராங்கனை சர்மிலா விசேட பரிசில் வழங்கியும் கௌரவிக்கப்படடனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக