யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 25- வது பட்டமளிப்பு விழா இன்று முதல் மூன்று நாள்களுக்குக் கோலாகலமாக நடைபெறவுள்ளது. நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட கைலாசபதி கலையரங்கில் இப் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் 2005,2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்த 3 ஆயிரத்து 972 பேர் பட்டம் பெறவுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரி யர் ம.சிவசூரிய தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பில் ஒவ்வொரு நாளும் 15 அமர் வுகள் நடைபெறும். இப் பட்டமளிப்பு விழாவில் கலாநிதி, முது கலைமாணி, இளமாணி, பட்டப்பின் டிப்ளோமா ஆகிய பட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
சுமார் ஐந்து வருட கால இடைவெளியின் பின் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை இப் பட்டமளிப்பு விழாவில் சமுதாய பிரதேச திட்டமிடல், தொல்லியல் ஆகியவற்றுக்கான பட்டங்கள் இன்றுமுதல் முறையாக வழங்கப்படவுள்ளது.
இதேவேளை இப் பட்டமளிப்பு விழா சிறப் புற நடைபெற முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை வாழ்த் துத் தெரிவித்துள்ளார். இவரது பதவிக் காலத்தில் ஆறு பட்ட மளிப்பு விழாக்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக