இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூன், நிபுணர் குழுவை அமைத்து அதன் அறிக்கையைப் பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தால் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீனாவும் ரஷ்யாவும் எச்சரித்துள்ளன.
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகம் நிய மிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்குச் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இந்த இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கின்றன. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாய கம் அமைக்க உள்ள இந்தக் குழு தொடர்பில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்க ரஷ்யப் பிரதமர் விளாடீமீர் புட்டின் மற் றும் சீனத் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத்தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.
பான் கீ மூன், குறித்த நிபுணர்கள் குழுவை அமைத்து அதன் அறிக்கையைப் பாது காப்புச் சபையில் சமர்ப்பித்தால் சீனாவும் ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனைத் தடுக்கும் எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
அதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இந்தச் செயற்பாடு குறித்து அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் எகிப்து ஜனாதிபதி யஹாஸ்னி முபாரக்கும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ur service is good thodarnthu muyarchchikka enathu vaazhththukkal....
பதிலளிநீக்கு