மனிதனுக்கு 35 வயது முடிவில் இளமைப் பருவம் முடிந்து 36 முதல் நடுத்தர வயது ஆரம்பமாகிறது. அதே நேரத்தில் 58 வயதில் முதுமை தொடங்குகிறது என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் மனிதனின் நடுத்தர வயது மற்றும் முதுமை எப்போது தொடங்குகிறது என்பதில் சர்ச்சை நிலவி வருகிறது. இதனையடுத்து இங்கிலாந்தில் ஆய்வு ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
கெந்த் பல்கலைக்கழகப் பேராசிரியர் டொமினிக் அப்ராம்ஸ் ஐரோப்பிய நாடுகளின் அனுசரணையுடன் இந்த ஆய்வை நடத்தினார். எப்போது இளமை முடிகிறது? முதுமை எப்போது ஆரம்பமாகிறது என்பது குறித்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதன்போது, 35 வயதில் இளமைபருவம் முடிவடைந்து 36 முதல் நடுத்தர வயது ஆரம்பமாகிறது என்றும் அதே நேரத்தில் 58 வயதில் முதுமை தொடங்குகிறது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
இது பெண்களைவிட ஆண்களுக்கு 2 வயதுக்கு முன்பே தொடங்கி விடுகிறது. மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இது சற்று வித்தியாசப்படுகிறது என்றும் கூறப்பட்டது.
நோர்வே உள்ளிட்ட சில நாடுகளில் இளமை 34 வயதிலேயே முடிகிறது என்றும் 57 வயதில் முதுமை தொடங்குவதாகவும் மேற்படி ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக